ருசியான பச்சை தக்காளி குழம்பு ஒரு முறை இது போன்று செய்து பாருங்க! பின் நீங்களே அடிக்கடி செய்வீங்க!
வழக்கமாக நாம் தக்காளி வாங்கி ஒரே மாதிரியான தக்காளி குழம்பு அல்லது கிரேவியை தான் பெரும்பாலும் செய்து சாப்பிடுவோம். ஒரே மாதிரியான தக்காளி குழம்பு செய்வதால் வீட்டில் இருப்பவர்களுக்கு போர் அடிக்கும் அல்லவா? நம் தமிழ்நாட்டிலேயே பலவாறு தக்காளி கிரேவி சமைப்பார்கள். அதில் தக்காளி காயை வை
வழக்கமாக நாம் தக்காளி வாங்கி ஒரே மாதிரியான தக்காளி குழம்பு அல்லது கிரேவியை தான் பெரும்பாலும் செய்து சாப்பிடுவோம். ஒரே மாதிரியான தக்காளி குழம்பு செய்வதால் வீட்டில் இருப்பவர்களுக்கு போர் அடிக்கும் அல்லவா? நம் தமிழ்நாட்டிலேயே பலவாறு தக்காளி கிரேவி சமைப்பார்கள். அதில் தக்காளி காயை வைத்து சமைப்பதும் ஒன்று. இந்த தக்காளி காய் குழம்பானது நன்கு காரசாரமாக சாதம், இட்லி, தோசை போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும். இந்த வாரம் வித்தியாசமான தக்காளி குழம்பு செய்ய நினைத்தால், தக்காளி காயை வைத்து குழம்பு செய்யுங்கள். இந்த குழம்பு வழக்கத்திற்கு பதில் ஒரு மாற்றாக ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இருக்கும்.
ஒரு முறை இந்த தக்காளி காய் வைத்து குழம்பு செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம். இந்த தக்காளி காய் குழம்பு செய்வதற்கு காய்கறிகள் கூட எதுவும் தேவை இல்லை கொஞ்சம் வெங்காயம், ஒரு கப் தக்காளி காய் இருந்தால் போதும் இந்த குழம்பை 10 நிமிடத்திற்குள்ளே தயார் செய்து விடலாம். இந்த குழம்புடன் சோறு உண்டு கை கழுவிய பிறகு வீசும் கை மணம் இன்னொரு முறை சோறு உண்ண தோணும். மேலும், இந்தக் குழம்பை அடிக்கடி செய்து தரும்படி கேட்பார்கள். மண் வாசனையுடன் கூடிய இந்த தக்காளி காய் குழம்பு செய்வது எப்படி என்று இன்றைய பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.