காலை டிபனுக்கு கமகமனு சூப்பரான நெய் ரவா பொங்கல் இப்படி செய்து பாருங்கள்!
தென்னிந்திய சமையலில் காலை உணவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இட்லி, தோசை, பூரி, கிச்சடி, பொங்கல், வடை, சாம்பார் போன்ற புரதச்சத்து நிறைந்த உணவுகளை காலை நேரத்தில் எடுத்து கொள்ளும் போது நாள் முழுவதும் உடலுக்கு தேவையான ஆற்றல் சீராக கிடைக்கிறது. இந்த காலை உணவு பட்டியலில்
தென்னிந்திய சமையலில் காலை உணவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இட்லி, தோசை, பூரி, கிச்சடி, பொங்கல், வடை, சாம்பார் போன்ற புரதச்சத்து நிறைந்த உணவுகளை காலை நேரத்தில் எடுத்து கொள்ளும் போது நாள் முழுவதும் உடலுக்கு தேவையான ஆற்றல் சீராக கிடைக்கிறது. இந்த காலை உணவு பட்டியலில் பலருக்கும் மிகவும் பிடித்தமான மெனு வெண் பொங்கல். இதில் சமச்சீரான சத்துகள் நிறைந்துள்ளன. வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில் பெரும்பாலும் நமது வீடுகளில் காலை உணவாக வெண்பொங்கலை தான் செய்து சாப்பிடுவோம். இந்த முறை வெண்பொங்கலை பச்சரிசியில் செய்யாமல் கொஞ்சம் மாற்றாக ரவையில் செய்யலாம்.
கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் அவசியமான நார்ச்சத்துக்கள் ரவையில் அதிகம் உள்ளன. இன்று ரவையில் வெண்பொங்கல் செய்வது எப்படி என்று பார்க்கலாம். உங்கள் காலை உணவை மிகவும் சுவையான உணவாக மாற்ற இந்த ரவா பொங்கலை ஒரு முறை செய்து பாருங்கள். இப்படி ஒரு தடவை நீங்கள் ரவா பொங்கல் செய்து உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு சாப்பிட கொடுத்தால் உங்களை அடிக்கடி இதுபோல் செய்து தர சொல்லி தொல்லை செய்வார்கள். அந்த அளவிற்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான ஒரு காலை உணவாக இந்த ரவா பொங்கல் மாறிவிடும் என்பதில் சந்தேகமே இல்லை.
இதனையும் படியுங்கள் : பஞ்சு போன்று மென்மையாக ரவா இட்லி இனி இப்படி செய்து பாருங்கள்! வித்தியாசமான சுவையில் இருக்கும்!