Home காலை உணவு ருசியான சிறுதானிய பாஸ்தா இப்படி செய்து பாருங்க! இதன் சுவையே தனி!

ருசியான சிறுதானிய பாஸ்தா இப்படி செய்து பாருங்க! இதன் சுவையே தனி!

தினமும் இட்லி, தோசை, பூரி, பொங்கல் என செய்து அலுத்து விட்டதா? உங்களுக்கும் உங்க குழந்தைகளுக்கும் டிஃபரென்ட்டா எதையாவது செய்யலாம்னு யோசித்தால் அப்போ உங்களுக்கான பதிவா தான் இது இருக்கும். உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு பாஸ்தா பிடிக்குமா?அப்படியென்றால் இன்று உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு பாஸ்தா செய்து கொடுங்கள். இந்த சிறுதானிய பாஸ்தாவை எப்படி சுலபமாக மற்றும் சுவையாக செய்வது இன்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம். பாஸ்தாவின் தாயகமான இத்தாலியில், மூன்று வகைகளில் இது பரிமாற‌பட்டாலும், உலக அளவில் நூற்றுக் கணக்கான வடிவங்களில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெயர்களில் உலா வருகிறது. ‘பெரும்பாலும் மைதா மாவைப் பயன் படுத்தித்தான் பாஸ்தாவும் தயாரிக்கப் படுகிறது.

-விளம்பரம்-

நூடுல்ஸ் போல பாஸ்தாவும் ரிலாக்ஸ் டைமில் இப்போது அதிக அளவு பயன்படுத்தப்படுகிறது. மிக விரைவாக இது செய்யப்படுவதால் சீக்கிரமாக செய்யப்படும் ஒரு உணவு வகையாக பாஸ்தா இருக்கிறது. என்ன தான் குழந்தைகள் இவற்றை விரும்பி சாப்பிட்டாலும், இது போன்ற உணவுகளை குழந்தைகளுக்கு அடிக்கடி சமைத்து கொடுக்க மனம் வராது. ஆரோக்கியமற்ற உணவுகளை கொடுக்கிறோமே என்ற குற்ற உணர்வு எல்லா தாய்மார்களுக்கும் இருக்கும். இது போன்ற உணவுகளையும் ஆரோக்கியமாக மாற்றலாம். எப்படி என்று யோசிக்கிறீர்களா? மைதாவால் செய்யப்பட்ட பாஸ்தாவுக்கு பதிலாக கோதுமை அல்லது சிறுதானியங்களை கொண்டு தயாரிக்கப்பட்ட பாஸ்தாவை பயன்படுத்தலாம். மேலும் இதனுடன் காய்கறிகளை அதிகம் சேர்த்துக் கொடுக்கும் பொழுது அது ஊட்டச்சத்து நிறைந்த உணவாகவும் மாறிவிடும்.

Print
No ratings yet

சிறுதானிய பாஸ்தா | Millets Pasta Recipe In Tamil

தினமும் இட்லி, தோசை, பூரி, பொங்கல் என செய்து அலுத்து விட்டதா? உங்களுக்கும் உங்க குழந்தைகளுக்கும் டிஃபரென்ட்டா எதையாவது செய்யலாம்னு யோசித்தால் அப்போ உங்களுக்கான பதிவா தான் இது இருக்கும். உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு பாஸ்தா பிடிக்குமா?அப்படியென்றால் இன்று உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு பாஸ்தா செய்து கொடுங்கள். இந்த சிறுதானிய பாஸ்தாவை எப்படி சுலபமாக மற்றும் சுவையாக செய்வது இன்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம். என்ன தான் குழந்தைகள் இவற்றை விரும்பி சாப்பிட்டாலும், இது போன்ற உணவுகளை குழந்தைகளுக்கு அடிக்கடி சமைத்து கொடுக்க மனம் வராது. இது போன்ற உணவுகளையும் ஆரோக்கியமாக மாற்றலாம். எப்படி என்று யோசிக்கிறீர்களா? மைதாவால் செய்யப்பட்ட பாஸ்தாவுக்கு பதிலாக கோதுமை அல்லது சிறுதானியங்களை கொண்டு தயாரிக்கப்பட்ட பாஸ்தாவை பயன்படுத்தலாம்.
Prep Time15 minutes
Active Time15 minutes
Total Time30 minutes
Course: Breakfast
Cuisine: Indian
Keyword: Millets Pasta
Yield: 3 People
Calories: 158kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

பாஸ்தா செய்வதற்கு :

  • 1/4 கப் தினை மாவு
  • 1/4 கப் கம்பு மாவு
  • 1/4 கப் சோள மாவு
  • 1/4 கப் கேழ்வரகு மாவு
  • 1/2 கப் கோதுமை மாவு
  • 2 முட்டை
  • உப்பு தேவையான அளவு

மசாலா செய்வதற்கு :

  • எண்ணெய் தேவையான அளவு
  • 1 டேபிள் ஸ்பூன் நறுக்கிய பூண்டு
  • 1/4 கப் மஞ்சள் குடைமிளகாய்
  • 1/4 கப் பச்சை குடைமிளகாய்
  • 1 கேரட்
  • வெங்காயத்தாள் சிறிதளவு
  • 2 டேபிள் ஸ்பூன் தக்காளி சாஸ்
  • 2 டேபிள் ஸ்பூன் சில்லி சாஸ்
  • 1 டீஸ்பூன் சோயா சாஸ்
  • உப்பு தேவையான அளவு

செய்முறை

  • முதலில் பூண்டு, குடைமிளகாய், வெங்காயத்தாள், கேரட் ஆகியவற்றை அலசி விட்டு நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • பின் கம்பு மாவு, திணை மாவு, சோள மாவு, கேழ்வரகு மாவு, கோதுமை மாவு ஆகியவற்றை ஒரு பவுளில் எடுத்து அதனுடன் முட்டை மற்றும் உப்பு சேர்த்து நன்கு சப்பாத்தி மாவு பதத்திற்கு நன்கு பிசைந்து கொள்ளவும்.
  • பின் பிசைந்த மாவை மூடி ஒரு மணி நேரம் அப்படியே வைக்கவும். அதன்பிறகு அதை எடுத்து சிறு சிறு துண்டுகளாக நீளவாக்கில் தேய்த்து நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து தண்ணீர் ஊற்றி அது நன்றாக கொதித்ததும் எண்ணெய் சேர்த்து நறுக்கி வைத்துள்ள பாஸ்தாவை சேர்த்து ஐந்து நிமிடங்கள் கொதிக்க விட்டு எடுத்துக் கொள்ளவும்.
  • ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் பூண்டு, வெங்காயத்தாள் சேர்த்து வதக்கவும். பின் குடைமிளகாய், கேரட் சேர்த்து வதக்கவும்.
  • பின் சோயா சாஸ், தக்காளி சாஸ், சில்லி சாஸ் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். தண்ணீர் கொதித்ததும் அதில் நாம் வேக வைத்துள்ள பாஸ்தாவை சேர்த்து இரண்டு நிமிடங்கள் வேக வைக்கவும்.
  • இறுதியாக வெங்காயத்தாள் சேர்த்து நன்கு கலந்து அடுப்பை அணைத்து விடவும். அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான சிறுதானிய பாஸ்தா தயார்.

Nutrition

Serving: 500g | Calories: 158kcal | Carbohydrates: 7.2g | Protein: 11g | Fat: 4.2g | Saturated Fat: 1.7g | Sodium: 8mg | Potassium: 195mg | Fiber: 5.8g | Vitamin A: 9IU | Vitamin C: 85mg | Calcium: 8mg | Iron: 3mg

இதனையும் படியுங்கள் : வீட்டில் சிறுதானியம் இருந்தால் போதும் பிரமாதமாக இப்படி சிறுதானிய லட்டு செய்யலாம் நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க!