Advertisement
சைவம்

இட்லி, தோசை, சாதத்துடன் சாப்பிட ருசியான இஞ்சி பூண்டு தொக்கு இப்படி ஒரு தரம் செய்து பாருங்க!

Advertisement

இஞ்சி தொக்கு என்றால் பெரும்பாலானவர்களுக்கு பிடித்த உணவாக இருக்கிறது. இந்த இஞ்சி தொக்கை வைத்து எந்த உணவுக்கு வேண்டுமானாலும் சாப்பிடலாம். அந்த அளவுக்கு இதனுடைய ருசி இருக்கும். நாம் எப்பொழுதும் சாப்பிடும் உணவின் அளவை விட இஞ்சி பூண்டு தொக்கு இருந்தால் கொஞ்சம் அதிகமாக சாப்பிடுவோம். சிறிதும் நேரமில்லாமல் நகர்புறங்களில் பணி செய்து கொண்டிருக்கும் நண்பர்கள் ஒருமுறை இந்த தொக்கை இந்த முறையில் செய்து பாருங்கள். மிகவும் குறைந்த நேரத்தில் எளிதில் தயாராகும் இந்த தொக்கை, மூன்று மாதங்கள் வரை ஃப்ரிட்ஜில் வைத்துப் பயன்படுத்தலாம். இனிப்பு, புளிப்பு, கசப்பு உள்ளிட்ட அறுசுவையும் இந்த தொக்கில் இருக்கிறது. இனி சட்னி, சாம்பார் என டிபனுக்கு புதிதாக சைடு டிஷ் செய்யத் தேவையே இல்லை. இந்த இஞ்சி பூண்டு தொக்கு ரெசிபியை செய்து ஃபிரிட்ஜில் ஸ்டோர் செய்து வைத்தாலே போதும்.

சுடச்சுட இட்லி, தோசை அல்லது சப்பாத்திக்கு இன்ஸ்டன்ட்டாக தேவைப்படும் நேரத்தில் இதனை சைடு டிஷ்ஷாக உபயோகிக்கலாம். இந்த தொக்கும் அப்பளமும் இருந்தால் போதும். அதுவே பலருக்கும் விருந்து சாப்பிட்டது போல் குஷி ஆகிவிடுவார்கள். இந்த தொக்கு செய்வது எளிமையான விஷயம் என்றாலும் அதன் சுவை செய்யும் பக்குவத்தில் தான் உள்ளது. நாம் உணவுகள் சாப்பிடும் போதே பொரியல் கூட்டு எதுவும் இல்லாத சமயத்தில் அந்த தொக்கை சைடிஷ் ஆக எடுத்துக் கொள்வோம். ஆனால் இப்போதெல்லாம் பெரும்பாலான வீடுகளில் ஊறுகாய் இருப்பதை அரிதான ஒன்றாக மாறி வருகிறது. இந்த இஞ்சி பூண்டு தொக்கு பசியின்மை, வயிறு மந்தம், வயிற்று கோளாறுகள் ஆகியவற்றிற்கு கைகண்ட மருந்து. அந்த வகையில் இன்று நாம் இஞ்சி பூண்டு தொக்கு எப்படி செய்வது என்று பார்ப்போம்.

Advertisement

இஞ்சி பூண்டு தொக்கு | Ginger Garlic Thokku Recipe In Tamil

Print Recipe
இஞ்சி தொக்கு என்றால் பெரும்பாலானவர்களுக்கு பிடித்த உணவாக இருக்கிறது. இந்த இஞ்சி தொக்கை வைத்து எந்த உணவுக்கு வேண்டுமானாலும் சாப்பிடலாம். அந்த அளவுக்கு இதனுடைய ருசி இருக்கும். நாம் எப்பொழுதும் சாப்பிடும் உணவின் அளவை விட இஞ்சி பூண்டு தொக்கு இருந்தால் கொஞ்சம் அதிகமாக சாப்பிடுவோம். சிறிதும் நேரமில்லாமல் நகர்புறங்களில் பணி செய்து கொண்டிருக்கும்
Advertisement
நண்பர்கள் ஒருமுறை இந்த தொக்கை இந்த முறையில் செய்து பாருங்கள். மிகவும் குறைந்த நேரத்தில் எளிதில் தயாராகும் இந்த தொக்கை, மூன்று மாதங்கள் வரை ஃப்ரிட்ஜில் வைத்துப் பயன்படுத்தலாம். இனிப்பு, புளிப்பு, கசப்பு உள்ளிட்ட அறுசுவையும் இந்த தொக்கில் இருக்கிறது. இனி சட்னி, சாம்பார் என டிபனுக்கு புதிதாக சைடு டிஷ் செய்யத் தேவையே இல்லை. இந்த இஞ்சி பூண்டு தொக்கு ரெசிபியை செய்து ஃபிரிட்ஜில் ஸ்டோர் செய்து வைத்தாலே போதும்.
Course LUNCH
Cuisine Indian
Keyword Ginger Garlic Thokku
Advertisement
Prep Time 10 minutes
Cook Time 10 minutes
Total Time 20 minutes
Servings 4 People
Calories 99

Equipment

  • 1 சிறிய கடாய்
  • 1 பவுள்
  • 1 மிக்ஸி

Ingredients

  • 1/4 கப் பூண்டு
  • 1/2 கப் இஞ்சி
  • 2 தக்காளி
  • 1 கொட்டை புளி
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1/2 டீஸ்பூன் பெருங்காயத்தூள்
  • 1 கொத்து கறிவேப்பில்லை
  • உப்பு தேவையான அளவு
  • நல்லெண்ணெய் தேவையான அளவு
  • 1 டீஸ்பூன் காஷ்மீர் மிளகாய்த்தூள்
  • 1 துண்டு வெல்லம்
  • 1/2 டீஸ்பூன் கடுகு
  • 1/2 டீஸ்பூன் உளுந்தம்பருப்பு

Instructions

  • முதலில் பூண்டு மற்றும் இஞ்சியை தோள் நீக்கி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். தக்காளி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு மிக்ஸி ஜாரில் பூண்டு, இஞ்சி, தக்காளி, காய்ந்த மிளகாய், புளி, உப்பு, மஞ்சள் தூள், காஷ்மீர் மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
  • ஒரு வாணலியை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
  • பின் நாம் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து அதனுடன் பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு கலந்து மிதமான தீயில் பச்சை வாசனை போக வதக்கவும்.
  • அதன்பிறகு எண்ணெய் பிரிந்து வந்ததும் வெல்லம் சேர்த்து கலந்து இரண்டு நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைத்து விடவும். அவ்வளவுதான் சுவையான இஞ்சி பூண்டு தொக்கு தயார்.

Nutrition

Serving: 300g | Calories: 99kcal | Carbohydrates: 7.8g | Protein: 8.1g | Fat: 0.7g | Saturated Fat: 0.2g | Sodium: 32mg | Potassium: 415mg | Fiber: 1.4g | Vitamin A: 3IU | Vitamin C: 5mg | Calcium: 9mg | Iron: 6mg

இதனையும் படியுங்கள் : கேரளா ஸ்பெஷல் இஞ்சி புளி சிக்கன் இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க! இவ்வளவு டேஸ்ட்டான்னு நீங்களே ஆச்சரியப்படுவீங்க!

Advertisement
Prem Kumar

Recent Posts

வைகாசி விசாகத்தில் முருகப் பெருமானை வழிபட வேண்டிய நேரம்

உலகோர் அனைவருக்கும் தெய்வமாக, ஸ்கந்தன், சுப்பிரமணியன், விசாகன் என்று பல்வேறு திருநாமங்களோடு அருள்பவன் முருகன். அந்த அழகனை, 'தமிழ்க் கடவுள்'…

8 மணி நேரங்கள் ago

ஈவினிங் டைம்ல சாப்பிடுவதற்கு இந்த மாதிரி சுட சுட சிக்கன் ரோல் ஒரு தடவை செஞ்சு பாருங்க!

பொதுவா நமக்கு சிக்கன் ரோல் சிக்கன் பப்ஸ் கேக் சமோசா அந்த மாதிரி சாப்பிடனும் போல இருந்துச்சுன்னா அதுக்குன்னு நம்ம…

11 மணி நேரங்கள் ago

இட்லி மீதமாயிடுச்சு அப்படின்னா இந்த மாதிரி மசாலா இட்லி செஞ்சு பாருங்க!

வீட்ல இட்லி மீதமாயிருச்சு அப்படின்னா அதை வைத்து இட்லி உப்புமா தான் செய்வோம் ஆனா எல்லாருக்குமேலா இந்த இட்லி உப்புமா…

18 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 18 மே 2024!

மேஷம் எதிர்பாராத பயணம் களைப்பை ஏற்படுத்தலாம். இன்று பொறுமை குறைவாக இருக்கும் - அதனால் கவனமாக இருங்கள். வேலையில் இன்று…

21 மணி நேரங்கள் ago

வீட்டு கதவு ஜன்னலை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் திறந்து வைப்பதால் ஏற்படும் அதிர்ஷ்டங்கள்

இந்துக்களுக்கு பொதுவாக ஆன்மீகத்திலும் ஜோதிடத்திலும் வாஸ்து சாஸ்திரத்திலும் அதிகப்படியான நம்பிக்கை இருக்கும் அந்த வகையில் ஒரு வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம்…

1 நாள் ago

குடல் குழம்பு இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

ஆட்டுக்கறி குழம்பு ஆட்டு குடல் குழம்பு ஆட்டு ஈரல் ப்ரை, சுவரொட்டி ஃப்ரை, மட்டன் சூப், மட்டன் மூளை ப்ரை,…

2 நாட்கள் ago