Home அசைவம் அடுத்தமுறை ஹைதராபாத் ஸ்டைல் முட்டை கிரேவி இப்படி செஞ்சி பாருங்க! ஒரு சொட்டு...

அடுத்தமுறை ஹைதராபாத் ஸ்டைல் முட்டை கிரேவி இப்படி செஞ்சி பாருங்க! ஒரு சொட்டு கிரேவி கூட மிஞ்சாது!

ரொம்பவே சுவையான முட்டை கிரேவி பல வெரைட்டிகளில் நம்ம செய்திருக்கோம். இன்னைக்கு நம்ம பண்ண போறது ஹைதராபாத் ஸ்டைல பச்சை கலர் முட்டை கிரேவி. இந்த முட்டை கிரேவி ரொம்பவே ருசியாவும் தக்காளியே சேர்க்காம மிளகாய் தூள் எல்லாம் சேர்க்காமல் ரொம்ப ஈசியா செய்ய போறம். இந்த முட்டை கிரேவி சிம்பிளா ஒரு மசாலா அரைச்சு முட்டை கிரேவி வைக்க போறோம். இந்த முட்டை கிரேவி சாதம், தோசை, இட்லி,  சப்பாத்தி எல்லாத்துக்குமே ரொம்ப சுவையா இருக்கும்.

-விளம்பரம்-

காரம் அதிகமா இல்லாததுனால இந்த முட்டை கிரேவி குழந்தைகளுக்கு ரொம்பவே பிடிக்கும். எல்லா சாப்பாட்டுக்கும் குழந்தைகளுக்கு இந்த முட்டை கிரேவி வைத்து  கொடுக்கலாம். முட்டையில் அதிக அளவு புரோட்டீன் இருக்கறதுனால குழந்தைகள் வளர தேவை. வளரும் குழந்தைகள் அப்படின்னா கண்டிப்பா ஒரு நாளைக்கு ஒரு முட்டை நிச்சயமா கொடுக்கணும். முட்டையை எப்போதும் வேக வைத்தோ அல்லது அடையாகவோ  இல்லை பொரியல் பண்ணியோ கொடுக்குறத விட இந்த மாதிரி வித்தியாசமா முட்டைல கிரேவி இதெல்லாம் பண்ணி கொடுத்தீங்கன்னா குழந்தைங்க ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க.

இந்த சுவையான முட்டை கிரேவி வீட்டில் இருக்கிற எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும். அதுவும் கலர் ஃபுல்லா இருக்கு அதனால ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க. குழந்தைகளுக்கு சாப்பாட்ட பார்த்தவுடனே அதோட கலர் தான் முதல்ல தெரியும் அதனால கலருக்காகவே சாப்பிடுவதற நிறைய குழந்தைகள் இருக்காங்க. அது மட்டும் இல்லாம இந்த முட்டை கிரேவி ரொம்ப சுவையாகவும் இருக்கும் இந்த சுவையான முட்டை கிரேவிய  ரொம்பவே ஈசியா செய்திடலாம். சரி வாங்க இந்த ஹைதராபாத் பச்சை கலர் முட்டை கிரேவி எப்படி செய்வது என்று தெரிஞ்சிக்கலாம்.

Print
3.67 from 3 votes

ஹைதராபாத் ஸ்டைல் முட்டை கிரேவி | Hyderabad egg gravy in tamil

ரொம்பவே சுவையான முட்டை கிரேவி பல வெரைட்டிகளில் நம்ம செய்திருக்கோம். இன்னைக்கு நம்ம பண்ண போறது ஹைதராபாத் ஸ்டைல பச்சை கலர் முட்டை கிரேவி. இந்த முட்டை கிரேவி ரொம்பவே ருசியாவும் தக்காளியே சேர்க்காம மிளகாய் தூள் எல்லாம் சேர்க்காமல் ரொம்ப ஈசியா செய்ய போறம். இந்த முட்டை கிரேவி சிம்பிளா ஒரு மசாலா அரைச்சு முட்டை கிரேவி வைக்க போறோம். இந்த முட்டை கிரேவி சாதம், தோசை, இட்லி,  சப்பாத்தி எல்லாத்துக்குமே ரொம்ப சுவையா இருக்கும்.
Prep Time15 minutes
Active Time14 minutes
Total Time29 minutes
Course: Gravy, Side Dish
Cuisine: Hyderabad
Keyword: aloo egg gravy, chettinadu egg curry, egg gravy
Yield: 4 people
Calories: 208kcal
Cost: 75

Equipment

  • 1 மிக்ஸி
  • 1 கடாய்
  • 1 கரண்டி

தேவையான பொருட்கள்

  • 5 முட்டை
  • 1 வெங்காயம்
  • 1 கைப்பிடி பச்சைமிளகாய்
  • 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1 ஸ்பூன் சீரகம்
  • 1/4 ஸ்பூன் மஞ்சள்தூள்
  • 1 ஸ்பூன் மல்லிதூள்
  • 1/2 ஸ்பூன் சீரகதூள்
  • 1/4 ஸ்பூன் கரமசாலா
  • 2 ஸ்பூன் தயிர்
  • 1/4 கப் பால்
  • தேவையான அளவு உப்பு                             
  • தேவையான அளவு எண்ணெய்

செய்முறை

  • முதலில் முட்டைகளை வேக வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் வெங்காயம், பச்சை மிளகாய், புதினா, கொத்தமல்லி இலைகளை சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் விழுதாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  • பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சீரகம் சேர்த்து தாளித்ததும் அதில் அரைத்து வைத்துள்ள வெங்காய பச்சை மிளகாய் மசாலாவை சேர்த்து நன்றாக வதக்கி விடவும்.
  • பிறகு இதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக பச்சை வாசனை போகும் வரை வதக்கி விட வேண்டும். பின் அதில் தயிர் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.
  • இதில் மல்லி தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா, சீரகத்தூள் சேர்த்து நன்றாக கலந்து பச்சை வாசனை போகும்  வரை நன்றாக வதக்கி விட வேண்டும்.
  • பிறகு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மூடி போட்டு வேக வைக்க வேண்டும். கிரேவி நன்றாக கொதித்த பிறகு அதிலிருந்து எண்ணெய் பிரிந்து வரும் அப்பொழுது அதில் பாலை சேர்த்து நன்றாக கலந்து விட்டு லேசாக கொதிக்க விட வேண்டும்.
  • பிறகு வேக வைத்துள்ள முட்டைகளை இரண்டாக நறுக்கி கிரேவியில் சேர்த்து கலந்து விட்டு மூடி போட்டு ஐந்து நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி சூடாக பரிமாறினால் சுவையான ஹைதராபாத் ஸ்டைல் பச்சை கலர் முட்டை கிரேவி தயார்.

Nutrition

Calories: 208kcal | Carbohydrates: 21g | Protein: 31g | Fat: 155g