வரும் கோடை வெயிலுக்கு இதமா குடிக்க சுவையான இந்த நுங்கு ரோஸ் மில்க் செஞ்சு பாருங்க! இதன் சுவையே தனி தான்!

- Advertisement -

வெயில் காலம் ஆரம்பிச்சுடுச்சு இனிமேல் எல்லாரும் சாப்பாடு சாப்பிடுகிறார்களோ இல்லையோ கண்டிப்பாக ஒரு நாளைக்கு இரண்டு மூன்று ஜூஸ் சர்பத் அப்படின்னு குடிப்பாங்க. இந்த மாதிரி நம்ம ஜூஸ் எல்லாமே குடிச்சா தான் நம்ம உடம்பு கொஞ்சமாவது கூலிங் ஆயிருக்கும் இல்லனா சூடு பிடிச்சுட்டு சூட்டு கட்டி கண் எரிச்சல் அப்படின்னு எக்கச்சக்கமான பிரச்சனைகள் வரும். அது தடுக்கணும் அப்படின்னா ஜில்லுனு ஏதாவது ஜூஸ் கொடுக்கணும் அந்த ஜூஸ் கூட நிறைய  ஆரோக்கியம் இல்லாதது இருக்கிறது. ஆனா நம்ம இந்த மாதிரி ஹெல்த்தி இல்லாதத குடிக்க கூடாது ஹெல்தியான பழச்சாறு சர்பத் கரும்பு ஜூஸ் அப்படித்தான் குடிக்கணும்.

-விளம்பரம்-

அந்த வகையில எல்லாருக்கும் ரொம்ப வே புடிச்ச ரோஸ்மில்க் தான் இப்ப பாக்க போறோம். இந்த ரோஸ்மில்களையும் நம்ம புதுசா நுங்கு ஆட் பண்ணி கொஞ்சம் வித்தியாசமா நுங்கு ரோஸ் மில்க் தான் பார்க்க போறோம். குழந்தைங்க சனி ஞாயிறு ல வீட்ல இருந்தாங்கன்னா அவங்களுக்கு குளு குளுன்னு இந்த நுங்கு ரோஸ்மில்க் செஞ்சு கொடுங்க ரொம்பவே விரும்பி குடிப்பாங்க கண்டிப்பா குழந்தைகள் லீவு நாள்ல வெளியில போய் விளையாடு வாங்க அப்போ அவங்க டயர்டா வரும்போது இந்த ரோஸ் மில்க் செஞ்சு கொடுத்தா போதும் ரொம்பவே விரும்பி குடிப்பாங்க உங்க உடம்புக்கு ஆரோக்கியமானதாகவும் இருக்கும்.

- Advertisement -

இந்த ரோஸ் மில்க் செய்வது ரொம்பவே ஈசி நம்ம பொதுவா கடைகள்ல வாங்கி குடிச்சிருப்போம் ஆனால் ஒரு தடவை இந்த மாதிரியும் உங்க வீட்டிலேயே செஞ்சு குடிச்சு பாருங்க அதுக்கப்புறம் உங்களுக்கு அந்த டேஸ்ட் ரொம்பவே புடிச்சி போயிடும். நுங்கு நம்ம தனியா சாப்பிட்டு இருப்போம் ஆனால் இந்த ரோஸ் மில்க் ஓட நொங்கு சேர்த்து குடிக்கும் போது அதோட ருசியை ரொம்ப தனியா ரொம்ப சூப்பராவே இருக்கும். இப்ப வாங்க இந்த சூப்பரான நுங்கு ரோஸ் மில்க் எப்படி செய்வது என்று பார்க்கலாம்

Print
5 from 1 vote

நுங்கு ரோஸ் மில்க் | Ice apple Rose Milk Recipe In Tamil

எல்லாருக்கும் ரொம்பவே புடிச்ச ரோஸ்மில்க்தான் இப்ப பாக்க போறோம். இந்த ரோஸ்மில்களையும் நம்ம புதுசா நுங்கு ஆட் பண்ணி கொஞ்சம் வித்தியாசமா நுங்கு ரோஸ் மில்க் தான் பார்க்க போறோம். குழந்தைங்க சனி ஞாயிறு ல வீட்ல இருந்தாங்கன்னாஅவங்களுக்கு குளு குளுன்னு இந்த நுங்கு ரோஸ்மில்க் செஞ்சு கொடுங்க ரொம்பவே விரும்பி குடிப்பாங்க கண்டிப்பா குழந்தைகள் லீவு நாள்ல வெளியில போய் விளையாடு வாங்க அப்போ அவங்க டயர்டா வரும்போது இந்த ரோஸ் மில்க் செஞ்சு கொடுத்தா போதும் ரொம்பவே விரும்பி குடிப்பாங்க உங்க உடம்புக்கு ஆரோக்கியமானதாகவும் இருக்கும்.
Prep Time5 minutes
Active Time5 minutes
Course: Drinks
Cuisine: tamil nadu
Keyword: Ice apple Rose Milk
Yield: 2
Calories: 281kcal

Equipment

  • 1 பால் பாத்திரம்

தேவையான பொருட்கள்

  • 4 நுங்கு
  • 4 டீஸ்பூன் தேன்
  • 1 டீஸ்பூன் ரோஸ் சிரப்
  • 1/2 லிட்டர் பால்
  • 10 பிஸ்தா பருப்பு
  • ஐஸ் கட்டிகள் தேவையான அளவு

செய்முறை

  • முதலில் ஒரு பாத்திரத்தில் பால் சேர்த்து நன்றாக காய்ச்சி அதனை ஆற வைத்துக் கொள்ளவும்
  • நுங்கின்மேல் தோலை நீக்கிவிட்டு ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு கொஞ்சம் கொர கொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். ஆறிய பாலில் தேன் மற்றும் பிஸ்தா பருப்புகளை பொடியாக்கி சேர்த்துக் கொள்ளவும்
  • பிறகு ரோஸ் சிரப் அரைத்து வைத்துள்ள நுங்கு அனைத்தையும் சேர்த்து கலந்து தேவையான அளவு ஐஸ் கட்டிகள் போட்டுக் கொள்ளவும்.
  • இப்பொழுது சுவையான வெயிலுக்கு ஏற்ற நுங்கு ரோஸ்மில்க் தயார்.
  • இதனை பிரிட்ஜுக்குள் அரை மணி நேரம் வைத்து பிறகு குடித்தால் சுவை இன்னும் அருமையாக இருக்கும்.

Nutrition

Serving: 150ml | Calories: 281kcal | Carbohydrates: 3.3g | Protein: 3.1g | Sodium: 32mg | Potassium: 213mg | Fiber: 1g

இதையும் படியுங்கள் : கொய்யாப்பழ ரோஸ் மில்க் ஷேக் ஒரு முறை இப்படி செய்து! இனி அடிக்கடி இந்த சுவையான மில்க் ஷேக் தான் செய்து குடிப்பீர்கள்!