Advertisement
சைவம்

பருப்பு, வெங்காயம், தக்காளி, எதுவும் சேர்க்காமல் கீரை மசியல் 5 நிமிஷத்துல இப்படி செய்து பாருங்க!

Advertisement

கீரை வாங்கினா ஒரு முறை இப்படி செஞ்சு சாப்பிட்டு பாருங்க. சைவ பிரியர்கள் மட்டுமல்ல இனி அசைவ பிரியர்கள் கூட இந்த கீரையின் சுவைக்கு அடிமை .கீரையில் எண்ணற்ற சத்துக்கள் இருப்பது அனைவருக்கும் தெரியும். பொதுவாக குழந்தைகள் கீரையில் விரும்பி சாப்பிடுவது கிடையாது. பெரியவர்கள் கூட சைவம் சாப்பிடுபவர்கள் கீரையை விரும்பி சாப்பிடுவார்கள்.  அசைவ பிரியர்களுக்கு பெரும்பாலும் கீரை என்றாலே ஏதோ சாப்பிடக் கூடாத பொருளை சாப்பிடுவது போல தான் முகத்தை சுழிப்பார்கள். இது போல ஒரு முறை கீரையில் மசியல் செய்து கொடுத்துப் பாருங்க எல்லோரும் கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.

வெறும் கீரையை வைத்து மட்டும் இந்த மசியல் செய்யப் போகின்றோம். இதனுடன் பருப்பு வெங்காயம் தக்காளி எதுவுமே சேர்க்க போவது கிடையாது. கீரை வைத்து மட்டும் மைய கடைந்து விட்டால் போதும். சுவையான சத்து நிறைந்த பச்சை கீரை மசியல் தயார். ஆரம்பத்தில் சமைக்க பழகுபவர்களுக்கு இந்த குறிப்பு மிக மிக பயனுள்ளதாக இருக்கும். ஆரோக்கியம் தரக்கூடிய இந்த ரெசிபியை நிச்சயம் எல்லோரையும் ஒரு முறை ட்ரை பண்ணி பாக்கணும்.

Advertisement

கீரை மசியல் | Greens Masiyal Recipe In Tamil

Print Recipe
கீரை வாங்கினா ஒரு முறை இப்படி செஞ்சு சாப்பிட்டு பாருங்க. சைவ பிரியர்கள் மட்டுமல்ல இனி அசைவ பிரியர்கள்கூட இந்த கீரையின் சுவைக்கு அடிமை .கீரையில்எண்ணற்ற சத்துக்கள் இருப்பது அனைவருக்கும் தெரியும். பொதுவாக குழந்தைகள்
Advertisement
கீரையில் விரும்பிசாப்பிடுவது கிடையாது. பெரியவர்கள் கூட சைவம் சாப்பிடுபவர்கள் கீரையை விரும்பி சாப்பிடுவார்கள். அசைவ பிரியர்களுக்கு பெரும்பாலும் கீரை என்றாலே ஏதோ சாப்பிடக் கூடாத பொருளை சாப்பிடுவதுபோல தான் முகத்தை சுழிப்பார்கள். இது போல ஒரு முறை கீரையில் மசியல் செய்து கொடுத்துப்பாருங்க எல்லோரும் கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.வெறும் கீரையை வைத்து மட்டும்இந்த மசியல் செய்யப் போகின்றோம். இதனுடன் பருப்பு வெங்காயம் தக்காளி எதுவுமே சேர்க்கபோவது கிடையாது.
Advertisement
Course LUNCH, Side Dish
Cuisine tamilnadu
Keyword Greens Masiyal
Prep Time 5 minutes
Cook Time 10 minutes
Servings 4
Calories 20

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 1 கட்டு கீரை (அரைக்கீரை/ சிறுகீரை / முளைக்கீரை ஒரு கட்டு)
  • 5 மிளகாய் வற்றல்
  • உப்பு தேவைக்கேற்ப
  • 2 விரல் அளவு புளி

தாளிக்க

  • கடுகு சிறுது
  • சீரகம் சிறுது
  • உளுந்து சிறுது
  • கடலைப்பருப்பு சிறுது
  • எண்ணெய் சிறுது
  • கறிவேப்பிலை சிறுது

Instructions

  • கீரையைச் சுத்தம் செய்து கால் கப் அளவு நீர் ஊற்றி உப்பு சேர்த்து மூடி போட்டு வேகவிடவும்.
  • வெந்ததும் அதனுடன் புளியைச் சேர்த்து மேலும் 2 நிமிடங்கள் வேகவைத்து எடுத்து ஆறவிடவும்.
  • பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, சீரகம், உளுந்து, கடலைப்பருப்பு, மிளகாய் வற்றல் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்
  • மிக்ஸியில் கீரையுடன் தாளித்தவற்றைச் சேர்த்து தேவையான நீர் விட்டு நைசாக அரைக்கவும்.
  • சட்னி பதத்திலிருக்க வேண்டும். (உப்பு,புளி, காரம் சரிபார்த்துக் கொள்ளவும்). சுவையானகீரை மசியல் தயார்.

Notes

வெறும் சாதத்தில் நெய் விட்டு, இந்த கீரை மசியல் சேர்த்து பிசைந்து சாப்பிட சுவையாக இருக்கும்.

Nutrition

Serving: 500g | Calories: 20kcal | Carbohydrates: 3g | Sodium: 240mg | Potassium: 65mg | Fiber: 2g | Calcium: 113mg | Iron: 22mg
Advertisement
Prem Kumar

Recent Posts

ருசியான ஆலு மேத்தி சப்ஜி ரெசிபி இப்படி செஞ்சி பாருங்க! உருளைக்கிழங்கு வறுவல்,குருமா வைப்பது போலவே ரொம்ப சுலபம்!!

பொதுவா இந்த சப்பாத்தி பூரி போன்ற டிபன் வகைகளுக்கு ஏதாவது காரசாரமான சைடு டிஷ் இருந்தால் சாப்பிட ரொம்பவே நல்லா…

56 நிமிடங்கள் ago

டீ பிரியர்கள், மசாலா டீ இப்படி செய்து பாருங்க? சுவையும், மணமும் அசத்தலாக இருக்கும்!!

இப்பொழுதைய நாட்களில் சாப்பாடு சாப்பிடாமல் கூட ஆண்கள் இருந்து விடுவார்கள் ஆனால் டீ குடிக்காமல் அவர்களால் இருக்க முடியாது. ஏன்…

60 நிமிடங்கள் ago

கடன் பிரச்சனைகள் தீர செவ்வாய்க்கிழமை முருகனை வேண்டி இதை மட்டும் செய்யுங்கள் போதும்!

அனைவரும் ஏதோ ஒரு வகையில் கடனோடு தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சாதாரண மனிதர்கள் வரை, ஞானியர்கள் வரை அனைவரும் கடன்…

2 மணி நேரங்கள் ago

ருசியான குடைமிளகாய் ஈரல் பெப்பர் வறுவல் இப்படி செய்து பாருங்கள், வீட்டில் உள்ளவர்கள் மீண்டும் வேண்டும் என்று கேட்டு சாப்பிடுவார்கள்!

மட்டன் சிக்கன் பிடித்தவர்களுக்கு பெரும்பாலும் ஈரல் பிடிக்காது. ஆனால் ஈரல் பிடித்தவர்களுக்கு ஈரல் அடிக்கடி சாப்பிட வேண்டும் என்று தோன்றும்…

3 மணி நேரங்கள் ago

இந்த கோடை வெயிலுக்கு இதமாக உங்கள் குழந்தைகளுக்கு குளு குளு நுங்கு கீர் செய்து கொடுங்கள் மிகவும் சுவையாக இருக்கும்!!

எந்த ஒரு விருந்தோம்பலகாக இருந்தாலும் அங்கு இனிப்பு பொருள்களுக்கென்று தனியிடம் உண்டு. அதுபோன்ற சமயங்களில் ஆரோக்கியமான உணவுகளைத் தேர்வு செய்வது…

4 மணி நேரங்கள் ago

திருமண விழாக்களில் முகூர்த்த கால் நடுவதற்கான காரணங்கள்

ஒரு வீட்டில் திருமணம் நடக்கப்போகிறது என்றால் அதற்கு ஏராளமான சடங்குகள் சம்பிரதாயங்கள் இருக்கும். அவை அனைத்தும் மிகவும் மகிழ்ச்சியாகவும் மனதிற்கு…

5 மணி நேரங்கள் ago