அப்பம் ஒரு பாரம்பரிய உணவாகும். இது தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமானது. அப்பம் என்றாலே அனைவருக்கும் மிகவும் பிடித்த ரெசிபியாகும். அப்பத்தில் பல வகைகள் இருக்கின்றன. அதில் இன்று நாம் பார்க்க இருப்பது நெய் அப்பம். பச்சரிசி மாவு கொண்டு செய்யப்படும் இந்த அப்பம் ரொம்ப ரொம்ப ஆரோக்கியமானதாக இருக்கும். மாலை நேரத்தில் டீயுடன் இந்த அப்பம் செய்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும். இதை செய்வதற்கு 4 பொருட்கள் மட்டுமே முக்கியமாக தேவைப்படும். இந்த அப்பத்தை யாருடைய உதவியும் இல்லாமல் நீங்களே தயார் செய்யலாம். அப்பம் என்பது தென் இந்தியாவில் பிரபலமான சுவை மிகுந்த உணவு. இது இனிப்புச் சுவையோடு இருக்க வேண்டும் என நீங்கள் நினைத்தால் வாழைப்பழம் மற்றும் வெல்லம் கலந்து செய்து பாருங்கள். இதை பெரும்பாலும் வீட்டில் தயார் செய்வதில்லை வெளியில் ஹோட்டல் எங்கேயாவது சாப்பிட செல்லும் பொழுது ஆர்டர் செய்து சாப்பிட்டு கொள்கிறோம் இனி இதுபோல் செய்யாதீர்கள். இப்படி ஒரு முறை காலை உணவாக உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு அப்பம் செய்து கொடுத்து பாருங்கள் தினமும் உங்களை அப்பம் செய்து தர சொல்லி தொந்தரவு செய்வார்கள்.
நெய் அப்பம் | Ghee Appam Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 மிக்ஸி
- 1 குழிபணியார கல்
தேவையான பொருட்கள்
- 2 கப் பச்சரிசி
- 2 கப் வெல்லம்
- 2 வாழைப்பழம்
- 1 டீஸ்பூன் ஏலக்காய் தூள்
- 1/2 டீஸ்பூன் உப்பு
- நெய் தேவையான அளவு
- 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல்
செய்முறை
- முதலில் பச்சரிசியை நன்கு சுத்தம் செய்து தண்ணீரில் அலசி விட்டு அரை மணி நேரம் வரை ஊற வைத்துக் கொள்ளவும்.
- பின் இதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும்.
- பின் வாழைப்பழம், வெல்லம், ஏலக்காய் தூள், உப்பு சேர்த்து நன்கு அரைத்து ஒரு பவுளில் சேர்த்து அதனுடன் தேங்காய் துருவல் சேர்த்து ஒரு கரண்டியால் கலந்து கொள்ளவும்.
- ஒரு பணியார கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் நெய் விட்டு ஒரு கரண்டி மாவை எடுத்து மிதமான சூட்டில் வேக வைக்கவும்.
- அப்பம் ஒரு பக்கம் வெந்தவுடன் திருப்பி போட்டு எடுத்தால் சுவையான மற்றும் ஆரோக்கியமான நெய் அப்பம் தயார். இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.
Nutrition
இதனையும் படியுங்கள் : கேரளா ஸ்பெஷல் நெய் பத்திரி இப்படி செஞ்சி பாருங்க இரவு டிபனுக்கு பக்காவான ரெசிபி மிஸ் பண்ணாதீங்க!