ருசியான பச்சை தக்காளி குழம்பு ஒரு முறை இது போன்று செய்து பாருங்க! பின் நீங்களே அடிக்கடி செய்வீங்க!

- Advertisement -

வழக்கமாக நாம் தக்காளி வாங்கி ஒரே மாதிரியான தக்காளி குழம்பு அல்லது கிரேவியை தான் பெரும்பாலும் செய்து சாப்பிடுவோம். ஒரே மாதிரியான தக்காளி குழம்பு செய்வதால் வீட்டில் இருப்பவர்களுக்கு போர் அடிக்கும் அல்லவா? நம் தமிழ்நாட்டிலேயே பலவாறு தக்காளி கிரேவி சமைப்பார்கள். அதில் தக்காளி காயை வைத்து சமைப்பதும் ஒன்று. இந்த தக்காளி காய் குழம்பானது நன்கு காரசாரமாக சாதம், இட்லி, தோசை போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும். இந்த வாரம் வித்தியாசமான தக்காளி குழம்பு செய்ய நினைத்தால், தக்காளி காயை வைத்து குழம்பு செய்யுங்கள். இந்த குழம்பு வழக்கத்திற்கு பதில் ஒரு மாற்றாக ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இருக்கும்.

-விளம்பரம்-

ஒரு முறை இந்த தக்காளி காய் வைத்து குழம்பு செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம். இந்த தக்காளி காய் குழம்பு செய்வதற்கு காய்கறிகள் கூட எதுவும் தேவை இல்லை கொஞ்சம் வெங்காயம், ஒரு கப் தக்காளி காய் இருந்தால் போதும் இந்த குழம்பை 10 நிமிடத்திற்குள்ளே தயார் செய்து விடலாம். இந்த குழம்புடன் சோறு உண்டு கை கழுவிய பிறகு வீசும் கை மணம் இன்னொரு முறை சோறு உண்ண தோணும். மேலும், இந்தக் குழம்பை அடிக்கடி செய்து தரும்படி கேட்பார்கள். மண் வாசனையுடன் கூடிய இந்த தக்காளி காய் குழம்பு செய்வது எப்படி என்று இன்றைய பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

- Advertisement -
Print
No ratings yet

பச்சை தக்காளி குழம்பு | Green Tomato Curry Recipe In Tamil

வழக்கமாக நாம் தக்காளி வாங்கி ஒரே மாதிரியான தக்காளி குழம்பு அல்லது கிரேவியை தான் பெரும்பாலும் செய்து சாப்பிடுவோம். ஒரே மாதிரியான தக்காளி குழம்பு செய்வதால் வீட்டில் இருப்பவர்களுக்கு போர் அடிக்கும் அல்லவா? நம் தமிழ்நாட்டிலேயே பலவாறு தக்காளி கிரேவி சமைப்பார்கள். அதில் தக்காளி காயை வைத்து சமைப்பதும் ஒன்று. இந்த தக்காளி காய் குழம்பானது நன்கு காரசாரமாக சாதம், இட்லி, தோசை போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும். இந்த வாரம் வித்தியாசமான தக்காளி குழம்பு செய்ய நினைத்தால், தக்காளி காயை வைத்து குழம்பு செய்யுங்கள். இந்த குழம்பு வழக்கத்திற்கு பதில் ஒரு மாற்றாக ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இருக்கும்.
Prep Time10 minutes
Active Time10 minutes
Total Time20 minutes
Course: LUNCH
Cuisine: Indian
Keyword: Green Tomato Curry
Yield: 4 People
Calories: 61kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 கடாய்
  • 1 மிக்ஸி

தேவையான பொருட்கள்

  • 1/4 கி தக்காளி காய்
  • 1 கப் சின்ன வெங்காயம்
  • 2 பெரிய வெங்காயம்
  • 5 வர ‌மிளகாய்
  • 1 கொத்து கறிவேப்பில்லை
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு
  • 1 டீஸ்பூன் கடுகு
  • 1/2 கப் தேங்காய் துருவல்
  • 1 டேபிள் ஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1 டீஸ்பூன் தனியா தூள்
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1/2 டீஸ்பூன் சீரகம்

செய்முறை

  • முதலில் தக்காளி காயை நன்கு கழுவி சற்று பெரிய துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம், பெரிய வெங்காயம், வர மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். பின் மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், தேங்காய் துருவல் சேர்த்து நன்கு வதக்கவும்.
  • இவை ஆறியதும் இதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.
  • பின் மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து நறுக்கி வைத்துள்ள தக்காளி காயை சேர்த்து நன்கு வதக்கவும். பின் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
  • அதன்பிறகு அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து மூடி வைத்து கொதிக்க விடவும்.
  • இறுதியாக ஒரு தாளிப்பு கரண்டியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து குழம்பில் சேர்த்து கலந்து விடவும்.
  • அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான தக்காளி காய்‌ குழம்பு தயார். இந்த பச்சை தக்காளி காய்‌ குழம்பு சாதம், இட்லி, தோசை போன்ற எல்லா உணவுடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

Nutrition

Serving: 400g | Calories: 61kcal | Carbohydrates: 3.5g | Protein: 8g | Fat: 2g | Sodium: 6mg | Potassium: 87mg | Fiber: 3.1g | Vitamin A: 20IU | Vitamin C: 26mg | Calcium: 9mg | Iron: 3mg