கேரளா ஸ்பெஷல் இஞ்சி புளி சிக்கன் இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க! இவ்வளவு டேஸ்ட்டான்னு நீங்களே ஆச்சரியப்படுவீங்க!

- Advertisement -

கேரளாவில் ஓனத்தின் போது ரொம்ப ஸ்பெஷலான ஒரு உணவு வகைகள்ல முக்கியமான இடம் பிடிக்கிறது இஞ்சுப புளி. அந்த இஞ்சி புளிய வச்சு நம்ம இஞ்சி புளி சிக்கன் செய்ய இருக்கோம். கேரள உணவுகள் எல்லாமே ரொம்பவே ருசியாவும் சுவையாகவும் இருக்கும். அந்த வகையில் கேரள உணவுகளை அறுசுவையும் கலந்து இருக்கிற உணவு பட்டியல்ல முக்கியமான இடம் பிடித்த ஒரு உணவு அப்படின்னு பாத்தீங்கன்னா இஞ்சி புளி.

-விளம்பரம்-

இது ஓனத்துக்கு ஸ்பெஷலா பண்ற ஒரு உணவு வகை. இந்த இஞ்சி புளியை யூஸ் பண்ணி சிக்கன் எப்படி செய்ய போறோம் அப்படிங்கறது இன்றைக்கு தெரிஞ்சுக்க இருக்கோம். இந்த இஞ்சி புளி சிக்கன் ரொம்ப சுவையாவும் புளிப்பு சுவை கார சுவை எல்லாம் கலந்து நல்ல ரொம்ப ஃபிளேவர் ஃபுல்லா இருக்க போகுது.

- Advertisement -

இந்த இஞ்சி புளி சிக்கன் குழந்தைகளுக்கு பெரியவர்கள் எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும். காரணம் இதில இருக்கிற புளிப்பு சுவை சிலருக்கு காரமான சிக்கன் பிடிக்கும் ஆனால் இது புளிப்பு இனிப்பு காரம் அப்படினு எல்லாமே கலந்த மாதிரியான ஒரு டேஸ்ட் இருக்கப் போகிறது. அதனால சிக்கன் எல்லாருக்குமே ரொம்பவே பிடிக்கும் நிறைய விரும்பி சாப்பிடுவாங்க.

சில உணவுகளை பார்த்தாலே நாக்குல நீர் வடியும் இல்லையா அந்த மாதிரி இந்த இஞ்சி புளி சிக்கன் சாப்பிடனும்னு நினைக்கும் போதே நாக்கில் எச்சில் வரும். சரி வாங்க எப்படி இந்த இஞ்சி புளி சிக்கன் செய்யறது அப்படினு தெரிஞ்சிக்கலாம்.

Print
No ratings yet

இஞ்சி புளி சிக்கன் | Ginger Tamarind Chicken In Tamil

இஞ்சி புளி சிக்கன் குழந்தைகளுக்கு பெரியவர்கள் எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும். காரணம் இதில இருக்கிற புளிப்பு சுவை சிலருக்கு காரமான சிக்கன் பிடிக்கும் ஆனால் இது புளிப்பு இனிப்பு காரம் அப்படினு எல்லாமே கலந்த மாதிரியான ஒரு டேஸ்ட் இருக்கப் போகிறது. அதனால சிக்கன் எல்லாருக்குமே ரொம்பவே பிடிக்கும் நிறைய விரும்பி சாப்பிடுவாங்க. சில உணவுகளை பார்த்தாலே நாக்குல நீர் வடியும் இல்லையா அந்த மாதிரி இந்த இஞ்சி புளி சிக்கன் சாப்பிடனும்னு நினைக்கும் போதே நாக்கில் எச்சில் வரும். சரி வாங்க எப்படி இந்த இஞ்சி புளி சிக்கன் செய்யறது அப்படினு தெரிஞ்சிக்கலாம்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: Side Dish, starters
Cuisine: tamil nadu
Keyword: Ginger Tamarind Chicken
Yield: 4
Calories: 99.93kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1/2 கிலோ சிக்கன்
  • 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1 ஸ்பூன் மிளகாய் தூள்
  • 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1/2 ஸ்பூன் மிளகு தூள்
  • 1/2 எலுமிச்சை பழம்
  • கொத்தமல்லி சிறிதளவு
  • கறிவேப்பிலை சிறிதளவு
  • உப்பு தேவையானஅளவு

இஞ்சி புளி செய்ய

  • 50 கிராம் இஞ்சி
  • புளி எலுமிச்சை அளவு
  • 1 ஸ்பூன் கடுகு
  • 1/2 ஸ்பூன் வெந்தயம்
  • 1/2 ஸ்பூன் வெங்காயம்
  • 2 பச்சைமிளகாய்
  • 3 காய்ந்தமிளகாய்
  • 1 ஸ்பூன் மிளகாய்தூள்
  • 1 ஸ்பூன் மல்லி தூள்
  • 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்
  • 2 ஸ்பூன் வெல்லம்
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • முதலில் சிக்கனை கழுவி சுத்தம் செய்து எடுத்து  வைத்துகொள்ள வேண்டும். பின் சிக்கனில் மிளகாய்தூள், மஞ்சள் தூள், மிளகுத்தூள், உப்பு சேர்த்து நன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும்.
  • பிறகு அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.அதில் எலுமிச்சை பழத்தை சாறு பிழிந்து சேர்த்து சிறிது கறிவேப்பிலையோடு நன்றாக பிசறி கால் மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
     
  • அடுப்பில் ஒரு வானிலையை வைத்து சிக்கன்களை பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் சேர்த்து ஊற வைத்து எடுத்துள்ளசிக்கன் துண்டுகளை சேர்த்து இருபுறமும் திருப்பிப் போட்டு நன்றாக பொரித்து எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
  • அடுப்பில் ஒரு கடாயை வைத்து சிறிதளவு எண்ணெய் ஊற்றி இஞ்சியை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி நன்றாக வதக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். வதக்கி எடுத்துள்ள இஞ்சி துண்டுகளை ஆற  வைத்துஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடியாக அரைத்தெடுத்துக் கொள்ளவும்.
  •  பிறகு ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, வெந்தயம் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும். வெங்காயம் பொன்னிறமாக வதங்கிய பிறகு அதில் பச்சைமிளகாய், மிளகாய் தூள், மஞ்சள் தூள்,காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து நன்றாக கலந்து விடவும் .
  • இந்த கலவையில்  கெட்டியாககரைத்து வைத்துள்ள புளி கரைசலை சேர்த்து நன்றாக கலந்து விட்டு மூடி போட்டு கொதிக்க வைக்கவும்.புளி நன்றாக கொதித்து வந்த பிறகு அதில் அரைத்து வைத்துள்ள இஞ்சியை சேர்த்து நன்றாக கலக்கவும்.

Nutrition

Serving: 600g | Calories: 99.93kcal | Carbohydrates: 13.91g | Protein: 3.49g | Sodium: 54.88mg | Potassium: 77.95mg | Fiber: 1.27g | Vitamin C: 606mg | Calcium: 24.71mg | Iron: 0.21mg

இதையும் படியுங்கள் : காரசாரமான ஆந்திரா ஸ்டைல் சிக்கன் ஃப்ரை வீடே மணக்க மணக்க இப்படி செஞ்சி பாருங்க!

-விளம்பரம்-