சூப்பரான நிலக்கடலை கொத்தவரைங்காய் குழம்பு இப்படி வீடே மணக்க மணக்க ட்ரை பண்ணி பாருங்க!
நாம் வழக்கம் போல் புளிகுழம்பு, சாம்பார், சிக்கன், மட்டன், போன்ற குழம்பு வகைகளை தான் மாற்றி மாற்றி ஒரு சுழற்சி முறையில் தயார் செய்து சாப்பிட்டு கொண்டிருப்போம். ஆனால் அதையும் தாண்டி பல குழம்பு வகைகள் உள்ளது இது நமக்கு தெரியும். ஆனால் இங்கு பலருக்கும் அது எப்படி தயார் செய்வது என்று
நாம் வழக்கம் போல் புளிகுழம்பு, சாம்பார், சிக்கன், மட்டன், போன்ற குழம்பு வகைகளை தான் மாற்றி மாற்றி ஒரு சுழற்சி முறையில் தயார் செய்து சாப்பிட்டு கொண்டிருப்போம். ஆனால் அதையும் தாண்டி பல குழம்பு வகைகள் உள்ளது இது நமக்கு தெரியும். ஆனால் இங்கு பலருக்கும் அது எப்படி தயார் செய்வது என்று தெரியாது. ஆகையால் நாம் புது விதமாக ஒரு குழம்பு ஒன்று பற்றி தான் பார்க்க இருக்கிறோம். வேர்க்கடலை வைத்து சட்னி, வடை, மசாலா சாட், பர்பி, லட்டு என்று பல விதமான ரெசிபி செய்து சாப்பிட்டு இருப்பீர்கள். வேர்க்கடலை வைத்து சுவையான குழப்பு செய்துள்ளீர்களா? இல்லையா? அப்போ இந்த பதிவு உங்களுக்காக தான். அது தான் நிலக்கடலை கொத்தவரங்காய் குழம்பு.
நிலக்கடலையில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுவதால் இது நமது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் ஏற்றது. குறிப்பாக வளரும் குழந்தைகளுக்கும் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் பயன் அளிக்க கூடிய உணவு வகைகளில் ஒன்றாகும். இது செய்வதற்கு மிகவும் ஈஸியானது மட்டுமின்றி, சப்பாத்தி, சாதம் போன்றவற்றிற்கு ஏற்றவாறும் இருக்கும். நீங்கள் நிலக்கடலையை பயன்படுத்தி இந்த குழம்பை ஒருமுறை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால் அனைவரும் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் அந்த அளவிற்கு அசத்தலான சுவையில் அட்டகாசமாக இருக்கும். இந்த நிலக்கடலை குழம்பு இட்லி, தோசை, சாதம், சப்பாத்தி என்று அனைத்திற்கும் நல்ல ஒரு மாற்றாக எடுத்துக் கொள்ளலாம்.
இதனையும் படியுங்கள் : தித்திக்கும் சுவையில் நிலக்கடலை குலோப்ஜாமுன் இப்படி செஞ்சி பாருங்க!