காரசாரமான பச்சை நிற மீன் வறுவல் ஒருமுறை இப்படி செய்து அசத்துங்கள்!

- Advertisement -

கடல் சார்ந்த உணவுகளில் மீன் முதன்மையானது அந்த மீனில் நாம் குழம்புகள், வறுவல்கள், தந்தூரிகள் கூட செய்து சாப்பிட்டு இருக்கோம். இப்போ நாம மீன் வறுவல் பல வண்ணங்களில் வறுவல் சாப்பிட்டிருப்போம். இன்னைக்கு  நம்ம பண்ண போற வறுவல் பச்சை நிற மீன் வறுவல். இந்த பச்சை நிறம் சுவையாகவும் இருக்கும். இந்த பச்சை நிற மீன் வறுவல் அந்த நிறத்துக்காகவே நல்ல விரும்பி சாப்பிடுவாங்க குழந்தைகள்.

-விளம்பரம்-

சில குழந்தைகளுக்கு மீன் சாப்பிடுவதற்கு பிடிக்காமல் இருக்கும் அந்த மாதிரி குழந்தைகளுக்கு இந்த மாதிரி வித்தியாசமான கலர்கள்ல மீன் வறுவல் செய்து கொடுக்கும் பொழுது அது புதிதாக இருக்கு அப்படிங்கற ஒரு ஆர்வத்துல நிச்சயமா இந்த மாதிரி வித விதமான கலர் உணவுகளை  சாப்பிடுவாங்க. நம்ம பச்சை கலர்ல சிக்கன் தந்தூரி தான் செய்துது சாப்பிட்டு இருப்போம். இது மீன் இப்போ இந்த மீனை நம்ம தந்துரியாவும் செய்து சாப்பிடலாம் அல்லது வறுவலாகவும் செய்து சாப்பிடலாம். ஆனால் இன்றைக்கு பச்சை மீன் வறுவல் செய்ய போறோம்.

- Advertisement -

இதுக்கு நாம் பயன்படுத்துற மீன்களை துண்டுகள் போடாம அப்படியே முழு நீள மீனாகவே நீங்க வறுத்து எடுத்து சாப்பிடும் பொழுது இன்னுமே ரொம்ப நல்லா இருக்கும். சாப்பிடனும் அப்படினு ஆர்வம் கொடுக்கிறதா இருக்கும். இந்த பச்சை நிற மீன் செய்வதற்கு ரொம்பவே சுலபமாக மசாலா தயார் செஞ்சிடலாம். அதிகமான பொருட்கள் தேவைப்படாது ரொம்ப ரொம்ப சுலபமா இந்த பச்சை நிற மீன் வறுவல் எப்படி செய்யலாம் அப்படிங்கிறத தெரிஞ்சுக்கலாம்.

Print
4 from 1 vote

பச்சை நிற மீன் வறுவல் | Green Fish Fry Recipe In Tamil

சில குழந்தைகளுக்கு மீன் சாப்பிடுவதற்கு பிடிக்காமல் இருக்கும் அந்த மாதிரி குழந்தைகளுக்கு இந்த மாதிரி வித்தியாசமான கலர்கள்ல மீன் வறுவல் செய்து கொடுக்கும் பொழுது அது புதிதாக இருக்கு அப்படிங்கற ஒரு ஆர்வத்துல நிச்சயமா இந்த மாதிரி வித விதமான கலர் உணவுகளை  சாப்பிடுவாங்க.நம்ம பச்சை கலர்ல சிக்கன் தந்தூரி தான் செய்துது சாப்பிட்டு இருப்போம். இது மீன் இப்போ இந்த மீனை நம்ம தந்துரியாவும் செய்து சாப்பிடலாம் அல்லது வறுவலாகவும் செய்து சாப்பிடலாம். ஆனால் இன்றைக்கு பச்சை மீன் வறுவல் செய்ய போறோம்.
Prep Time5 minutes
Active Time6 minutes
Course: Fry, starters
Cuisine: tamil nadu
Keyword: Green Fish Fry
Yield: 4
Calories: 160kcal

Equipment

  • 1 பெரிய பவுள்
  • தோசை கல்

தேவையான பொருட்கள்

  • 4 முழு மீன்கள்
  • 6 பச்சைமிளகாய்
  • 1 துண்டு இஞ்சி
  • 1 பல் பூண்டு
  • 1 கைப்பிடி கொத்தமல்லி
  • 1 கைப்பிடி புதினா
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • மீன்களை முழுமையாக வறுக்க இருப்பதால் முதலில் மீனை நன்றாக சுத்தம் செய்து கழுவிக்கொள்ள வேண்டும்.
  • தலைப்பகுதியில் உள்ள செவுள்கள், வயிற்றில் உள்ள குடல்கள் ,மற்றும் தோல் பகுதியிலுள்ள செதில்கள், துடுப்புகள் போன்றவற்றை நீக்கி விட்டு நன்றாக கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் கொத்தமல்லி, புதினா, பச்சை மிளகாய் , இஞ்சி , பூண்டு இவற்றை சேர்த்து நன்றாக விழுதாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  •  ஒரு பாத்திரத்தில் அரைத்து எடுத்து வைத்துள்ள விழுதை சேர்த்து அதில் தேவையான அளவு உப்பு, 1 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து விடவும்.
  • பின் கழுவி சுத்தம் செய்து வைத்துள்ள மீனைகளை எடுத்து அதில் மசாலாவை தடவி அரை மணி நேரம் எடுத்து ஊற வைக்கவும்.
     
  • மசாலா தடவிய மீன்கள் அரை மணி நேரம் ஊறிய பிறகு ஒரு அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி ஊறிய மீன்களை வைத்து பொரிக்கவும்.
     
  • ஒரு புறம்வெந்ததும் மறுபுறம் திருப்பி போட்டு நன்றாக வெந்த பிறகு எடுத்து பரிமாறினால் சூடான சுவையான பச்சை நிற மீன் வருவல் தயார்.

Nutrition

Serving: 300g | Calories: 160kcal | Protein: 12g | Fat: 2g | Saturated Fat: 0.5g | Potassium: 550mg | Sugar: 0.2g | Iron: 0.3mg