சுட சுட சாதத்துடன் சாப்பிட காரசாரமான ருசியில் நெல்லிக்காய் தொக்கு இப்படி செஞ்சி பாருங்க!
பொதுவாக தொக்கு என்றாலே அனைவருக்கும் வாயில் எச்சில் ஊரும். அதிலும் நெல்லிக்காய் தொக்கு என்றால் யாருக்கு தான் பிடிக்காது. எனவே அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய நெல்லிக்காய் தொக்கு எப்படி செய்வது என்று இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம். நெல்லிக்காயை கொண்டு ஜாம், தேன், நெல்லிக்
பொதுவாக தொக்கு என்றாலே அனைவருக்கும் வாயில் எச்சில் ஊரும். அதிலும் நெல்லிக்காய் தொக்கு என்றால் யாருக்கு தான் பிடிக்காது. எனவே அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய நெல்லிக்காய் தொக்கு எப்படி செய்வது என்று இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம். நெல்லிக்காயை கொண்டு ஜாம், தேன், நெல்லிக்காய், ஊறுகாய், நெல்லிக்காய் சாதம் என பல்வேறு வித்தியாசமான ரெசிபிகளை செய்யலாம். அதிலும் புளிப்பும் துவர்ப்பும் கலந்த நெல்லிக்காயை கொண்டு தொக்கு செய்தால் படு ஜோராக இருக்கும்.
நெல்லிக்காய் குடலியக்கத்தை சீராக வைக்கும். எனவே இதனை தினமும் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனையை சரிசெய்துவிடலாம். நெல்லிக்காய் சாறுடன் தேன் எலுமிச்சம்பழச் சாறு சம அளவு கலந்து காலையில் மட்டும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் முற்றிலும் குணமாகும். நெல்லிக்காயை தேங்காய் எண்ணெய்யில் போட்டு காய்ச்சி தலைக்கு தேய்த்து குளித்து வர முடி உதிர்வதை தடுக்கும் மற்றும் இளநரையை மாற்றும். முடி நன்கு வளரும். நெல்லிக்காயில் பலவிதமான மருத்து குணங்கள் இருக்கின்றன.
நெல்லிக்காய் சீசன் போதுதான் கிடைக்கும் என்பதால் அதை தொக்கு செய்து ஜாடியில் அடைத்து வைத்தால் ஆண்டு முழுவதும் சாப்பிட்டு பலன்களைப் பெறலாம். இதனை எல்லா விதமான சாதத்திற்கும் வைத்து சாப்பிட்டால் எவ்வளவு சாப்பிட்டோம் என்றே தெரியாது. நீங்களும் இதனை ஒரு முறை செய்து பாருங்கள். மீண்டும் மீண்டும்செய்து தரும்படி வீட்டில் உள்ளவர்கள் கேட்கும் அளவிற்கு இதன் சுவை அருமையாக இருக்கும். இதை அப்படியே சாப்பிடுவதற்கு பதிலாக தொக்கு செய்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
இதனையும் படியுங்கள் : வீடே மணக்க மணக்க ருசியான நெல்லிக்காய் சிக்கன் குழம்பு இப்படி செஞ்சி பாருங்க! ஆஹா இதன் ருசியே தனி ருசி தான்!