Advertisement
இனிப்பு பொருள்

மாலை நேர ஸ்நாக்ஸாக சாப்பிட ருசியான நெய் அப்பம் ஒரு தரம் இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

Advertisement

அப்பம் ஒரு பாரம்பரிய உணவாகும். இது தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமானது. அப்பம் என்றாலே அனைவருக்கும் மிகவும் பிடித்த ரெசிபியாகும். அப்பத்தில் பல வகைகள் இருக்கின்றன. அதில் இன்று நாம்‌ பார்க்க இருப்பது நெய் அப்பம். பச்சரிசி மாவு கொண்டு செய்யப்படும் இந்த அப்பம் ரொம்ப ரொம்ப ஆரோக்கியமானதாக இருக்கும். மாலை நேரத்தில் டீயுடன் இந்த அப்பம் செய்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும். இதை செய்வதற்கு 4 பொருட்கள் மட்டுமே முக்கியமாக தேவைப்படும். இந்த அப்பத்தை யாருடைய உதவியும் இல்லாமல் நீங்களே தயார் செய்யலாம். அப்பம் என்பது தென் இந்தியாவில் பிரபலமான சுவை மிகுந்த உணவு. இது இனிப்புச் சுவையோடு இருக்க வேண்டும் என நீங்கள் நினைத்தால் வாழைப்பழம் மற்றும் வெல்லம் கலந்து செய்து பாருங்கள். இதை பெரும்பாலும் வீட்டில் தயார் செய்வதில்லை வெளியில் ஹோட்டல் எங்கேயாவது சாப்பிட செல்லும் பொழுது ஆர்டர் செய்து சாப்பிட்டு கொள்கிறோம் இனி இதுபோல் செய்யாதீர்கள். இப்படி ஒரு முறை காலை உணவாக உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு அப்பம் செய்து கொடுத்து பாருங்கள் தினமும் உங்களை அப்பம் செய்து தர சொல்லி தொந்தரவு செய்வார்கள்.

நெய் அப்பம் | Ghee Appam Recipe In Tamil

Print Recipe
அப்பம் ஒரு பாரம்பரிய உணவாகும். இது தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமானது. அப்பம் என்றாலே அனைவருக்கும் மிகவும் பிடித்த ரெசிபியாகும். அப்பத்தில் பல வகைகள் இருக்கின்றன. அதில் இன்று நாம்‌ பார்க்க இருப்பது நெய் அப்பம். பச்சரிசி மாவு கொண்டு செய்யப்படும் இந்த அப்பம் ரொம்ப ரொம்ப ஆரோக்கியமானதாக இருக்கும். மாலை நேரத்தில் டீயுடன் இந்த அப்பம் செய்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும். இதை செய்வதற்கு 4 பொருட்கள் மட்டுமே முக்கியமாக தேவைப்படும். இந்த அப்பத்தை யாருடைய உதவியும் இல்லாமல் நீங்களே தயார் செய்யலாம்.
Advertisement
அப்பம் என்பது தென் இந்தியாவில் பிரபலமான சுவை மிகுந்த உணவு. இது இனிப்புச் சுவையோடு இருக்க வேண்டும் என நீங்கள் நினைத்தால் வாழைப்பழம் மற்றும் வெல்லம் கலந்து செய்து பாருங்கள்.
Course evening
Cuisine Indian
Keyword Ghee Appam
Prep Time 15 minutes
Cook Time 10 minutes
Total Time 25 minutes
Servings 4 People
Calories 130

Equipment

  • 1 பவுள்
  • 1 மிக்ஸி
  • 1 குழிபணியார கல்
    Advertisement

Ingredients

  • 2 கப் பச்சரிசி
  • 2 கப் வெல்லம்
  • 2 வாழைப்பழம்
  • 1 டீஸ்பூன் ஏலக்காய் தூள்
  • 1/2 டீஸ்பூன் உப்பு
  • நெய் தேவையான அளவு
  • 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல்

Instructions

  • முதலில் பச்சரிசியை நன்கு சுத்தம் செய்து தண்ணீரில் அலசி விட்டு அரை மணி நேரம் வரை ஊற வைத்துக் கொள்ளவும்.
  • பின் இதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும்.
  • பின் வாழைப்பழம், வெல்லம், ஏலக்காய் தூள், உப்பு சேர்த்து நன்கு அரைத்து ஒரு பவுளில் சேர்த்து அதனுடன் தேங்காய் துருவல் சேர்த்து ஒரு கரண்டியால் கலந்து கொள்ளவும்.
  • ஒரு பணியார கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் நெய் விட்டு ஒரு கரண்டி மாவை எடுத்து மிதமான சூட்டில் வேக வைக்கவும்.
  • அப்பம் ஒரு பக்கம் வெந்தவுடன் திருப்பி போட்டு எடுத்தால் சுவையான மற்றும் ஆரோக்கியமான நெய் அப்பம் தயார். இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.

Nutrition

Serving: 400g | Calories: 130kcal | Carbohydrates: 1.3g | Protein: 33g | Fat: 15g | Sodium: 3.32mg | Potassium: 15mg | Fiber: 2g | Sugar: 4g | Vitamin A: 72IU | Vitamin C: 107mg | Calcium: 9.3mg | Iron: 6mg

இதனையும் படியுங்கள் : கேரளா ஸ்பெஷல் நெய் பத்திரி இப்படி செஞ்சி பாருங்க இரவு டிபனுக்கு பக்காவான ரெசிபி மிஸ் பண்ணாதீங்க!

Advertisement
Advertisement
Prem Kumar

Recent Posts

வளர்பிறை சதுர்த்தி வழிபாடு செய்து விநாயகர் பெருமான் அருளை முழுமையாக பெறுங்கள்!

பொதுவாக இருக்கின்ற 16 விதிகளில் நான்காவது ரீதியாக வரக்கூடியது சதுர்த்தி திதி. பொதுவாக ஒவ்வொரு தெய்வத்திற்கும் நட்சத்திரம் திதி கிழமை…

47 நிமிடங்கள் ago

இந்த வெயிலுக்கு இளநீர் சர்பத் செஞ்சு குடித்து பாருங்க!!!

அடிக்கிற வெயிலுக்கு நமக்கு சோறு கூட தேவையில்லை ஏதாவது சாப்பிட்டுகிட்டே இருக்கணும் போல தான் தோணும் அந்த வகையில இயற்கையாகவே…

2 மணி நேரங்கள் ago

ருசியான சிறு தானிய சப்பாத்தி இப்படி ட்ரை பண்ணி பாருங்க எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க!

சிறு தானிய வகைகளில் ஒன்றாக இருக்கும் இந்த கம்பு நிறையவே சத்துக்களை கொண்டுள்ளது. குறிப்பாக நார்ச்சத்து நிறைந்துள்ள இந்த கம்பு…

3 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 14 மே 2024!

மேஷம் நீங்கள் முன்னெடுக்கும் பணிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும். சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருக்கும். வருமானமும் அதிகரிக்கும். யாருடனும் வாக்குவாதம்…

6 மணி நேரங்கள் ago

சப்பாத்திக்கு, பூரிக்கு இந்த உருளைக்கிழங்கு பட்டாணி மசாலா செஞ்சு கொடுங்க நாலஞ்சு அதிகமாக சாப்பிடு வாங்க!

ஊட்டச்சத்து மிகுந்து காணப்படும் காய்கறிகளில் காலிஃப்ளவருக்கு முக்கிய இடம் உண்டு. வைட்டமின் சி, மெக்னீசியம் போன்றவை நிரம்பி காணப்படுகின்றன. மேலும்,…

15 மணி நேரங்கள் ago

டிபனுக்கு வழக்கம் போல் இல்லாமல் தக்காளி மசாலா பூரி இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

பூரி இந்தியாவின் புகழ் பெற்ற மற்றும் சுவையான காலை உணவு அல்லது சிற்றுண்டி. பூரி தென்னிந்தியாவில் உருளைக்கிழங்கு மசாலாவுடன் மற்றும்…

15 மணி நேரங்கள் ago