நுங்கு வைத்து சுவையான நுங்கு பாதாம் பால் அடிக்கிற வெயிலுக்கு குளு குளுன்னு செய்து குடித்து பாருங்கள் மெய்மறந்து விடுவீர்கள்!!
அடிக்கிற வெயிலுக்கு ஏதாவது ஜில்லுனு சாப்பிடணும் போல தான் இருக்கும் அந்த மாதிரி தோணும் போது கடைகளில் போய் ஜூஸ், ரஸ்னா, ஜிகர்தண்டா, பாதாம் பால், ரோஸ் மில்க், மிக்சர் ஜூஸ் அப்படின்னு ஏதாவது வாங்கி சாப்பிடுவோம். குழந்தைகளுக்கு வேற வீட்டில் இருந்தால் ஏதாவது கேட்டு அடம் பிடிச்சுக்கிட்ட
அடிக்கிற வெயிலுக்கு ஏதாவது ஜில்லுனு சாப்பிடணும் போல தான் இருக்கும் அந்த மாதிரி தோணும் போது கடைகளில் போய் ஜூஸ், ரஸ்னா, ஜிகர்தண்டா, பாதாம் பால், ரோஸ் மில்க், மிக்சர் ஜூஸ் அப்படின்னு ஏதாவது வாங்கி சாப்பிடுவோம். குழந்தைகளுக்கு வேற வீட்டில் இருந்தால் ஏதாவது கேட்டு அடம் பிடிச்சுக்கிட்டே இருப்பாங்க. அந்த மாதிரி கேக்குற குழந்தைகளுக்கு கடைகளில் போய் வாங்கி கொடுக்காமல் வீட்டிலேயே ஏதாவது செஞ்சு கொடுங்கள்.
அந்த வகையில இந்த கோடை காலத்தில் ரொம்ப ஜில்லென்று இருக்கக்கூடிய நுங்கு வைத்து ஒரு சூப்பரான நுங்கு பாதாம் பால் செய்து கொடுங்கள். காலம் காலமாக வெயிலை தணிக்க நாம் வழக்கமாக குடிக்கும் பானங்களில் ஒன்றுதான் இந்த பாதாம் பால். இது குடித்தால் சிறிதளவு தாகம் தீரும் எனவும் உடலில் வெப்பநிலையை சற்று குறைக்கவும் முடியும் என நம்பப்பட்டு வருகிறது. நாம் வழக்கமாக குடிக்கும் பாதாம் பால் சிலருக்கு சலித்து போகி இருக்கலாம்.
இந்த நிலையில் நாம் எளிமையாக வீட்டிலேயே குளுகுளுப்பாக நுங்கு பாதாம் பால் எப்படி செய்வது என்பதை இங்கு பார்க்கலாம். சிலர் வீட்டிலேயே பாதாம் பால் போட்டு குடிப்பார்கள். இது செய்வது மிகவும் எளிமையான செய்முறை தான். உங்களுக்கு வீட்டிலேயே பாதாம் பால் செய்ய தெரியவில்லை என்றால் கவலை வேண்டாம். எளிமையான முறையில் நுங்கு பாதாம் பால் போடுவது எப்படி செய்வது என்று தான் இங்கு பார்க்கப்போகிறோம்.
தற்போது குழந்தைகளுக்கு பள்ளி விடுமுறை என்பதால் அதிக நேரம் விளையாடி கொண்டு தான் இருப்பார்கள். அந்த வகையில் விளையாடி களைத்து போய் வரும் குழந்தைகளுக்கு நுங்கு கொண்டு சத்தான, சுவையான மற்றும் வயிறு நிரம்பும்படியான இந்த நுங்கு பாதாம் பால் செய்து கொடுங்கள் கண்டிப்பாக விரும்பி குடிப்பார்கள். இப்போது சுவையான நுங்கு பாதாம் பால் எப்படி செய்வதென்று பார்ப்போம்.
இதனையும் படியுங்கள் : வரும் கோடை வெயிலுக்கு இதமா குடிக்க சுவையான இந்த நுங்கு ரோஸ் மில்க் செஞ்சு பாருங்க! இதன் சுவையே தனி தான்!