- Advertisement -
ஒரே மாரி மீன் குழம்பு, அல்லது மீன் வறுவல் செய்து சாப்பிடாமல் இது போன்று ஒரு முறை கார்லிக் ஸ்க்விட் மசாலா செய்து சாப்பிட்டு பாருங்க அட்டகாசமான சுவையில் இருக்கும். அசைவ பிரியர்களுக்கு மீன் என்றாலே இஷ்டம் அதுவும் ஸ்க்விட் என்றாலே சொல்லவே வேண்டாம் , கார்லிக் ஸ்க்விட் மசாலா செஞ்சி அத்துடன் சுட சுட சாதம் செஞ்சி சாப்பிட்டு பாருங்க மீண்டும் மீண்டும் கேட்டு கேட்டு சாப்பிடுவாங்க. வாருங்கள் இதனை எவ்வாறு சரி சமைப்பது என்பதை இந்தப் பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
-விளம்பரம்-
பூண்டு கனாவா மீன் மசாலா | Garlic Squid Curry Recipe In Tamil
கார்லிக் ஸ்க்விட் மசாலா செஞ்சி அத்துடன் சுட சுட சாதம்செஞ்சி சாப்பிட்டு பாருங்க மீண்டும் மீண்டும் கேட்டு கேட்டு சாப்பிடுவாங்க. வாருங்கள் இதனை எவ்வாறு சரி சமைப்பது என்பதை இந்தப் பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
Yield: 4
Calories: 120kcal
Equipment
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 1/2 கிலோ கணவா (கடம்பா) மீன்
- 10 சின்ன வெங்காயம்
- 1 தக்காளி
- 1 பச்சை மிளகாய்
- 10 பல் பூண்டு பொடியாக நறுக்கி வைக்கவும்
- கறிவேப்பிலை சிறிது
- 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்
- 1 தேக்கரண்டி மிளகாய்த்தூள்
- உப்பு தேவைக்கு
- 2 தேக்கரண்டி எண்ணெய்
- 1 கப் தேங்காய்ப் பால்
- 1/2 தேக்கரண்டி கரம் மசாலா தூள்
செய்முறை
- ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மச்சை மிளகாய் – கறிவேப்பிலை தாளித்து பின் பூண்டு சேர்த்து வருகையும்
- பின் நறுக்கிய வெங்காயம் – தக்காளி ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும். அத்துடன் உப்பு, மஞ்சள் தூள் மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாக வதக்கவும். வதங்கியுடன் சுத்தம் செய்த கணவா மீன்களை சேர்த்து பிரட்டி, சிறிதளவு தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் மூடி போட்டு வேக விடவும்.
- 5 நிமிடம் கழித்து திறந்து தேங்காய்ப்பால் சேர்த்து பிரட்டி மேலும் 2 நிமிடம் கொதிக்க விடவும். பின்னர் கரம் மசாலா தூள் – கறிவேப்பிலை தூவி இறக்கவும். சுவையான கார்லிக் ஸ்க்விட் மசாலா தயார்.
Nutrition
Serving: 100g | Calories: 120kcal | Carbohydrates: 13g | Protein: 32g | Fat: 9g | Sodium: 360mg
- Advertisement -