குரு வக்ர நிவர்த்தி இனி இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கொட்ட போகிறது!!

2025 ஆம் ஆண்டில் சனி, குரு, ராகு கேது, சுக்கிரன், செவ்வாய், புதன் உள்ளிட்ட முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் உள்ளன. அந்த வகையில் பிப்ரவரி 4 ஆம் தேதி குரு வக்ர நிவர்த்தி நிகழ உள்ளது. சுப கிரகமான குரு பகவான் பல வித நற்பலன்களை அளிக்கும் கிரகமாக கருதப்படுகிறார். மகிழ்ச்சி, செல்வம், கல

By ·

2025 ஆம் ஆண்டில் சனி, குரு, ராகு கேது, சுக்கிரன், செவ்வாய், புதன் உள்ளிட்ட முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் உள்ளன. அந்த வகையில் பிப்ரவரி 4 ஆம் தேதி குரு வக்ர நிவர்த்தி நிகழ உள்ளது. சுப கிரகமான குரு பகவான் பல வித நற்பலன்களை அளிக்கும் கிரகமாக கருதப்படுகிறார். மகிழ்ச்சி, செல்வம், கல்வி, திருமண வாழ்க்கை, வேலை, வியாபாரம், குழந்தைகள், லாபம், செழுமை, ஆற்றல் ஆகியவற்றின் காரணி கிரகமாக அவர் உள்ளார். ஒருவரது ஜாதகத்தில் குரு நல்ல இடத்தில் இருந்தால், அவர் வாழ்வில் அனைத்து விதமான வெற்றிகளையும் பெறுகிறார். குரு வக்ர நிவர்த்தி பிப்ரவரி நான்காம் தேதி நிகழ்வதால் சில ராசிகளுக்கு குபேர யோகத்தால் அதிர்ஷ்டம் கொட்டப் போகிறது. எந்த ராசிகள் குபேர யோகத்தை அனுபவிக்கப் போகின்றன. என்னவிதமான பலன்கள் கிடைக்கும் என்பது குறித்து இந்த ஆன்மீகப் பதிவில் பார்க்கலாம்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு குரு வக்ர நிவர்த்தி அனுகூலமான பலன்களை அளிக்கும். அலுவலக பணிகளில் வெற்றி கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளை செய்து மகிழ்வீர்கள். அமைதியான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கையாக இருக்கும். பண வரவு அதிகரிக்கும். சேமிப்பு முதலீடுகள் மூலமாக லாபத்தைக் காண்பீர்கள். மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டு. உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு நேரம் நன்றாக இருக்கும். குரு பெயர்ச்சி மற்றும் குரு வக்ர நிவர்த்தியின் தாக்கத்தால், சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். கணவன், மனைவி, குழந்தைகளுக்கிடையே உறவு பலப்படும், மகிழ்ச்சி பொங்கும். ஆன்மிக பயணம், தெய்வ வழிபாடுகளில் நாட்டம் அதிகரிக்கும். உங்களுடைய பிள்ளைகள் நல்ல செய்திகள் வந்து சேரும். முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகள் உள்ளன.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு, குரு வக்ர நிவர்த்தி ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். ஆன்மீக பயணத்தை மேற்கொள்ள வாய்ப்புள்ளது. செல்வத்தைக் குவிப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும். அதிர்ஷ்ட தேவதை உங்கள் பக்கம் நிற்பதால் அனைத்து செயல்களிலும் வெற்றியைக் காண்பீர்கள். உத்தியோகம் செய்பவர்கள் தங்களுடைய துறையில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுகு குரு வக்ர நிவர்த்தி மற்றும் குரு பெயர்ச்சி இரண்டும் சுபமான விளைவுகளை அளிக்கும். குழந்தைகளால் நன்மை ஏற்படும். உங்கள் நிதி நிலையை மேம்படுத்தக்கூடிய செல்வம் அதிகரிக்கும் வாய்ப்புகள் இருக்கும். சுப காரியங்கள் நடப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். சமுதயாத்தில் உங்களுடைய மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். நீண்ட நாட்களாக திருமணத்துக்காக காத்திருந்தவர்களுக்கு திருமணம் நடக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு, குரு வக்ர நிவர்த்தி சுபமானதாக இருக்கும். நல்ல பலன்கள் கிடைக்கும். அலுவலக பணிகளில் உள்ளவர்களுக்கு ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். சுபமான நல்ல பலன்கள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். செல்வ செழிப்புக்கு பஞ்சம் இருக்காது. பண வரவு அதிகரிக்கும். வேலை, தொழில், வியாபாரத்தல் நல்ல லாபத்தைக் காண்பீர்கள்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு குரு வக்ர நிவர்த்தி நன்மை பயக்கும். குருவின் மாற்றத்தால் சாதகமான பலன்கள் ஏற்படும். நீங்கள் எதிர்பார்த்த வேலைகள் உங்களுக்கு கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவும் உங்களுக்கு இருப்பதால் எடுத்த காரியங்களில் வெற்றியைக் காண்பீர்கள். தைரியம், தன்னம்பிக்கை பிறக்கும். மனம் மகிழ்ச்சியாக இருக்கும். நீங்கள் செய்ய விரும்பும் அனைத்து பணிகளும் வெற்றிகரமாக நடந்து முடியும்.

இதனையும் படியுங்கள் : 2025ல் சனி குரு ராகு கேது பெயர்ச்சிகளால் ராஜயோகத்தை பெறப்போகும் ராசிகள்!!

Recipes AMP · Quick view
View full