சூப்பரான நிலக்கடலை கொத்தவரைங்காய் குழம்பு இப்படி வீடே மணக்க மணக்க ட்ரை பண்ணி பாருங்க!

- Advertisement -

நாம் வழக்கம் போல் புளிகுழம்பு, சாம்பார், சிக்கன், மட்டன், போன்ற குழம்பு வகைகளை தான் மாற்றி மாற்றி ஒரு சுழற்சி முறையில் தயார் செய்து சாப்பிட்டு கொண்டிருப்போம். ஆனால் அதையும் தாண்டி பல குழம்பு வகைகள் உள்ளது இது நமக்கு தெரியும். ஆனால் இங்கு பலருக்கும் அது எப்படி தயார் செய்வது என்று தெரியாது. ஆகையால் நாம் புது விதமாக ஒரு குழம்பு ஒன்று பற்றி தான் பார்க்க இருக்கிறோம். வேர்க்கடலை வைத்து சட்னி, வடை, மசாலா சாட், பர்பி, லட்டு என்று பல விதமான ரெசிபி செய்து சாப்பிட்டு இருப்பீர்கள். வேர்க்கடலை வைத்து சுவையான குழப்பு செய்துள்ளீர்களா? இல்லையா? அப்போ இந்த பதிவு உங்களுக்காக தான். அது தான்‌ நிலக்கடலை கொத்தவரங்காய் குழம்பு.

-விளம்பரம்-

நிலக்கடலையில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுவதால் இது நமது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் ஏற்றது. குறிப்பாக வளரும் குழந்தைகளுக்கும் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் பயன் அளிக்க கூடிய உணவு வகைகளில் ஒன்றாகும். இது செய்வதற்கு மிகவும் ஈஸியானது மட்டுமின்றி, சப்பாத்தி, சாதம் போன்றவற்றிற்கு ஏற்றவாறும் இருக்கும். நீங்கள் நிலக்கடலையை பயன்படுத்தி இந்த குழம்பை ஒருமுறை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால் அனைவரும் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் அந்த அளவிற்கு அசத்தலான சுவையில் அட்டகாசமாக இருக்கும். இந்த நிலக்கடலை குழம்பு இட்லி, தோசை, சாதம், சப்பாத்தி என்று அனைத்திற்கும் நல்ல ஒரு மாற்றாக எடுத்துக் கொள்ளலாம்.

- Advertisement -
Print
2 from 1 vote

நிலக்கடலை கொத்தவரை குழம்பு | Groundnut Cluster Bean Curry Recipe In Tamil

நாம் வழக்கம் போல் புளிகுழம்பு, சாம்பார், சிக்கன், மட்டன், போன்ற குழம்பு வகைகளை தான் மாற்றி மாற்றி ஒரு சுழற்சி முறையில் தயார் செய்து சாப்பிட்டு கொண்டிருப்போம். ஆனால் அதையும் தாண்டி பல குழம்பு வகைகள் உள்ளது இது நமக்கு தெரியும். ஆனால் இங்கு பலருக்கும் அது எப்படி தயார் செய்வது என்று தெரியாது. ஆகையால் நாம் புது விதமாக ஒரு குழம்பு ஒன்று பற்றி தான் பார்க்க இருக்கிறோம். வேர்க்கடலை வைத்து சட்னி, வடை, மசாலா சாட், பர்பி, லட்டு என்று பல விதமான ரெசிபி செய்து சாப்பிட்டு இருப்பீர்கள். வேர்க்கடலை வைத்து சுவையான குழப்பு செய்துள்ளீர்களா? இல்லையா? அப்போ இந்த பதிவு உங்களுக்காக தான். அது தான்‌ நிலக்கடலை கொத்தவரங்காய் குழம்பு. நிலக்கடலையில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுவதால் இது நமது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் ஏற்றது.
Prep Time15 minutes
Active Time15 minutes
Total Time30 minutes
Course: dinner, LUNCH
Cuisine: Indian
Keyword: Groundnut Cluster Bean Curry
Yield: 4 People
Calories: 167kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 மிக்ஸி
  • 1 வாணலி

தேவையான பொருட்கள்

  • 1/2 கப் நிலக்கடலை
  • 1/2 கப் கொத்தவரங்காய்
  • 1/4 டேபிள் ஸ்பூன் துவரம் பருப்பு
  • 1 டேபிள் ஸ்பூன் உளுந்தம்பருப்பு
  • 1/2 டேபிள் ஸ்பூன் கடலை பருப்பு
  • 1 டேபிள் ஸ்பூன் தனியா
  • 1/2 டீஸ்பூன் மிளகு
  • 4 வர ‌மிளகாய்
  • 4 டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல்
  • 1/4 கப் புளி கரைசல்
  • உப்பு தேவையான அளவு

தாளிக்க :

  • எண்ணெய் தேவையான அளவு
  • 1/4 டீஸ்பூன் கடுகு
  • 1/2 டீஸ்பூன் உளுந்தம்பருப்பு
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • 2 வர ‌மிளகாய்
  • 1/4 டீஸ்பூன் பெருங்காயத்தூள்

செய்முறை

  • முதலில் நிலக்கடலையை கழுவி இரண்டு மணி நேரம் ஊறவைத்து பின் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். கொத்தவரங்காயை கழுவி‌ பெரிய துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • பின் ஒரு குக்கரில் துவரம் பருப்பை சேர்த்து அதனுடன் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றாமல் கடலை பருப்பு, உளுந்து பருப்பு, மிளகு, தனியா, வர ‌மிளகாய், பெருங்காயம், தேங்காய் துருவல் சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.
  • இவை‌ நன்கு ஆறியதும் இதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.
  • ஒரு கடாயை அடுப்பில் வைத்து வேக வைத்து வைத்துள்ள நிலக்கடலை, கொத்தவரங்காய் சேர்த்து அதனுடன் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, புளி கரைசல் சேர்த்து கலந்து தேவையான அளவு தண்ணீர் விட்டு மூடி போட்டு கொதிக்க விடவும்.
  • குழம்பு கொதித்ததும் வேகவைத்து வைத்துள்ள பருப்பை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
  • ஒரு தாளிப்பு கரண்டியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்து பருப்பு, கறிவேப்பிலை, வர‌ மிளகாய் சேர்த்து தாளித்து குழம்பில் சேர்க்கவும்.
  • பின் நறுக்கிய கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும். அவ்வளவுதான் மிகவும் சுவையான சத்தான நிலக்கடலை, கொத்தவரங்காய் குழம்பு தயார்.

Nutrition

Serving: 500g | Calories: 167kcal | Carbohydrates: 6.3g | Protein: 25.8g | Fat: 9.2g | Sodium: 18mg | Potassium: 305mg | Fiber: 8.8g | Vitamin C: 5.9mg | Calcium: 92mg | Iron: 4.58mg

இதனையும் படியுங்கள் : தித்திக்கும் சுவையில் நிலக்கடலை குலோப்ஜாமுன் இப்படி செஞ்சி பாருங்க!