தயிர் சாதத்துக்கு சைடு டிஷ்ஷா இஞ்சி தீயல் இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

- Advertisement -

இப்போ அடிக்கிற வெயிலுக்கு டெய்லியும் நமக்கு தயிர் சாதம் சாப்பிடணும் அப்படின்னு தான் தோணும். அப்படி தயிர் சாதம் சாப்பிட தோணும்போது அதற்கு சைடு டிஷ் எப்பவும் ஒரே மாதிரியான ரெசிப்பிஸ் செய்யாம ஒரு தடவை இந்த இந்த மாதிரி இஞ்சி திங்கள் செஞ்சு சாப்பிட்டு பாருங்க கண்டிப்பா இன்னும் ஒரு தட்டு சேர்த்து தயிர் சாதம் சாப்பிடுவீங்க அந்த அளவுக்கு செம டேஸ்டா இருக்கும்.

-விளம்பரம்-

இஞ்சி சாப்பிடுவது நம்ம செரிமானத்துக்கு ரொம்பவே நல்லது ஆனா வேறு எதுலையாவது இஞ்சி போட்டு கொடுத்தா குழந்தைங்க ரொம்ப விரும்பி சாப்பிட மாட்டாங்க அதனால அவங்களுக்கு புடிச்ச தயிர் சாதத்துக்கு கூட இந்த இஞ்சி தீயல் வைத்துக் கொடுத்தீங்கன்னா கண்டிப்பா நல்லா விரும்பி சாப்பிடுவாங்க. ரொம்பவே டேஸ்ட்டா அட்டகாசமா இருக்கக்கூடிய இந்த இஞ்சி தீயல் செய்வது ரொம்ப ஈஸியான ஒன்று.

- Advertisement -

காரம் இனிப்பு இரண்டு சேர்ந்து ஒரு அட்டகாசமான சுவைல இருக்கும். சட்டுனு ஒரு பத்து நிமிஷத்திலேயே இதை செஞ்சு முடிச்சிடலாம். ஆனா டேஸ்ட்டும் வேற லெவல்ல அட்டகாசமாக இருக்கும். நீங்க எங்கேயாவது பக்கத்துல டூர் போகும் போது கூட இந்த இஞ்சி தீயல் செய்து எடுத்துட்டு போகலாம். அட்டகாசமான டேஸ்ட்ல இருக்கக்கூடிய இந்த இஞ்சி தீயல் கண்டிப்பா எல்லாருடைய ஃபேவரட் ஆகவும் மாறிடும். இப்ப வாங்க இந்த இஞ்சி தீயல் எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்

Print
5 from 1 vote

இஞ்சி தீயல் | Ginger Theeyal Recipe In Tamil

இஞ்சி சாப்பிடுவது நம்ம செரிமானத்துக்கு ரொம்பவே நல்லது ஆனா வேறு எதுலையாவது இஞ்சி போட்டு கொடுத்தா குழந்தைங்கரொம்ப விரும்பி சாப்பிட மாட்டாங்க அதனால அவங்களுக்கு புடிச்ச தயிர் சாதத்துக்கு கூடஇந்த இஞ்சி தீயல் வைத்துக் கொடுத்தீங்கன்னா கண்டிப்பா நல்லா விரும்பி சாப்பிடுவாங்க.ரொம்பவே டேஸ்ட்டா அட்டகாசமா இருக்கக்கூடிய இந்த இஞ்சி தீயல் செய்வது ரொம்ப ஈஸியான ஒன்று. அட்டகாசமான டேஸ்ட்ல இருக்கக்கூடிய இந்த இஞ்சி தீயல் கண்டிப்பா எல்லாருடைய ஃபேவரட் ஆகவும் மாறிடும்.இப்ப வாங்க இந்த இஞ்சி தீயல் எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்
Prep Time5 minutes
Active Time9 minutes
Course: Side Dish
Cuisine: tamil nadu
Keyword: Ginger Theeyal
Yield: 4
Calories: 69kcal

Equipment

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி

தேவையான பொருட்கள்

  • 100 கிராம் இஞ்சி
  • 10 சின்ன வெங்காயம்
  • 5 பல் பூண்டு
  • 3 டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல்
  • 1 டேபிள் ஸ்பூன் நாட்டுச் சர்க்கரை
  • 1 டீஸ்பூன் கடுகு உளுத்தம்பருப்பு
  • 1/2 டீஸ்பூன் பெருங்காயத்தூள்
  • 11 கொத்து கருவேப்பிலை
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • முதலில் இஞ்சி கழுவி சுத்தம் செய்து சிறு துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ளவும்
  • ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய இஞ்சி துண்டுகளை சேர்த்து நன்றாக வதக்கி தனியாக எடுத்துக் கொள்ளவும்
  • பிறகு வெங்காயம் பூண்டு தேங்காய் துருவல் அனைத்தையும் சேர்த்து நன்றாக வதக்கி ஆற வைத்து இஞ்சியுடன்சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
  • ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு உளுந்தம் பருப்பு கருவேப்பிலை பெருங்காயத்தூள் போட்டு தாளித்து அரைத்து வைத்துள்ளதை சேர்த்து வதக்கவும்
     
  • பிறகு தேவையான அளவு உப்பு மற்றும் நாட்டுச் சர்க்கரை சேர்த்து இறக்கினால் சுவையான இஞ்சி தீயல் தயார்

Nutrition

Serving: 500g | Calories: 69kcal | Carbohydrates: 136g | Protein: 9.87g | Saturated Fat: 1.4g | Sodium: 38mg | Potassium: 387mg