காரசாரமான ஆந்திரா ஸ்டைல் சிக்கன் ஃப்ரை வீடே மணக்க மணக்க இப்படி செஞ்சி பாருங்க!

- Advertisement -

அசைவ உணவுகளில் ரொம்ப அதிகமான இடம்  பிடித்திருக்கிறது சிக்கன் தான். இந்த சிக்கனை எப்பவுமே எல்லாரும் வெரைட்டி வெரைட்டியா சாப்பிடணும்னு ஆசைப்படுவாங்க. அந்த மாதிரி  வித்தியாசமா சிக்கன் செய்து எப்படி சாப்பிடணும் அப்படி என்ற எண்ணப் அசைவபிரியர்களுக்கு இருக்கும்.  சிக்கன் அதிக புரதச்சத்து நிறைந்தது. அப்படின்னா புரதச்சத்து குறைபாடு உள்ளவர்களுக்கு தேவையான சத்தே அதிலிருந்து கிடைக்கும்.

-விளம்பரம்-

சிக்கன்ல நிறைய வெரைட்டி சாப்பாடுகள் இருக்கு. சிக்கன் குழம்பு , சிக்கன் 65, சிக்கன் டிக்கா, இப்படி சிக்கன் உணவுகளை நிறைய இருக்கு. ஆனால் எப்பவுமே சிக்கனில் குழம்பு வைத்து ஒரு வறுவல் செய்து சாப்பிடுறதோட சுவையே தனிதான். அப்படி இன்னைக்கு நாம சிக்கனில் ஆந்திரா ஸ்டைலில் வறுவல் பண்ண போறோம். ஆந்திரா ஸ்டைல் அப்படின்னாலே நமக்கு ஞாபகம் வருது மசாலா நல்ல காரசாரமான உணவுகள் தான்.

- Advertisement -

ஆந்திராவோட உணவுகள் சிக்கன் வறுவல் காரசாரமாக நாம் செய்து சாப்பிட போறோம். எப்படி பண்றது அப்படின்னு பார்க்கலாம் அதிக புரோட்டின் சிக்கன்ல இருக்கு. அதனால நாம புரதச்சத்து குறைபாட  சிக்கன் சாப்பிட்டு சத்து தேவையை பூர்த்தி பண்ணிக்கலாம்.

சிக்கனோட உணவு வகைகள் அதிகம் அதுல விதவிதமான டிஷ்ஷஸ் பண்ணிட்டு இருப்பாங்க. எல்லாமே வித்தியாசமாகவும் புதுவிதமான சுவையாகவும் இருக்கும். ஆந்திரா ஸ்டைல மசாலா ரெடி பண்ணிட்டு அதை சிக்கன் வறுவல் பண்ண போறோம். இதுல நம்ம தண்ணியே சேர்க்க போறது இல்ல எண்ணெய் கூட மசாலாவ சேர்த்து மிதமான தீயில் வைத்துஇந்த ஆந்திரா ஸ்டைல் சிக்கன் வறுவல் செய்ய போறோம். வாங்க எப்படி இருந்த இந்த ஆந்திரா ஸ்டைல் சிக்கன் ப்ரை பண்ணலாம் அப்படின்னு பார்க்கலாம்.

Print
5 from 1 vote

ஆந்திரா சிக்கன் ஃப்ரை | Andhra Chicken Fry Recipe In tamil

அசைவ உணவுகளில் ரொம்ப அதிகமான இடம்  பிடித்திருக்கிறதுசிக்கன் தான். இந்த சிக்கனை எப்பவுமே எல்லாரும் வெரைட்டி வெரைட்டியா சாப்பிடணும்னு ஆசைப்படுவாங்க. அந்த மாதிரி  வித்தியாசமாசிக்கன் செய்து எப்படி சாப்பிடணும் அப்படி என்ற எண்ணப் அசைவபிரியர்களுக்கு இருக்கும்.  சிக்கன்அதிக புரதச்சத்து நிறைந்தது. அப்படின்னா புரதச்சத்து குறைபாடு உள்ளவர்களுக்கு தேவையான சத்தே அதிலிருந்து கிடைக்கும். நம்ம தண்ணியே சேர்க்க போறது இல்ல எண்ணெய் கூட மசாலாவ சேர்த்து மிதமான தீயில் வைத்துஇந்த ஆந்திரா ஸ்டைல் சிக்கன் வறுவல் செய்ய போறோம்.
Prep Time5 minutes
Active Time5 minutes
Course: LUNCH, starters
Cuisine: andhra
Keyword: Andhra Chicken Fry
Yield: 4
Calories: 295kcal

Equipment

 • 1 கடாய்

தேவையான பொருட்கள்

சிக்கன் ஊற வைக்க

 • 1 கிலோ சிக்கன்
 • 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள்
 • 4 ஸ்பூன் மிளகாய் தூள்
 • 1 ஸ்பூன் உப்பு

ஆந்திரா ஸ்டைல் மசாலாவிற்கு

 • 2 ஸ்பூன் தனியா
 • 1 ஸ்பூன் சீரகம்
 • 1 ஸ்பூன் சோம்பு
 • 1 ஸ்பூன் மிளகு
 • 3 ஏலக்காய்
 • 4 கிராம்பு
 • 1 துண்டு பட்டை
 • 6 காய்ந்த மிளகாய்
 • 4 காஷ்மீரி மிளகாய் நிறத்திற்காக

 வறுவல் செய்ய

 • எண்ணெய்  தேவையான அளவு
 • 4 வெங்காயம்
 • 3 பச்சைமிளகாய்
 • 2 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
 • உப்பு தேவையான அளவு
 • 1 கொத்து கறிவேப்பிலை
 • கொத்தமல்லி சிறிதளவு

செய்முறை

 • முதலில் சிக்கனை நன்றாக கழுவி எடுத்து வைத்துக் வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் சிக்கனை வைத்து அதில் 4 ஸ்பூன் மிளகாய் தூள், 12 ஸ்பூன் மஞ்சள் தூள் 1 ஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாக பிசறி ஒரு 15 நிமிடம் தனியாக ஊற வைக்கவும்.
 • பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் சேர்க்காமல் தனியா, சீரகம் , சோம்பு , மிளகு, பட்டை , ஏலக்காய், கிராம்பு, காய்ந்த மிளகாய் , காஷ்மீர் மிளகாய்( இந்த காஷ்மீரி மிளகாய் நிறத்திற்காக தான் வேண்டுமென்றால் சேர்த்துக் கொள்ளலாம் இல்லை என்றால் தேவையில்லை) இவைகளை நன்றாக மனம் வரும் வரை வறுத்தெடுத்து ஆற வைத்துக் கொள்ள வேண்டும்.
 • பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் ஆற வைத்துள்ள மசாலாபொருட்களை நன்றாக பொடியாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு வானலியை வைத்து என்னை ஊற்றி காய்ந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்.
 •  வெங்காயம் நன்றாக வதங்கிய பிறகு கறிவேப்பிலை ,இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும் இஞ்சி பூண்டு விழுதும் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
 • பின் மசாலாவில் கலந்து ஊற வைத்துள்ள சிக்கனைகடாயில் சேர்த்து நன்றாக கிளறி விடவும். இந்த வறுவலுக்கு நாம் தண்ணீர் சேர்க்க போவதில்லை ஆகையால் தேவையான அளவு எண்ணெய் சேர்த்துக் கொள்ளலாம்.
 •  இவை நன்றாக கலந்த பிறகு அரைத்து வைத்துள்ள ஆந்திரா ஸ்டைல் மசாலாவில் இருந்து 1 ஸ்பூன் மட்டும் முதலில் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.
 • மசாலா நன்றாக கலந்த பிறகுமிதமான தீயில்  மூடிபோட்டு ஒரு பத்து நிமிடம் வேக வைக்கவும் அடிக்கடி மூடியை திறந்து கிளறி விடவும் . 10 நிமிடம் வெந்த பிறகு மீதமுள்ள ஆந்திரா ஸ்டைல் மசாலாவை சிக்கனில் கலந்து நன்றாக கிளறி விடவும் .
 • சிக்கனில் உள்ள நீரிலேயே இந்த நன்றாக வெந்துவிடும் .  மசாலாவின்வாசனைகள் மாறிய பிறகு அதில் சிறிதளவு கொத்தமல்லி தலை தூவி பரிமாறினால் காரசாரமான ஆந்திரா ஸ்டைல் சிக்கன் ப்ரை தயார்.

Nutrition

Serving: 200g | Calories: 295kcal | Carbohydrates: 7.8g | Saturated Fat: 14g | Cholesterol: 99mg | Sodium: 1124mg | Potassium: 553mg | Fiber: 1.2g | Vitamin A: 5IU | Vitamin C: 54mg | Calcium: 11mg