வக்ர நிவர்த்தி அடையும் குரு பகவான் அதற்கான பலன்கள் இதோ!
ஜோதிடத்தின் படி, கிரகங்கள் மனித வாழ்க்கையில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றுவது மட்டுமின்றி, அவ்வப்போது வக்ர நிலையில் பின்னோக்கியும், வக்ர நிவர்த்தி அடைந்து நேர்கதியிலும் பயணிக்கும். அப்படி கிரகங்களின்
ஜோதிடத்தின் படி, கிரகங்கள் மனித வாழ்க்கையில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றுவது மட்டுமின்றி, அவ்வப்போது வக்ர நிலையில் பின்னோக்கியும், வக்ர நிவர்த்தி அடைந்து நேர்கதியிலும் பயணிக்கும். அப்படி கிரகங்களின் நிலையில் மாற்றங்கள் ஏற்படும் போதெல்லாம் அதன் தாக்கம் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். அந்த வகையில் அதிர்ஷ்டம், வளர்ச்சி, ஆடம்பர், செல்வாக்கு, ஆழமான சிந்தனையுடன் தொடர்பு கொண்ட ஒரு கிரகமாக குரு கிரகம் பார்க்கப்படுகிறது. தற்போது குரு பகவான் மிதுன ராசியில் பயணித்து வருகிறார். மிதுன ராசியில் கடந்த 100 நாட்களுக்கு மேலாக வக்ர நிலையில் பயணம் செய்த குரு பகவான் மார்ச் 11 ஆம் தேதி வக்ர நிவர்த்தி அடைந்திருக்கிறார். கடக ராசியை நோக்கி குருவின் நேரடி பயணம் ஆரம்பமாகிறது. கடக ராசியில் ஜூன் 1ஆம் தேதி குரு பகவான் உச்சமடையப் போகிறார். அதனால் எந்தெந்த ராசிக்காரர்கள் என்ன பலன் பெற போகிறார்கள் என்று இந்த ஆன்மிகப் பதிவில் பார்ப்போம்.
மேஷம்
3ஆம் இடமான முயற்சி ஸ்தானத்தில் குரு பகவான் பயணம் செய்வதால் கடந்த சில மாதங்களாக தொழிலில் இருந்த முட்டுக்கட்டைகள் நீங்கும். எதிர்காலம் குறித்த குழப்பங்கள் விலகி தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். மன நிம்மதி கிடைக்கும். தொழில் வாழ்க்கை மற்றும் மண வாழ்க்கை இரண்டிலும் காணப்பட்ட பிரச்சனைகள் முடிவுக்கு வரும். இணையம் தொடர்பான தொழில் செய்து வரும் நபர்களுக்கு சாதகமான ஒரு காலத்தை இது கொண்டு வரும்.
ரிஷபம்
குடும்ப ஸ்தானமான 2ஆம் வீட்டில் குரு வக்ர நிவர்த்தி அடைவதால் குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும். பணியிடத்தில் புரமோசன் கிடைக்கும். நினைத்த காரியம் நிறைவேறும். பணியிடத்தில் காணப்பட்ட பிரச்சனைகள், சவால்கள் முடிவுக்கு வரும், வாழ்க்கை சிறப்பாக மாறும். நிலையான வெற்றி மற்றும் நீண்ட காலம் தொடரும் வருமான ஆதாரங்களை கொண்டு வரும். கடன் பிரச்சனைகள் தீரும், பொருளாதார நிலையும் மேம்படும்.
மிதுனம்
உங்கள் ராசியிலேயே குரு வக்ர நிவர்த்தி அடைவதால், ஆளுமைத் திறனில் முன்னேற்றம் காண்பீர்கள். புதிய திறன்களைக் கற்றுக் கொள்ளவும், முக்கியமான முடிவுகளை எடுக்கவும் இது சரியான நேரம். எதிர்காலம் தொடர்பான குழப்பங்கள் முடிவுக்கு வரும், மன நிறைவான ஒரு காலத்தை அனுபவிக்கும் வாய்ப்பும் கிடைக்கும். மறுக்கப்பட்ட வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும்.
கடகம்
குரு உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானத்தில் வக்ர நிவர்த்தி அடைந்து நேர்கதிக்குத் திரும்பினாலும், பணம் விஷயங்களில் கவனம் தேவை. வீண் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது. தொழில் வளர்ச்சிக்கான வாய்ப்புகளை கொண்டு வரும், குருவின் நேரடி பார்வை, செல்வ செழிப்புடன் கூடிய ஆடம்பரமான வாழ்க்கை வாழும் வாய்ப்பினையும் கொண்டு வரும். பொருளாதார ரீதியாக உங்களை பலப்படுத்தும் வாய்ப்பும் கிடைக்கும்.
சிம்மம்
லாப தன ஸ்தானத்தில் குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைவதால் நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தெளிவான சிந்தனைகள், எதிர்பார்த்த நற்பலன்களை அவர்களின் வாழ்க்கையில் கொண்டு வருகிறது. சமூகத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். அந்தஸ்து உயரும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். பணியிடத்தில் உங்கள் தனித்திறமைகளை வெளிப்படுத்தி உயர் பதவிகள் மற்றும் ஆளுமை மிக்க இடத்தை பெறும் வாய்ப்பும் காணப்படுகிறது.
கன்னி
பத்தாம் வீட்டில் குரு வக்ர நிவர்த்தி அடைந்திருப்பதால் வேலை செய்யும் இடத்தில் கவனம் தேவை. பணிச்சுமை அதிகமாக இருக்கும். எடுத்த காரியங்களை முடிப்பதில் சிறு சிறு தாமதங்கள் ஏற்படலாம். தொழில் வாழ்க்கையில் காணப்பட்ட பிரச்சனைகள் நீங்கும், மறுக்கப்பட்ட வாய்ப்புகள் மீண்டும் உங்களை தேடி வரும். வெளிநாட்டு பயணங்கள் எதிர்பார்த்த பலனை உங்கள் வாழ்க்கையில் கொண்டு வரும். தங்கள் நட்பு வட்டத்தை விரிவுப்படுத்தும் வாய்ப்பு காணப்படுகிறது.
துலாம்
பாக்ய ஸ்தானமான 9ஆம் வீட்டில் குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைந்து நேர்கதியில் பயணம் செய்வதால் ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். நினைத்த காரியம் நிறைவேறும். நீண்ட நாட்களாக போக நினைத்த கோவிலுக்கு செல்வீர்கள். அனுபவ பாடங்களை கற்கும் வாய்ப்பினை பெறுவீர்கள். புதிய பணி வாய்ப்புகள் கிடைக்கும், புதியவர்களின் அறிமுகமும் கிடைக்கும். உங்கள் வளர்ச்சிக்கு தேவையான விஷயங்கள், உங்கள் வீட்டு கதவை தட்டும்.
விருச்சிகம்
அஷ்டம ஸ்தானமான 8ஆம் வீட்டில் இருந்த குரு வக்ர நிவர்த்தி அடைவதால் தைரியம் மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கும். குரு பகவான் பார்வை சாதகமாக இருப்பதால் வேலை தேடுபவர்களுக்கு நல்ல செய்தி வரும். ஊடகம், எழுத்து, அரசியல் தொடர்பான துறையில் இருக்கும் நபர்களுக்கு சிறப்பான ஒரு காலமாக இது பார்க்கப்படுகிறது. துணிச்சலான முடிவுகளை எடுத்து, எதிர்பார்த்த முடிவை உங்கள் வாழ்க்கையில் காண்பீர்கள்.
தனுசு
உங்கள் ராசி நாதனான குரு பகவான் 7ஆம் வீட்டில் வக்ர நிவர்த்தி அடைந்து நேர்கதியில் பயணம் செய்வதால் தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். குருவின் பார்வையால் குடும்பத்தில் சுப காரியங்கள் நடப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. கல்வி, கற்பித்தல் தொடர்பான துறையில் இருக்கும் நபர்களுக்கும் சாதகமான ஒரு காலமாக இது அமையும். வெளியூர் பயணங்கள் உங்கள் வாழ்க்கையின் சிறப்பான அனுபவங்களை கொண்டு வரும்.
மகரம்
உங்கள் ராசிக்கு ஆறாம் வீடான ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைந்திருப்பதால் நீண்ட நாட்களாக இருந்த கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். நோய்கள் நீங்கி ஆரோக்கியம் அதிகரிக்கும். ஆன்மீகத்தில் நாட்டத்தை அதிகரிக்கும், பெற்றோர் மற்றும் நண்பர்கள் ஆதரவுடன் அடுத்த கட்டத்திற்கு முன்னேறிச் செல்லும் வாய்ப்பும் கிடைக்கும். நிதி நெருக்கடி மற்றும் நீண்ட காலமாக நீடித்து வந்த பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் காண்பீர்கள்.
கும்பம்
உங்கள் ராசிக்கு 5ஆம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குரு வக்ர நிவர்த்தி அடைவதால், தடைப்பட்டிருந்த பண வரவு சீராகும். சேமிப்பு உயரும். பழைய கடன்களை அடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். முன்னர் செய்த முதலீடுகள் வழியே போதுமான வருமானத்தை கொண்டு வரலாம். கடன் பிரச்சனைகள் தீரும். தொழில் வாழ்க்கையில் சக ஊழியர்களுடன் இனிமையான தருணங்களை உண்டாக்கும் வாய்ப்பும் கிடைக்கும்.
மீனம்
நான்காம் வீடான சுக ஸ்தானத்தில் குரு பகவான் பயணம் செய்வதால், வண்டி வாகன யோகம் கைகூடி வரப்போகிறது. தடைபட்டிருந்த சுப காரியங்கள் தடைகள் நீங்கி நடைபெறும். நிதி நெருக்கடியில் இருந்து விடுபடும் வாய்ப்பும் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகளில் சற்று நிவாரணம் காணலாம். மனதில் காணப்பட்ட குழப்பங்கள் மற்றும் பிரச்சனைகளுக்கு தீர்வு கொண்டு வரும். கூட்டு முயற்சிகள் சிறப்பான பலன்களை அளிக்கும்.
இதனையும் படியுங்கள் : புதன் பெயர்ச்சி பலன்கள் 2026!!