Advertisement
அசைவம்

பூண்டு கனவா மீன் மசாலா இப்படி செய்து பாருங்கள்! நாவில் எச்சி ஊறும்!!!!

Advertisement

ஒரே மாரி மீன் குழம்பு, அல்லது மீன் வறுவல் செய்து சாப்பிடாமல் இது போன்று ஒரு முறை கார்லிக் ஸ்க்விட் மசாலா செய்து சாப்பிட்டு பாருங்க அட்டகாசமான சுவையில் இருக்கும். அசைவ பிரியர்களுக்கு மீன் என்றாலே இஷ்டம் அதுவும்  ஸ்க்விட் என்றாலே சொல்லவே வேண்டாம் , கார்லிக் ஸ்க்விட் மசாலா செஞ்சி அத்துடன் சுட சுட சாதம் செஞ்சி சாப்பிட்டு பாருங்க மீண்டும் மீண்டும் கேட்டு கேட்டு சாப்பிடுவாங்க. வாருங்கள் இதனை எவ்வாறு சரி சமைப்பது என்பதை இந்தப் பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

பூண்டு கனாவா மீன் மசாலா | Garlic Squid Curry Recipe In Tamil

Print Recipe
கார்லிக் ஸ்க்விட் மசாலா செஞ்சி அத்துடன் சுட சுட சாதம்செஞ்சி சாப்பிட்டு பாருங்க மீண்டும் மீண்டும் கேட்டு கேட்டு சாப்பிடுவாங்க. வாருங்கள் இதனை எவ்வாறு சரி சமைப்பது என்பதை இந்தப் பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
Course Gravy
Cuisine tamilnadu
Keyword Kanava Fish
Prep Time 10 minutes
Cook Time 10 minutes
Total Time 20 minutes
Servings 4
Calories 120

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 1/2 கிலோ கணவா (கடம்பா) மீன்
  • 10 சின்ன வெங்காயம்
  • 1 தக்காளி
  • 1 பச்சை மிளகாய்
  • 10 பல் பூண்டு பொடியாக நறுக்கி வைக்கவும்
  • கறிவேப்பிலை சிறிது
  • 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  • 1 தேக்கரண்டி மிளகாய்த்தூள்
  • உப்பு தேவைக்கு
  • 2 தேக்கரண்டி எண்ணெய்
  • 1 கப் தேங்காய்ப் பால்
  • 1/2 தேக்கரண்டி கரம் மசாலா தூள்

Instructions

  • ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மச்சை மிளகாய் – கறிவேப்பிலை தாளித்து பின் பூண்டு சேர்த்து வருகையும்
  • பின் நறுக்கிய வெங்காயம் – தக்காளி ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும். அத்துடன் உப்பு, மஞ்சள் தூள் மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாக வதக்கவும். வதங்கியுடன் சுத்தம் செய்த கணவா மீன்களை சேர்த்து பிரட்டி, சிறிதளவு தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் மூடி போட்டு வேக விடவும்.
  • 5 நிமிடம் கழித்து திறந்து தேங்காய்ப்பால் சேர்த்து பிரட்டி மேலும் 2 நிமிடம் கொதிக்க விடவும். பின்னர் கரம் மசாலா தூள் – கறிவேப்பிலை தூவி இறக்கவும். சுவையான கார்லிக் ஸ்க்விட் மசாலா தயார்.
     

Nutrition

Serving: 100g | Calories: 120kcal | Carbohydrates: 13g | Protein: 32g | Fat: 9g | Sodium: 360mg
Advertisement
Advertisement
Prem Kumar

Recent Posts

ருசியான ஆந்திரா ஸ்டைல் கோங்குரா சாதம் இப்படி ஒரு முறை வீட்டிலயே செய்து பாருங்க!

சிலர் பலவகையான உணவுகளை சாப்பிட வேண்டும் என்ற ஆசையும் விருப்பம் கொண்டிருப்பார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு எல்லாம் மிகவும் விருப்பமான ஒரு உணவுமுறை…

10 மணி நேரங்கள் ago

குளு குளுனு 90’Kids தேங்காய் பால் குச்சி ஐஸ் அடுப்பு பக்கமே போகாம சுலபமாக இப்படி செய்து பாருங்க!

ஐஸ் ஐஸ் ஐஸ் பால் ஜஸ் , சேமியா ஐஸ் 90ஸ் கிட்ஸோட பிடித்தமான சத்தம் அப்படினு சொல்லலாம். இப்பல்லாம்…

14 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 21 மே 2024!

மேஷம் புதிய பிரச்சினைகள் தோன்றி மன அழுத்தத்தை ஏற்படுத்தும். பணம் பற்றாக்குறையால் இன்று வீட்டில் வேற்றுமை காணப்படும். வேலையில் நல்ல…

21 மணி நேரங்கள் ago

மணமணக்கும் ருசியான கேரட் புலாவ் ஈஸியாக பதினைந்தே நிமிடத்தில் இப்படி செய்து பாருங்கள் மிகவும் ருசியாக இருக்கும்!!

புலாவ் உலகம் முழுவதும் பிரபலமடைந்து இருக்கும் ஒரு உணவு வகை. பொதுவாக வெரைட்டி ரைஸ் என்றாலே குழந்தைகள் அதிகம் விரும்பி…

2 நாட்கள் ago

காலை வேளையில் உடல் சூட்டை குறைக்கும் இந்த வெந்தய களியை ஒரு முறை செய்து கொடுங்கள் பின் அடிக்கடி கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்!!!

அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தும் பல உணவு பொருள்கள், நமக்கு மருந்தாகவும் பயன்படக்கூடியவை. அதில் வெந்தயத்திற்கு மிக முக்கிய இடம் உண்டு.…

2 நாட்கள் ago

விரதம் இருப்பதால் கிடைக்கும் நன்மைகள்

விரதம் என்ற சொல்லுக்கு பலவகையான அர்த்தங்கள் உள்ளது என்று சொல்லலாம். நோன்பு உபவாசம் உணவை தவிர்த்தல் என்று பல சொற்களால்…

2 நாட்கள் ago