Advertisement
அசைவம்

காரசாரமான பச்சை நிற மீன் வறுவல் ஒருமுறை இப்படி செய்து அசத்துங்கள்!

Advertisement

கடல் சார்ந்த உணவுகளில் மீன் முதன்மையானது அந்த மீனில் நாம் குழம்புகள், வறுவல்கள், தந்தூரிகள் கூட செய்து சாப்பிட்டு இருக்கோம். இப்போ நாம மீன் வறுவல் பல வண்ணங்களில் வறுவல் சாப்பிட்டிருப்போம். இன்னைக்கு  நம்ம பண்ண போற வறுவல் பச்சை நிற மீன் வறுவல். இந்த பச்சை நிறம் சுவையாகவும் இருக்கும். இந்த பச்சை நிற மீன் வறுவல் அந்த நிறத்துக்காகவே நல்ல விரும்பி சாப்பிடுவாங்க குழந்தைகள்.

சில குழந்தைகளுக்கு மீன் சாப்பிடுவதற்கு பிடிக்காமல் இருக்கும் அந்த மாதிரி குழந்தைகளுக்கு இந்த மாதிரி வித்தியாசமான கலர்கள்ல மீன் வறுவல் செய்து கொடுக்கும் பொழுது அது புதிதாக இருக்கு அப்படிங்கற ஒரு ஆர்வத்துல நிச்சயமா இந்த மாதிரி வித விதமான கலர் உணவுகளை  சாப்பிடுவாங்க. நம்ம பச்சை கலர்ல சிக்கன் தந்தூரி தான் செய்துது சாப்பிட்டு இருப்போம். இது மீன் இப்போ இந்த மீனை நம்ம தந்துரியாவும் செய்து சாப்பிடலாம் அல்லது வறுவலாகவும் செய்து சாப்பிடலாம். ஆனால் இன்றைக்கு பச்சை மீன் வறுவல் செய்ய போறோம்.

Advertisement

இதுக்கு நாம் பயன்படுத்துற மீன்களை துண்டுகள் போடாம அப்படியே முழு நீள மீனாகவே நீங்க வறுத்து எடுத்து சாப்பிடும் பொழுது இன்னுமே ரொம்ப நல்லா இருக்கும். சாப்பிடனும் அப்படினு ஆர்வம் கொடுக்கிறதா இருக்கும். இந்த பச்சை நிற மீன் செய்வதற்கு ரொம்பவே சுலபமாக மசாலா தயார் செஞ்சிடலாம். அதிகமான பொருட்கள் தேவைப்படாது ரொம்ப ரொம்ப சுலபமா இந்த பச்சை நிற மீன் வறுவல் எப்படி செய்யலாம் அப்படிங்கிறத தெரிஞ்சுக்கலாம்.

பச்சை நிற மீன் வறுவல் | Green Fish Fry Recipe In Tamil

Print Recipe
சில குழந்தைகளுக்கு மீன் சாப்பிடுவதற்கு பிடிக்காமல் இருக்கும் அந்த மாதிரி குழந்தைகளுக்கு இந்த மாதிரி வித்தியாசமான கலர்கள்ல மீன் வறுவல் செய்து கொடுக்கும் பொழுது அது புதிதாக
Advertisement
இருக்கு அப்படிங்கற ஒரு ஆர்வத்துல நிச்சயமா இந்த மாதிரி வித விதமான கலர் உணவுகளை  சாப்பிடுவாங்க.நம்ம பச்சை கலர்ல சிக்கன் தந்தூரி தான் செய்துது சாப்பிட்டு இருப்போம். இது மீன் இப்போ இந்த மீனை நம்ம தந்துரியாவும் செய்து சாப்பிடலாம் அல்லது வறுவலாகவும் செய்து சாப்பிடலாம். ஆனால் இன்றைக்கு பச்சை மீன் வறுவல் செய்ய போறோம்.
Course Fry, starters
Cuisine tamil nadu
Keyword Green Fish Fry
Prep Time
Advertisement
5 minutes
Cook Time 6 minutes
Servings 4
Calories 160

Equipment

  • 1 பெரிய பவுள்
  • தோசை கல்

Ingredients

  • 4 முழு மீன்கள்
  • 6 பச்சைமிளகாய்
  • 1 துண்டு இஞ்சி
  • 1 பல் பூண்டு
  • 1 கைப்பிடி கொத்தமல்லி
  • 1 கைப்பிடி புதினா
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

Instructions

  • மீன்களை முழுமையாக வறுக்க இருப்பதால் முதலில் மீனை நன்றாக சுத்தம் செய்து கழுவிக்கொள்ள வேண்டும்.
  • தலைப்பகுதியில் உள்ள செவுள்கள், வயிற்றில் உள்ள குடல்கள் ,மற்றும் தோல் பகுதியிலுள்ள செதில்கள், துடுப்புகள் போன்றவற்றை நீக்கி விட்டு நன்றாக கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் கொத்தமல்லி, புதினா, பச்சை மிளகாய் , இஞ்சி , பூண்டு இவற்றை சேர்த்து நன்றாக விழுதாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  •  ஒரு பாத்திரத்தில் அரைத்து எடுத்து வைத்துள்ள விழுதை சேர்த்து அதில் தேவையான அளவு உப்பு, 1 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து விடவும்.
  • பின் கழுவி சுத்தம் செய்து வைத்துள்ள மீனைகளை எடுத்து அதில் மசாலாவை தடவி அரை மணி நேரம் எடுத்து ஊற வைக்கவும்.
     
  • மசாலா தடவிய மீன்கள் அரை மணி நேரம் ஊறிய பிறகு ஒரு அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி ஊறிய மீன்களை வைத்து பொரிக்கவும்.
     
  • ஒரு புறம்வெந்ததும் மறுபுறம் திருப்பி போட்டு நன்றாக வெந்த பிறகு எடுத்து பரிமாறினால் சூடான சுவையான பச்சை நிற மீன் வருவல் தயார்.

Nutrition

Serving: 300g | Calories: 160kcal | Protein: 12g | Fat: 2g | Saturated Fat: 0.5g | Potassium: 550mg | Sugar: 0.2g | Iron: 0.3mg
Advertisement
Prem Kumar

Recent Posts

குளு குளுனு 90’Kids தேங்காய் பால் குச்சி ஐஸ் அடுப்பு பக்கமே போகாம சுலபமாக இப்படி செய்து பாருங்க!

ஐஸ் ஐஸ் ஐஸ் பால் ஜஸ் , சேமியா ஐஸ் 90ஸ் கிட்ஸோட பிடித்தமான சத்தம் அப்படினு சொல்லலாம். இப்பல்லாம்…

53 நிமிடங்கள் ago

இன்றைய ராசிபலன் – 21 மே 2024!

மேஷம் புதிய பிரச்சினைகள் தோன்றி மன அழுத்தத்தை ஏற்படுத்தும். பணம் பற்றாக்குறையால் இன்று வீட்டில் வேற்றுமை காணப்படும். வேலையில் நல்ல…

8 மணி நேரங்கள் ago

மணமணக்கும் ருசியான கேரட் புலாவ் ஈஸியாக பதினைந்தே நிமிடத்தில் இப்படி செய்து பாருங்கள் மிகவும் ருசியாக இருக்கும்!!

புலாவ் உலகம் முழுவதும் பிரபலமடைந்து இருக்கும் ஒரு உணவு வகை. பொதுவாக வெரைட்டி ரைஸ் என்றாலே குழந்தைகள் அதிகம் விரும்பி…

1 நாள் ago

காலை வேளையில் உடல் சூட்டை குறைக்கும் இந்த வெந்தய களியை ஒரு முறை செய்து கொடுங்கள் பின் அடிக்கடி கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்!!!

அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தும் பல உணவு பொருள்கள், நமக்கு மருந்தாகவும் பயன்படக்கூடியவை. அதில் வெந்தயத்திற்கு மிக முக்கிய இடம் உண்டு.…

1 நாள் ago

விரதம் இருப்பதால் கிடைக்கும் நன்மைகள்

விரதம் என்ற சொல்லுக்கு பலவகையான அர்த்தங்கள் உள்ளது என்று சொல்லலாம். நோன்பு உபவாசம் உணவை தவிர்த்தல் என்று பல சொற்களால்…

2 நாட்கள் ago

ஒரு முறை சுவையான இந்த கறிவேப்பிலை மிளகு சிக்கன் செய்து பாருங்கள் இனி இப்படித்தான் செய்வீர்கள்!!

பொதுவாக அசைவம் என்றால் பெரும்பாலானவர்களுக்கு பிடிக்கும், அதுவும் வீக்கென்ட் என்றால் அசைவம் இல்லாமல் இருக்காது, வாரத்தில் ஒரு நாள் சாப்பிட்டே…

2 நாட்கள் ago