சனிப்பெயர்ச்சி
அனைத்து கிரகங்களிலும் மிக முக்கியமான கிரகமாக கருதப்படுவது சனிபகவான். தற்போது கும்ப ராசியில் உள்ள இவர் 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் மீன ராசிக்கு பெயர்ச்சியாக போகிறார். 2025 இல் இது மிக முக்கியமான ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
குரு பெயர்ச்சி
தற்போது ரிஷப ராசியில் உள்ள குரு பகவான் 2025 பிப்ரவரி மாதத்தில் வக்ர நிவர்த்தி அடையப்போகிறார். மேலும் மே மாதத்தில் குரு பகவான் மிதுன ராசிக்கு பெயர்ச்சி அடைய போகிறார். சனிப்பெயர்ச்சியை போலவே இதுவும் மிகவும் முக்கியமான ஜோதிட நிகழ்வு.
ராகு பெயர்ச்சி
நிழல் கிரகமான ராகு பகவான் அக்டோபர் 30ஆம் தேதி 2023 ஆம் ஆண்டு ஆண்டு முதல் மீன ராசியில் உள்ளார் அடுத்த வருடம் மே 18ஆம் தேதி ராகு பகவான் கும்ப ராசிக்கு பெயர்ச்சி ஆவார். ஆனால் நட்சத்திர மாற்றத்தை பொறுத்தவரையில் இரண்டு முறை நட்சத்திர மாற்றத்தை அடைவார்.
கேது பெயர்ச்சி
2025 ஆம் ஆண்டு கேது பகவான் மே 18ஆம் தேதி அன்று சிம்மம் ராசிக்கு பெயர்ச்சியாகப் போகிறார். ராசி மாற்றத்தை பொறுத்தவரையில் ஒரு ராசி மாற்றமாக இருந்தாலும் நட்சத்திர மாற்றத்தை பொறுத்தவரையில் ராகு பகவானை போலவே இரண்டு முறை நட்சத்திரத்தை மாற்றுவார். இந்த மாற்றத்தினால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் ஏற்படும் சிலர் ராசிகளுக்கு பிரச்சனைகள் ஏற்படும் சில ராசிகளுக்கு நல்லவைகள் நடக்கும். எனவே இந்த பெயர்ச்சியால் 2025 ஆம் ஆண்டில் அதிகமான நல்ல பலன்களை அனுபவிக்க போகின்ற சில ராசிகளை பற்றி பார்க்கலாம்.
மேஷ ராசி
2025 ஆம் ஆண்டில் குரு பகவானின் அருளால் மேஷ ராசிக்காரர்களுக்கு பொருளாதார ரீதியாக நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் முன்னேற்றம் ஏற்படும் மாணவர்களை பொறுத்தவரையில் கல்வியில் வெற்றி பெறுவார்கள். உயர்கல்விக்கு வாய்ப்புகள் தேடி வரும் புதிய வேலையும் கிடைக்கும். ஆக்கப்பூர்வமான பணிகளில் ஈடுபட்டு வெற்றி பெறுவார்கள். வியாபாரத்தில் வளர்ச்சிக்கான அறிகுறிகள் தெளிவாக இருக்கும். தொழில் பயணங்களின் போது நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாகவே இருக்கும்.
மிதுன ராசி
மிதுன ராசிக்கு சனிப்பெயர்ச்சி மற்றும் குரு பெயர்ச்சியின் தாக்கத்தால் வியாபாரத்தில் உயர்வு இருக்கும். மாணவர்கள் படிப்பில் மிகுந்த ஆர்வம் காட்டுவார்கள். காதல் வாழ்க்கை குடும்ப வாழ்க்கை அனைத்துமே இனிமையாக இருக்கும். புதிய வாகனம் வாங்கக்கூடிய அமைப்புகள் உண்டு. குடும்பத்துடன் அதிக நேரத்தை செலவிடுவீர்கள். மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு தேடி வரும். புதிய நபர்களை சந்திக்க நேரிடும் அது உங்களுக்கு நல்லவைகளை கொடுக்கும்.
கடக ராசி
கடக ராசிக்கு குருவின் அருளால் தன்னம்பிக்கை அதிகரிக்கும். சனிபகவானின் பிடியிலிருந்து விடுபடுவதால் பிரச்சனைகள் குறையும். வருமானம் அதிகரிப்பதால் உங்களுடைய பொருளாதார நிலை வலுவாக இருக்கும் நிதி ஆதாயம் அதிகரிக்கும். மாணவர்களின் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்துடன் நேரத்தை செலவிட ஏற்ற காலமாக அமையும்.
தனுசு ராசி
தனுசு ராசிக்காரர்களுக்கு புது வருடம் பொருளாதார ரீதியாக நல்ல மாற்றத்தை கொடுக்கும். ராகு பகவானால் படைப்பாற்ற நினைவாற்றல் அதிகரிக்கும். புதிய விஷயங்களை கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். புதிய திட்டத்தை தொடங்க இது நல்ல நேரம். சனிப்பெயர்ச்சி தாக்கத்தால் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். பயணத்திற்கான வாய்ப்புகளும் உண்டு புதிய நண்பர்களும் அமைவார்கள். புதிய தொழில் தொடங்கும் வாய்ப்புகள் உண்டாகும். தொழில் படிப்பு வேலை அனைத்திலும் நல்லவைகளே நடக்கும்.
கும்ப ராசி
கும்ப ராசிக்காரர்களுக்கு 2025 ஆம் வருடம் உற்சாகமான ஆண்டாக அமையும். குரு பெயர்ச்சியின் தாக்கத்தால் உடல்நிலை சீராக இருக்கும் கடின உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். நிதி நிலைமை நன்றாக இருக்கும். புதிய நிலம் வீடு வாங்கக்கூடிய யோகம் கிடைக்கும். வியாபாரத்தில் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் உண்டாகும் ஆன்மீக ரீதியாக இந்த ஆண்டு மிகவும் சிறப்பானதாக அமையும்.
இதனையும் படியுங்கள் : செவ்வாய் வக்ர பெயர்ச்சியால் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்!!