- Advertisement -
வணக்கம் நண்பர்களே. நாம பெரும்பாலும் காலை உணவாக எடுத்துக் கொள்வது இட்லி. அதுவும் இட்லிக்கு இரண்டு வகை சட்னி, சாம்பார் வச்சு சாப்பிடும் போது கூட ஒரு இட்லி அதிகமா சாப்பிட தோன்றும்.
இதையும் படியுங்கள் : ரோட்டு ஓரம் இட்லி கடையின் சுவையான சாம்பார் செய்வது எப்படி ?
- Advertisement -
தோசையில், பொடி தோசை, ரவா தோசை, வெங்காய தோசை, முட்டை தோசை என பலவகை உண்டு. இட்லி வேகவைத்து சாப்பிடும் ஒரே முறையை பின்பற்றாமல் புதுவிதமாக ரவா இட்லி செய்வது எப்படி என்று இந்த பதிவில் பார்ப்போம்.
-விளம்பரம்-
ரவா இட்லி | Rava Idli Recipe in Tamil
வணக்கம் நண்பர்களே நாம பெரும்பாலும் காலை உணவாக எடுத்துக் கொள்வது இட்லி. அதுவும் இட்லிக்கு இரண்டு வகை சட்னி, சாம்பார் வச்சு சாப்பிடும் போது கூட ஒரு இட்லி அதிகமா சாப்பிட தோன்றும். தோசையில், பொடி தோசை, ரவா தோசை, வெங்காய தோசை, முட்டை தோசை என பலவகை உண்டு. இட்லி வேகவைத்து சாப்பிடும் ஒரே முறையை பின்பற்றாமல் புதுவிதமாக ரவா இட்லி செய்வது எப்படி என்று இந்த பதிவில் பார்ப்போம்.
Yield: 5 People
Calories: 105kcal
Equipment
- 1 கடாய்
- 1 இட்லி பாத்திரம்
தேவையான பொருட்கள்
- 2 tsp நெய்
- 8 முந்திரிப் பருப்பு நறுக்கியது
- 1/2 tsp கடுகு
- 1/2 tsp சீரகம்
- 10 கருவேப்பிலை
- 1 சிட்டிகை சாதம்
- 1 1tsp இஞ்சி பொடியாக நறுக்கியது
- 1 பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது
- 2 tsp கேரட் துருவியது
- 2 tsp மல்லி இலை பொடியாக நறுக்கியது
- உப்பு தேவையான அளவு
- 1 கப் ரவா
- 1/2 கப் தயிர்
- தண்ணீர் தேவையான அளவு
- சமையல் சோடா தேவையான அளவு
செய்முறை
- முதலில் கடாயில் நெய் சேர்த்து முந்திரிப் பருப்பை வறுக்கவும். அதே கடாயில் கடுகு சேர்த்து பொரிய விட்டு பின் சீரகம் சேர்க்கவும். இப்போது கருவேப்பிலை சேர்த்து பொரிய விட்டு, எடுத்து வைத்த சாதம், பொடியாக நறுக்கிய இஞ்சி மற்றும் பொடியாக நறுக்கி வைத்த பச்சை மிளகாய் சேர்த்து ஒரு பத்து நிமிடம் வதக்கவும்.
- பின் ரவையை சேர்த்து நெய் மற்றும் பிற பொருள்களுடன் நன்றாக கலக்கவும். ரவா வாசனை வரும் வரை நன்கு கிளறி விடவும். ரவா பழுப்பு நிறமாகவோ பொன் நிறமாகவோ மாறக்கூடாது. சிறிது நிறம் மாறும் வரை கிளறி விட்டால் போதும்.
- ரவா நன்கு வந்ததும் கடாயை தனியாக வைக்கவும். அதில் துருவி வைத்த கேரட் நறுக்கி வைத்த கொத்தமல்லி இலைகள், தேவையான அளவு உப்பு சேர்க்கவும். நீங்கள் விரும்பினால் பச்சை பட்டாணி சேர்த்துக் கொள்ளலாம்.
- பின் தயிர் சேர்த்து அதோடு தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும். தயிர் அதிக கட்டி தன்மை கொண்டிருந்தால் தண்ணீர் அதிகம் சேர்க்க. இவற்றையெல்லாம் கலந்த பின் மாவை ஒரு இருபது நிமிடம் மூடி வைக்கவும்.
- மாவு கெட்டியாகவோ அல்லது மெல்லியதாகவோ இருக்கக்கூடாது. இட்லி மாவு என்பதால் ஒரு நடுத்தர நிலை தன்மையை கொண்டிருக்க வேண்டும். இப்போது நாம் முடி வைத்திருந்த மாவு சரியான பதத்தில் இருக்கின்றது.
- அடுத்ததாக இட்லி அச்சுகளில் என்னை அல்லது நெய் தடவி, வறுத்து எடுத்து வைத்த பாதி முந்திரியை இட்லி பாத்திரத்தின் அச்சுகளின் நடுவில் வைக்கவும். இப்போது மாவை ஒவ்வொரு அச்சுகளிலும் ஊற்றி எடுக்கவும்.
- இட்லி பாத்திரத்தில் தண்ணீர் சூடான பிறகு, இட்லி தட்டுகளை சேர்த்து வேக வைக்க வேண்டும். ஒரு 10 முதல் 15 நிமிடம் கழித்து இட்லி பாத்திரத்தை திறந்து பார்த்தால் சுவையான முந்திரிப் பருப்பு போட்ட ரவா இட்லி தயார்.
Nutrition
Serving: 800g | Calories: 105kcal | Carbohydrates: 14g | Protein: 4g | Fat: 36g | Saturated Fat: 2g | Polyunsaturated Fat: 0.3g | Monounsaturated Fat: 1g | Trans Fat: 0.001g | Cholesterol: 8mg | Sodium: 166mg | Potassium: 67mg | Fiber: 1g | Sugar: 1g | Vitamin A: 546IU | Vitamin C: 21mg | Calcium: 23mg | Iron: 1mg