இனி கீரை சாதம் இப்படி செஞ்சு பாருங்கள்! குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கீரையை வேணாம்னு சொல்லவே முடியாது!

சுவையான கீரை சாதத்தை இவ்வாறு ஒரு முறை சமைத்துக் கொடுத்து பாருங்கள். வீட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தட்டாமல் சாப்பிட்டு விடுவார்கள்.இப்பொழுதுள்ள குழந்தைகளாக இருந்தாலும் சரி பெரியவர்களாக இருந்தாலும் சரி வாய்க்கு ருசியாக உணவு வேண்டும் என்கிறார்களே தவிர, அது ஆரோக்கியமான உண

By ·

சுவையான கீரை சாதத்தை இவ்வாறு ஒரு முறை சமைத்துக் கொடுத்து பாருங்கள். வீட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தட்டாமல் சாப்பிட்டு விடுவார்கள்.இப்பொழுதுள்ள குழந்தைகளாக இருந்தாலும் சரி பெரியவர்களாக இருந்தாலும் சரி வாய்க்கு ருசியாக உணவு வேண்டும் என்கிறார்களே தவிர, அது ஆரோக்கியமான உணவாக இருக்க வேண்டும் என்று எவரும் விரும்புவதில்லை. காலை, மதியம், இரவு என மூன்று வேளைகளும் விதவிதமாக சமைத்து சாப்பிட்டாலும் அதில் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்து கிடைத்திருக்கிறதா என்று யோசித்துப் பார்த்தோமென்றால் அது கேள்விக்குறியாக தான் இருக்கிறது

இந்த கீரை சாதத்தை லஞ்ச்பாக்ஸிலும் நாம் கொடுத்துவிடலாம். தொட்டுக்கொள்ள ஒரு சிப்ஸ் அல்லது கிழங்கு வகைகளில் ஏதாவது இருந்தால் அட்டகாசமாக இருக்கும். இந்த ரெசிபியை பாஸ்மதி அரிசியில் தான் செய்ய வேண்டும் என்ற அவசியம் கிடையாது. உங்கள் வீட்டில் இருக்கும் சாதம் வடிக்கும் அரிசி, பச்சரிசி எதில் வேண்டுமென்றாலும் செய்யலாம். அதற்கேற்றவாறு தண்ணீரின் அளவுகளை மட்டும் மாற்றிக் கொள்ளுங்கள். உங்களது அரிசி எத்தனை விசில் வைத்தால் வேகமோ அத்தனை விசில் வைத்துக்கொள்ள வேண்டும். அவ்வளவு தான். உங்களுக்கு இந்த ரெசிபி பிடிச்சிருந்தா உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க.

மணக்க மணக்க கலர்ஃபுல்லான கீரை சாதம் ரெசிபியை தான் இன்னைக்கு நாம தெரிஞ்சுக்க போறோம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கீரை என்றாலே அதை ஒதுக்கி வைக்க தான் பார்ப்பார்கள். ஆனால் கீரையில் இருக்கும் சத்து நம்முடைய உடல் ஆரோக்கியத்துக்கு மிக மிக அவசியமானது. நிறைய பேர் வீடுகளில் இன்று கீரையை சமைக்கும் பழக்கமே மறந்து போய்விட்டது என்று சொன்னாலும் அதில் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. கீரையை வைத்து ஒரு கீரை புலாவ் ரெசிபியை சீக்கிரமா தெரிஞ்சுக்கலாம் வாங்க.

Recipes AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை