Advertisement
அசைவம்

காரசாரமான கீரின் சில்லி சிக்கன் செய்வது எப்படி ?

Advertisement

இன்று நாம் சுவையான மற்றும் காரசாரமான க்ரீன் சில்லி சிக்கன் எப்படி செய்வது என்பது பற்றி தான் பார்க்க இருக்கிறோம். பொதுவாக வார கடைசி நாட்கள் ஆகிவிட்டால் போதும் பெரும்பாலான வீடுகளில் சிக்கன் குழம்பு சிக்கன் கிரேவி என வைத்து சாப்பிடுவார்கள் ஆனால் எப்போதும் போல் ஒரே மாதிரியான சிக்கன் ரெசிபிகளை செய்வதற்கு பதில் நீங்கள் விதவிதமான சிக்கன் ரெசிபிகளை செய்து பார்க்கலாம் அதில் ஒரு ரெசிபி பற்றி தான் இன்று பார்க்க இருக்கிறோம்.

இதையும் படியுங்கள் : காரசாரமான யாழ்பாணம் சிக்கன் ரெசிபி செய்வது எப்படி ?

Advertisement

நீங்கள் இந்த கிரீன் சில்லி சிக்கனை இது போன்ற உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால் அனைவரும் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் மேலும் கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள் அந்த அளவிற்கு காரசாரமான சுவையில் அற்புதமாக இருக்கும். அதனால் இன்று இந்த கிரீன் சில்லி சிக்கன் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

கீரின் சில்லி சிக்கன் | Green Chilli Chicken Recipe in Tamil

Print Recipe
வார கடைசி நாட்கள் ஆகிவிட்டால் போதும் பெரும்பாலான வீடுகளில் சிக்கன் குழம்பு சிக்கன் கிரேவி என வைத்து சாப்பிடுவார்கள் ஆனால் எப்போதும் போல் ஒரே மாதிரியான சிக்கன் ரெசிபிகளை செய்வதற்கு பதில் நீங்கள் விதவிதமான சிக்கன் ரெசிபிகளை செய்து பார்க்கலாம் அதில் ஒரு ரெசிபி பற்றி தான் இன்று பார்க்க இருக்கிறோம். நீங்கள் இந்த கிரீன் சில்லி சிக்கனை இது போன்ற உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால் அனைவரும் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் மேலும் கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள் அந்த அளவிற்கு காரசாரமான சுவையில் அற்புதமாக இருக்கும்.
Course LUNCH, Main Course
Cuisine andhra, Indian
Keyword Green Chicken, கீரின் சிக்கன்
Prep Time 20 minutes
Advertisement
Cook Time 20 minutes
Servings 5 people
Calories 452

Equipment

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி
  • 1 பெரிய பவுள்

Ingredients

சிக்கனை மசாலாவில் ஊற வைக்க

  • 1 KG சிக்கன்
  • 1 tbsp உப்பு
  • ½ பழம் எலுமிச்சை சாறு
  • 1 மேசை கரண்டி இஞ்சி பூண்டு பேஸ்ட்
  • 1 மேசை கரண்டி தயிர்
  • 2 பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது
  • ½ tbsp மஞ்சள் தூள்
  • 1 tbsp கரம மசாலா
  • வெங்காய பேஸ்ட் 2 வெங்காயத்தை அரைத்தது
  • 1 வெங்காயம் நீள்வாக்கில் நறுக்கியது

கீரின் சில்லி சிக்கன் செய்ய

  • 3 மேசை கரண்டி எண்ணெய்
  • ½ tbsp கடுகு
  • 1 tbsp சீரகம்
  • 1 கொத்து கருவேப்பிலை
  • மசாலவில் ஊற வைத்த சிக்கன்
  • அரைத்த பச்சை மிளகாய்
  • கொத்த மல்லி சிறிது

பச்சை மிளகாய் அரைக்க

  • 5 பச்சை மிளகாய்
  • 2 கைப்பிடி கொத்த மல்லி

Instructions

  • முதலில் நாம் வைத்திருக்கும் சிக்கனை நன்கு சுத்தப்படுத்தி
    Advertisement
    ஒரு பெரிய பவுளில் சேர்த்து அதனுடன் மேலே கொடுத்திருக்கும் அளவில் உப்பு, எலுமிச்சைச்சாறு, இஞ்சி பூண்டு விழுது, தயிர், பச்சை மிளகாய், மஞ்சள் தூள், கரம் மசாலா, வெங்காய பேஸ்ட் மற்றும் நீள்வாக்கில் நறுக்கிய வெங்காயம் போன்றவற்றை சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளுங்கள்.
  • பின்பு நாம் பிசைந்து வைத்திருக்கும் சிக்கனை மூடி வைத்து ஒரு மணி நேரங்கள் நன்றாக ஊற வைத்துக் கொள்ளுங்கள். பின்பு ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும்.
  • பின் இதனுடன் கடுகு சீரகம் மற்றும் கருவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ளுங்கள் பின்பு இனுடன் நாம் மசாலில் ஊறவைத்த சிக்கனை சேர்த்து நன்கு கிளறி விட்டு வதக்கிக் கொள்ளவும்.
  • பின் கடாயை மூடி வைத்து ஒரு 15 நிமிடங்கள் நன்கு வேக வைத்துக் கொள்ளுங்கள். இந்த சமயத்தில் ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொண்டு அதில் பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லி சேர்த்து தண்ணி ஊற்றாமல் அரைத்து கொள்ளுங்கள்.
  • பின் சிக்கன் நன்கு வந்ததும் இதனுடன் நாம் அரைத்த பச்சை மிளகாய் சேர்த்து கிளறி விட்டுக் கொள்ளுங்கள். பின் சிக்கனும் எண்ணெயும் தனியாக பிரியும் வரை வதக்கி கொள்ளவும்.
  • பின் சிறிது கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கி விடுங்கள். அவ்வளவு தான் சுவையான கிரீன் சில்லி சிக்கன் தயாராகிவிட்டது.

Nutrition

Serving: 1000kG | Calories: 452kcal | Carbohydrates: 11g | Protein: 34g | Fat: 21g | Saturated Fat: 4g | Cholesterol: 13mg | Sodium: 36mg | Potassium: 1044mg | Fiber: 2g | Sugar: 3g
Advertisement
Prem Kumar

Recent Posts

காலை உணவுக்கு ருசியான ஓட்ஸ் பச்சைப்பட்டாணி அடை இப்படி செய்து பாருங்க!

காலை வேளையில் என்ன சமைப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் தோசை மாவு இல்லையா? கவலை வேண்டாம் ஈஸியாக…

2 மணி நேரங்கள் ago

செவ்வாய் கிழமையில் மறந்தும் கூட இந்த விஷயங்களை செய்து விடாதீர்கள்

வாழ்க்கையில் நாம் செய்யும் ஒவ்வொரு சின்ன சின்ன விஷயங்களும் கூட நம்முடைய வாழ்க்கையில் சுப மற்றும் அசுப பலன்களை ஏற்படுத்தும்…

3 மணி நேரங்கள் ago

முட்டை இருந்தால் மட்டும் போதும் ருசியான முட்டை பணியாரம் செய்து விடலாம்! மாலை நேரத்திற்கு ஏற்ற பக்காவான ஸ்நாக்ஸ்!

அனைவரும் தினமும் ஒரு முட்டை சாப்பிட்டால் உடலுக்கு மிகவும் நல்லது. பெரியவர்கள் தினமும் இரண்டு முட்டை கூட அசால்டாக சாப்பிடுவார்கள்…

4 மணி நேரங்கள் ago

சுவையான கேக் வீட்டிலயே சாப்பிட நினைத்தால் ஒரு முறை வாழைப்பழ கப் கேக் செஞ்சு பாருங்க, வாயில் வைத்தவுடன் கரையும்!

சுவையான உணவுகளைச் சமைத்துச் சாப்பிடுவது என்பது ஒரு வகை அலாதியான இன்பம் தான். அதிலும் நமக்குப் பிடித்த உணவுகளைச் சமைப்பது…

6 மணி நேரங்கள் ago

சிம்பிளான அவரைக்காய் பொரியல் எப்படி ஒரு தடவை செஞ்சு சாப்பிடுங்க!

டெய்லி ஏதாவது ஒரு காய்கறி சாப்பிடுவது ரொம்ப நல்லது. அந்த வகையில பச்சை காய்கறிகளான அவரைக்காய் பீன்ஸ் பட்டாணி வெண்டைக்காய்…

6 மணி நேரங்கள் ago

2024 சித்திரை அமாவாசை வழிபாடு இரண்டு மடங்கு பலன்களை நமக்கு கொடுக்கும்!

தமிழ் மாதத்தில் முதல் மாதமாக வரக்கூடிய சித்திரை மாதம் தெய்வ வழிபாட்டிற்கு மிகவும் முக்கியமான மாதமாக கருதப்படுகிறது. சூரிய பகவான்…

8 மணி நேரங்கள் ago