- Prep
- 20 min
- Cook
- 30 min
- Total
- 50 min
- Serves
- 5
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Kulambu
என்ன தான் நாம் பெரிய உணவு உங்களுக்கு சென்று காலை, இரவு என டிபன் சாப்பிட்டாலும். ரோடு ஓரமாக இருக்கும் கடைகளில் விற்கப்படும் சாம்பாரின் சுவைக்கு எந்த பெரிய உணவகங்களின் சாம்பாரும் ஈடு கொடுக்க முடியாது. இது போன்ற ரோட்டு கடைகளில் செய்யப்படும் சாம்பார்களில் காய்கறி கூட அவ்வளவாக சேர்க்க மாட்டார்கள். இருந்தாலும் அவர்கள் வைக்கும் சாம்பாரின் மணமும், சுவையும் அட்டகாசமான முறையில் இருக்கும் வாங்கி டம்ளர் டம்ளராக குடிக்க வேண்டும் என்ற அளவிற்கு நமக்கே தோணும்.
இதையும் படியுங்கள் : மறுமுறை வைக்க தோன்றும் மணமணக்கும் அய்யர் வீட்டு சாம்பார் செய்வது எப்படி ?
ஆம் இன்று ரோட்டு கடைகளில் எப்படி சாம்பார் வைக்கிறார்கள் என்று தான் பார்க்க இருக்கிறோம். இதுபோன்று நீங்களும் உங்கள் டிபனின் போது இதே மாதிரியாக சாம்பார் வைத்து கொடுத்தால் உங்கள் வீட்டில் உள்ள அனைவரும் சுவைத்து சுவைத்து சாப்பிடுவார்கள். இன்ற ரோட்டு கடை சாம்பார் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறை என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
English Overview: sambar is one of the most important dishes in india. sambar recipe or sambar seivathu eppadi or sambar recipe in Tamil are a few important terms to describe this recipe in the tamil language.
Ingredients
Method
முதலில் ஒரு நெல்லிக்காய் அளவு புளியை ஒரு பவுளில் சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக ஒரு 15 நிமிடம் நன்றாக ஊற வைத்துக் கொள்ளுங்கள். அதன் பின்பு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கொள்ளவும்.
எண்ணெய் நன்கு சூடேறியதும் கடுகு, சோம்பு, சிறிது கருவேப்பிலை, வர மிளகாய், பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் மற்றும் பொடியாக நறுக்கிய ஒரு துண்டு இஞ்சி சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளுங்கள் வெங்காயம் பொன்னிறமாக வரும் முறை வதக்கவும்.
வெங்காயம் பொன்னிறமாக வந்தவுடன் அதனுடன் நறுக்கிய தக்காளியும் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும் தக்காளி நன்றாக மசிந்து வந்ததும் அதனோடு மஞ்சள் தூள், சாம்பார் தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து நன்கு கிளறி விடவும். சேர்த்த மசாலா பொருட்கள் நன்கு வதங்கியதும்.
பின் அதனுடன் நாம் ஊறவைத்த புளியை கரைத்து அந்த தண்ணீரை இதனுடன் சேர்த்துக் கொள்ளவும். பின் 20 நிமிடம் ஊற வைத்த துவரம் பருப்பையும் இதனுடன் சேர்த்து மற்றும் இரண்டு கப் தண்ணீரும் சேர்த்து குக்கரை மூடி விடுங்கள்.
குக்கரில் நான்கு விசில் வந்ததும் குக்கரின் பிரஷரை ரிலீஸ் செய்து மூடியை திறந்து கொள்ளுங்கள் பின்பு பருப்பை நன்றாக மசித்து விட்டு அதனுடன் இன்னும் ஒரு கப் தண்ணீர் சேர்த்து தேவையான அளவு உப்பு, ஒரு டீஸ்பூன் நெய் மற்றும் அரை டீஸ்பூன் துருவிய வெல்லம் சேர்த்து நன்றாக கலந்து விட்டு கொதிக்க வையுங்கள்.
அதன் பின் சாம்பார் நன்றாக கொதித்து வந்ததும் சிறிது கொத்த மல்லி இலையை சேர்த்து சாம்பார் வேறு பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளுங்கள் அவ்வளவுதான் ரோட்டு கடை சாம்பார் இனிதே தயாராகிவிட்டது.






