மளிகை பொருட்களை வாங்க சிறந்த நாட்கள்!!

சில வீடுகளில் சுப காரியம் நடப்பதில் பெரிய தாமதமும் தடையும் இருக்கும் பத்து வருடங்கள் 20 வருடங்கள் ஆனாலும் கூட சில வீட்டில் சுபகாரியங்கள் நடக்காமல் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கும். அதுமட்டுமல்லாமல் கடன் பிரச்சினை அதிகமாக இருக்கும். வீட்டில் இருப்பவர்களுக்கு ஒரு நல்லது கூட நடக்காமல

By Prem Kumar · 21/7/2025

சில வீடுகளில் சுப காரியம் நடப்பதில் பெரிய தாமதமும் தடையும் இருக்கும் பத்து வருடங்கள் 20 வருடங்கள் ஆனாலும் கூட சில வீட்டில் சுபகாரியங்கள் நடக்காமல் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கும். அதுமட்டுமல்லாமல் கடன் பிரச்சினை அதிகமாக இருக்கும். வீட்டில் இருப்பவர்களுக்கு ஒரு நல்லது கூட நடக்காமல் வீட்டிலும் பல பிரச்சனைகள் வருமானத்தில் தடை கடன் பிரச்சனைகள் என பல பிரச்சினைகள் வந்து கொண்டே இருக்கும். ஒரு சிலர் வீட்டில் மூன்று வேளையும் நன்றாக சாப்பிடுவதே பெரிய கஷ்டமாக இருக்கும் இந்த பிரச்சனைகளுக்கு எல்லாம் தீர்வு தரக்கூடிய ஒரு எளிமையான பரிகாரத்தை பற்றி பார்க்கலாம். சமையலறையை நாம் கோவில் போல பார்க்க வேண்டும் அப்பொழுதுதான் நமக்கு அன்றாடம் சாப்பிடுவதற்கு உணவு கிடைக்கும். சமையலறையில் நாம் பயன்படுத்தக்கூடிய சில மளிகை பொருட்களை எந்த திசையில் வைக்க வேண்டும் என்பதில்தான் வீட்டில் இருக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வும் உள்ளது. சமையல் பொருட்களை எந்த நட்சத்திரத்தில் வாங்கினால் குடும்பத்திற்கு நல்லது சமையல் பொருட்களை சமையலறையில் எந்த இடத்தில் அடுக்கி வைப்பது என்பதை பற்றிய சில விஷயங்களைப் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மளிகை பொருட்கள் வாங்க நல்ல நாள்

பூசம் அனுஷம், உத்திரட்டாதி பூரம் பரணி பூராடம் இந்த ஆறு நட்சத்திர வரக்கூடிய நாட்களில் வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்களை வாங்குவது வீட்டில் விருந்தாளிகளின் வருகையை அதிகரிக்கும். விருந்தாளிகளின் வருகை அதிகரித்தால் வீட்டில் செல்வ செழிப்பும் அதிகரிக்கும். விருந்தாளிகளை உபசரித்து சாப்பாடு போடும் போது நம்முடைய வீட்டில் கடன் சுமை என்பதே இருக்காது வீட்டில் விருந்தாளிகளின் வருகை இல்லை விருந்தினர் உபச்சாரம் இல்லை என்றால் நிச்சயமாக அந்த வீட்டில் தரித்திரம் பிடிப்பதற்கு வாய்ப்பு உள்ளது. வீட்டில் விருந்தினர் வருகை இல்லை என்றால் அந்த வீட்டில் வாழ்க்கைத் துணை இல்லாமல் ஒரு பெண் இருப்பாள் என்றும் கூறப்படுகிறது.

சமையலறையில் மளிகை பொருட்களை வைக்க வேண்டிய இடம்

இந்த குறிப்பிட்ட நட்சத்திரத்தன்று வாங்கி வந்த பொருட்களை மேற்கு மற்றும் தென்மேற்கு மூலையில் வைப்பது நல்லது சமையலறையில் இந்த இரண்டு திசைகளிலும் வாங்கி வந்த மளிகை பொருட்களை பத்திரப்படுத்தி வைத்திருந்தால் வீட்டிற்கு சுபிட்சம் உண்டாகும். வீட்டில் உள்ள பெண்கள் சமையலறையை பூஜை அறை போல பராமரிக்க வேண்டும் நேரமின்மை காரணமாக சில விஷயங்களை செய்ய முடியாமல் போனாலும் காலையில் எழுந்து குளித்து முடித்துவிட்டு தான் பெண்கள் சமையலறைக்கு வரவேண்டும் இது வீட்டில் லட்சுமி கடாட்சத்தை அதிகரிக்கும். சமையலறைக்குள் நுழையும் போதும் சமையலறையை விட்டு வெளியேறும் போதும் குளிப்பது மிகவும் நல்லது. இந்த சிறிய விஷயங்களை பின்பற்றினாலே போதும் வீட்டில் கடஞ்சுமை குறைந்து சுப காரிய தடைகள் குறைந்து நல்ல விஷயங்கள் அனைத்தும் நடக்கும்.

இதனையும் படியுங்கள் : இவ்வளவு நாட்கள் வாடகை கொடுத்தது போதும்! சொந்த வீடு கட்ட நினைப்பவர்கள் இதை செய்யுங்கள் போதும்!

Recipes AMP · Quick view
View full