அடுத்தமுறை ஹைதராபாத் ஸ்டைல் முட்டை கிரேவி இப்படி செஞ்சி பாருங்க! ஒரு சொட்டு கிரேவி கூட மிஞ்சாது!

ரொம்பவே சுவையான முட்டை கிரேவி பல வெரைட்டிகளில் நம்ம செய்திருக்கோம். இன்னைக்கு நம்ம பண்ண போறது ஹைதராபாத் ஸ்டைல பச்சை கலர் முட்டை கிரேவி. இந்த முட்டை கிரேவி ரொம்பவே ருசியாவும் தக்காளியே சேர்க்காம மிளகாய் தூள் எல்லாம் சேர்க்காமல் ரொம்ப ஈசியா செய்ய போறம். இந்த முட்டை கிரேவி சிம்பிளா

By Prem Kumar · 18/10/2024

ரொம்பவே சுவையான முட்டை கிரேவி பல வெரைட்டிகளில் நம்ம செய்திருக்கோம். இன்னைக்கு நம்ம பண்ண போறது ஹைதராபாத் ஸ்டைல பச்சை கலர் முட்டை கிரேவி. இந்த முட்டை கிரேவி ரொம்பவே ருசியாவும் தக்காளியே சேர்க்காம மிளகாய் தூள் எல்லாம் சேர்க்காமல் ரொம்ப ஈசியா செய்ய போறம். இந்த முட்டை கிரேவி சிம்பிளா ஒரு மசாலா அரைச்சு முட்டை கிரேவி வைக்க போறோம். இந்த முட்டை கிரேவி சாதம், தோசை, இட்லி,  சப்பாத்தி எல்லாத்துக்குமே ரொம்ப சுவையா இருக்கும்.

காரம் அதிகமா இல்லாததுனால இந்த முட்டை கிரேவி குழந்தைகளுக்கு ரொம்பவே பிடிக்கும். எல்லா சாப்பாட்டுக்கும் குழந்தைகளுக்கு இந்த முட்டை கிரேவி வைத்து  கொடுக்கலாம். முட்டையில் அதிக அளவு புரோட்டீன் இருக்கறதுனால குழந்தைகள் வளர தேவை. வளரும் குழந்தைகள் அப்படின்னா கண்டிப்பா ஒரு நாளைக்கு ஒரு முட்டை நிச்சயமா கொடுக்கணும். முட்டையை எப்போதும் வேக வைத்தோ அல்லது அடையாகவோ  இல்லை பொரியல் பண்ணியோ கொடுக்குறத விட இந்த மாதிரி வித்தியாசமா முட்டைல கிரேவி இதெல்லாம் பண்ணி கொடுத்தீங்கன்னா குழந்தைங்க ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க.

இந்த சுவையான முட்டை கிரேவி வீட்டில் இருக்கிற எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும். அதுவும் கலர் ஃபுல்லா இருக்கு அதனால ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க. குழந்தைகளுக்கு சாப்பாட்ட பார்த்தவுடனே அதோட கலர் தான் முதல்ல தெரியும் அதனால கலருக்காகவே சாப்பிடுவதற நிறைய குழந்தைகள் இருக்காங்க. அது மட்டும் இல்லாம இந்த முட்டை கிரேவி ரொம்ப சுவையாகவும் இருக்கும் இந்த சுவையான முட்டை கிரேவிய  ரொம்பவே ஈசியா செய்திடலாம். சரி வாங்க இந்த ஹைதராபாத் பச்சை கலர் முட்டை கிரேவி எப்படி செய்வது என்று தெரிஞ்சிக்கலாம்.

Recipes AMP · Quick view
View full