Advertisement
சைவம்

தயிர் சாதத்துக்கு சைடு டிஷ்ஷா இஞ்சி தீயல் இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

Advertisement

இப்போ அடிக்கிற வெயிலுக்கு டெய்லியும் நமக்கு தயிர் சாதம் சாப்பிடணும் அப்படின்னு தான் தோணும். அப்படி தயிர் சாதம் சாப்பிட தோணும்போது அதற்கு சைடு டிஷ் எப்பவும் ஒரே மாதிரியான ரெசிப்பிஸ் செய்யாம ஒரு தடவை இந்த இந்த மாதிரி இஞ்சி திங்கள் செஞ்சு சாப்பிட்டு பாருங்க கண்டிப்பா இன்னும் ஒரு தட்டு சேர்த்து தயிர் சாதம் சாப்பிடுவீங்க அந்த அளவுக்கு செம டேஸ்டா இருக்கும்.

இஞ்சி சாப்பிடுவது நம்ம செரிமானத்துக்கு ரொம்பவே நல்லது ஆனா வேறு எதுலையாவது இஞ்சி போட்டு கொடுத்தா குழந்தைங்க ரொம்ப விரும்பி சாப்பிட மாட்டாங்க அதனால அவங்களுக்கு புடிச்ச தயிர் சாதத்துக்கு கூட இந்த இஞ்சி தீயல் வைத்துக் கொடுத்தீங்கன்னா கண்டிப்பா நல்லா விரும்பி சாப்பிடுவாங்க. ரொம்பவே டேஸ்ட்டா அட்டகாசமா இருக்கக்கூடிய இந்த இஞ்சி தீயல் செய்வது ரொம்ப ஈஸியான ஒன்று.

Advertisement

காரம் இனிப்பு இரண்டு சேர்ந்து ஒரு அட்டகாசமான சுவைல இருக்கும். சட்டுனு ஒரு பத்து நிமிஷத்திலேயே இதை செஞ்சு முடிச்சிடலாம். ஆனா டேஸ்ட்டும் வேற லெவல்ல அட்டகாசமாக இருக்கும். நீங்க எங்கேயாவது பக்கத்துல டூர் போகும் போது கூட இந்த இஞ்சி தீயல் செய்து எடுத்துட்டு போகலாம். அட்டகாசமான டேஸ்ட்ல இருக்கக்கூடிய இந்த இஞ்சி தீயல் கண்டிப்பா எல்லாருடைய ஃபேவரட் ஆகவும் மாறிடும். இப்ப வாங்க இந்த இஞ்சி தீயல் எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்

இஞ்சி தீயல் | Ginger Theeyal Recipe In Tamil

Print Recipe
இஞ்சி சாப்பிடுவது நம்ம
Advertisement
செரிமானத்துக்கு ரொம்பவே நல்லது ஆனா வேறு எதுலையாவது இஞ்சி போட்டு கொடுத்தா குழந்தைங்கரொம்ப விரும்பி சாப்பிட மாட்டாங்க அதனால அவங்களுக்கு புடிச்ச தயிர் சாதத்துக்கு கூடஇந்த இஞ்சி தீயல் வைத்துக் கொடுத்தீங்கன்னா கண்டிப்பா நல்லா விரும்பி சாப்பிடுவாங்க.ரொம்பவே டேஸ்ட்டா அட்டகாசமா இருக்கக்கூடிய இந்த இஞ்சி தீயல் செய்வது ரொம்ப ஈஸியான ஒன்று. அட்டகாசமான டேஸ்ட்ல இருக்கக்கூடிய இந்த இஞ்சி
Advertisement
தீயல் கண்டிப்பா எல்லாருடைய ஃபேவரட் ஆகவும் மாறிடும்.இப்ப வாங்க இந்த இஞ்சி தீயல் எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்
Course Side Dish
Cuisine tamil nadu
Keyword Ginger Theeyal
Prep Time 5 minutes
Cook Time 9 minutes
Servings 4
Calories 69

Equipment

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி

Ingredients

  • 100 கிராம் இஞ்சி
  • 10 சின்ன வெங்காயம்
  • 5 பல் பூண்டு
  • 3 டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல்
  • 1 டேபிள் ஸ்பூன் நாட்டுச் சர்க்கரை
  • 1 டீஸ்பூன் கடுகு உளுத்தம்பருப்பு
  • 1/2 டீஸ்பூன் பெருங்காயத்தூள்
  • 11 கொத்து கருவேப்பிலை
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

Instructions

  • முதலில் இஞ்சி கழுவி சுத்தம் செய்து சிறு துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ளவும்
  • ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய இஞ்சி துண்டுகளை சேர்த்து நன்றாக வதக்கி தனியாக எடுத்துக் கொள்ளவும்
  • பிறகு வெங்காயம் பூண்டு தேங்காய் துருவல் அனைத்தையும் சேர்த்து நன்றாக வதக்கி ஆற வைத்து இஞ்சியுடன்சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
  • ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு உளுந்தம் பருப்பு கருவேப்பிலை பெருங்காயத்தூள் போட்டு தாளித்து அரைத்து வைத்துள்ளதை சேர்த்து வதக்கவும்
     
  • பிறகு தேவையான அளவு உப்பு மற்றும் நாட்டுச் சர்க்கரை சேர்த்து இறக்கினால் சுவையான இஞ்சி தீயல் தயார்

Nutrition

Serving: 500g | Calories: 69kcal | Carbohydrates: 136g | Protein: 9.87g | Saturated Fat: 1.4g | Sodium: 38mg | Potassium: 387mg
Advertisement
Ramya

Recent Posts

வைகாசி விசாகத்தில் முருகப் பெருமானை வழிபட வேண்டிய நேரம்

உலகோர் அனைவருக்கும் தெய்வமாக, ஸ்கந்தன், சுப்பிரமணியன், விசாகன் என்று பல்வேறு திருநாமங்களோடு அருள்பவன் முருகன். அந்த அழகனை, 'தமிழ்க் கடவுள்'…

35 நிமிடங்கள் ago

ஈவினிங் டைம்ல சாப்பிடுவதற்கு இந்த மாதிரி சுட சுட சிக்கன் ரோல் ஒரு தடவை செஞ்சு பாருங்க!

பொதுவா நமக்கு சிக்கன் ரோல் சிக்கன் பப்ஸ் கேக் சமோசா அந்த மாதிரி சாப்பிடனும் போல இருந்துச்சுன்னா அதுக்குன்னு நம்ம…

3 மணி நேரங்கள் ago

இட்லி மீதமாயிடுச்சு அப்படின்னா இந்த மாதிரி மசாலா இட்லி செஞ்சு பாருங்க!

வீட்ல இட்லி மீதமாயிருச்சு அப்படின்னா அதை வைத்து இட்லி உப்புமா தான் செய்வோம் ஆனா எல்லாருக்குமேலா இந்த இட்லி உப்புமா…

11 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 18 மே 2024!

மேஷம் எதிர்பாராத பயணம் களைப்பை ஏற்படுத்தலாம். இன்று பொறுமை குறைவாக இருக்கும் - அதனால் கவனமாக இருங்கள். வேலையில் இன்று…

13 மணி நேரங்கள் ago

வீட்டு கதவு ஜன்னலை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் திறந்து வைப்பதால் ஏற்படும் அதிர்ஷ்டங்கள்

இந்துக்களுக்கு பொதுவாக ஆன்மீகத்திலும் ஜோதிடத்திலும் வாஸ்து சாஸ்திரத்திலும் அதிகப்படியான நம்பிக்கை இருக்கும் அந்த வகையில் ஒரு வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம்…

23 மணி நேரங்கள் ago

குடல் குழம்பு இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

ஆட்டுக்கறி குழம்பு ஆட்டு குடல் குழம்பு ஆட்டு ஈரல் ப்ரை, சுவரொட்டி ஃப்ரை, மட்டன் சூப், மட்டன் மூளை ப்ரை,…

1 நாள் ago