ரோட்டுக்கடை ஸ்டைல் ருசியான கோபி மஞ்சூரியன் ரெம்ப சுலபமாம வீட்டிலயே செஞ்சி பாருங்கள்!

கோபி மஞ்சூரியன் என்ற பெயரை கேட்டவுடன் அது அதே நான் வெஜ் உணவு என்று தான் நினைக்கத்தோணும். ஆனால் கோபி மஞ்சூரியன் என்றால் காலிபிளவரில் செய்யப்படும் ஒரு சிற்றுண்டி. சைவம் என்றாலும் அசைவ சுவையை தரும் உணவு தான் கோபி மஞ்சூரியன். முன்பெல்லாம் அதிகளவில் புழக்கத்தில் இல்லாத கோபி மஞ்சூரியன்

By Prem Kumar · 7/3/2024

கோபி மஞ்சூரியன் என்ற பெயரை கேட்டவுடன் அது அதே நான் வெஜ் உணவு என்று தான் நினைக்கத்தோணும். ஆனால் கோபி மஞ்சூரியன் என்றால் காலிபிளவரில் செய்யப்படும் ஒரு சிற்றுண்டி. சைவம் என்றாலும் அசைவ சுவையை தரும் உணவு தான் கோபி மஞ்சூரியன். முன்பெல்லாம் அதிகளவில் புழக்கத்தில் இல்லாத கோபி மஞ்சூரியன் இப்போது எந்த கடைகளில் பார்த்தாலும் மெனு கார்டில் முதல் இடத்தை பிடித்துள்ளது. கோபி மஞ்சூரியன் சீனாவிலிருந்து கல்கத்தாவிற்கு வந்து தங்கிய மக்கள் இந்திய மற்றும் சீன உணவு முறைகளை கலந்து உருவாக்கியதே கோபி மஞ்சூரியன். கோபி மஞ்சூரியன் தற்பொழுது இந்தியாவின் மிகவும் பிரபலமான உணவு வகை. இது எல்லா விதமான விழாக்கள் மற்றும் திருமணங்களிலும் சிறப்பு உணவாக இடம் பெறுகிறது. இந்த கோபி மஞ்சூரியன் சாப்பிடுவதற்கு ரொம்ப சுவையா இருக்கும். இந்த கோபி மஞ்சூரியனை ரோட்டுக்கடை ஸ்டைலில் எப்படி வீட்டிலேயே செய்வது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

இந்த காலிஃப்ளவரில் கால்சியம் சத்து நிறையவே இருக்குது. நம்ம உணவில் அடிக்கடி கால்சியம் உள்ள காலிஃபிளவரை உணவில் சேர்த்துக் கொள்ளும் பொழுது உடலுக்கு அது ரொம்பவே நன்மையை கொடுக்கின்றது. பெரியவர்கள் தொடங்கி வீட்டில் இருக்கும் குட்டி வாண்டுகள் முதற்கொண்டு ரெஸ்டாரண்ட் சென்றால் விரும்பி கேட்பது கோபி மஞ்சூரியன் தான். இதன் ருசி அவ்வளவு பிரியம் அனைவருக்கும். இதனை எளிதாக நாம் வீட்டிலேயே செய்து சாப்பிடலாம். இன்றே செய்து பாருங்கள்! இந்த வெஜ் மஞ்சூரியன் சாப்பிடுவதற்கு சுவையாகவும், செய்வதற்கு சுலபமாகவும் இருக்கும். குறிப்பாக இது பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும் குழந்தைகளுக்கு கொடுத்தால், அவர்கள் விரும்பி சாப்பிடுவதோடு, அவர்களின் பசியும் அடங்கும்.

இதனையும் படியுங்கள் : சுட சுட சோறுடன் சாப்பிட காலிப்ளவர் பட்டாணி பன்னீர் மசாலா இப்படி செய்து பாருங்க! கூட்டுனா இதான் கூட்டு என்ன சுவை!

Recipes AMP · Quick view
View full