Advertisement
சைவம்

மாலை நேர பசி எடுத்தால் சட்டுனு இடியாப்ப பிரியாணி இப்படி சாப்பிட்டு பாருங்க! பார்த்தாலே நாவில் எச்சி ஊறும்!

Advertisement

இப்போ உணவு வகைகள்ல பிரியாணி ஒரு பிரதான உணவாக மாறிட்டு இருக்கு. எந்த விசேஷமானாலும் இல்லை ஏதாவது ஒரு பண்டிகை ஆனாலும் பிரியாணி இல்லாம நம்ம சாப்பிடுறதே கிடையாது. அந்த பிரியாணி அசைவ பிரியாணி ஆகவும் இருக்கலாம்   அல்லது சைவ பிரியாணியாகவும் இருக்கலாம்.அது விழாக்களை பொருத்து மாறி அமைகிறது. ஆனால் பிரியாணி அப்படிங்கறதுக்கு நாம ரொம்ப முக்கியமான ஒரு இடத்தில உணவு பட்டியலில் கொடுத்திருக்கிறோம். அப்படிப்பட்ட பிரியாணியை எப்போதும் பிரதான உணவாக சாப்பிட்ட நாம் இப்போ அதை டிபனா செய்து சாப்பிட போறோம்.

பிரதான உணவு வகைகள் இருந்த பிரியாணியை எப்படிப்பா டிபனா சாப்பிட போறோம் அப்படின்னு யோசிக்கிறீங்களா. இப்ப நீங்க சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி, காளான் பிரியாணி, பன்னீர் பிரியாணி, வெஜிடபிள் பிரியாணி, பிளைன் பிரியாணி முட்டை,  மீன் ,இறால் இப்படி  பிரியாணிகளில் பல வகைகள் சாப்பிடிருந்தாலும் இப்ப நீங்க சாப்பிட போறது இடியாப்ப பிரியாணி. இந்த இடியாப்ப பிரியாணி எப்படி செய்வது பார்க்கலாம். இந்த இடியாப்ப பிரியாணி ரொம்ப சுலபமாகவும் டேஸ்டியாவும் மாலை நேரங்கள்ல பிரியாணியோட சுவைல சாப்பிட  நினைப்பவர்களுக்கு இந்த இடியாப்பத்தில் பிரியாணி செய்து மாலை நேரங்கள்ல டிபன் கொடுக்கும் போது அவங்க ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க.

Advertisement

குழந்தைகளுக்கும் இது ஒரு வித்தியாசமான மாலை சிற்றுண்டியா இருக்கும். அப்படிப்பட்ட மாலை சிற்றுண்டி இடியாப்ப பிரியாணி ரொம்ப சுலபமா எப்படி செய்து சாப்பிட போறோம் அப்படிங்கறத தெரிஞ்சுக்க போறோம். இதுக்கு நம்ம ரொம்ப கஷ்டப்பட்டு மசாலாக்கள் எல்லாம் அரைக்க போறது இல்ல எல்லாமே பாக்கெட் மசாலா வாங்கி வைத்திருந்து அந்த மசாலாவில்  நம்ம இப்போ செய்ய போறோம். ஏன் இடியாப்பம் அப்படிங்கிறது ஆல்ரெடி தயார் நிலையில்  வச்சிருக்க ஒரு உணவு அதை வைத்து நம்ம பண்ணும் போது ரொம்ப நேரம் வேக வைக்கிறது அவசியம் இல்லை.  ஆகையால் நம்ம  ரொம்ப சுலபமாக செய்யறதுக்கு அந்த பவுடர் எல்லாம் நமக்கு  ரொம்ப உபயோகமா இருக்கும். சுலபமா செய்யப்போறம் இந்த இடியாப்ப பிரியாணியை. எப்படி இந்த இடியாப்ப பிரியாணி செய்யலாம் அப்படிங்கிறத தெரிஞ்சிக்கலாம் வாங்க.

இடியாப்ப பிரியாணி | Idiyappa Biryani Recipe In Tamil

Advertisement
Print Recipe
குழந்தைகளுக்கும் இது ஒரு வித்தியாசமான மாலை சிற்றுண்டியா இருக்கும். அப்படிப்பட்ட மாலை சிற்றுண்டி இடியாப்ப பிரியாணி ரொம்ப சுலபமா எப்படி செய்து சாப்பிட போறோம் அப்படிங்கறத தெரிஞ்சுக்க போறோம். இதுக்கு நம்ம ரொம்ப கஷ்டப்பட்டு மசாலாக்கள் எல்லாம் அரைக்க போறது இல்ல எல்லாமே பாக்கெட் மசாலா வாங்கி வைத்திருந்து அந்த மசாலாவில்  நம்மஇப்போ செய்ய போறோம். ஏன் இடியாப்பம்
Advertisement
அப்படிங்கிறது ஆல்ரெடி தயார் நிலையில்  வச்சிருக்கஒரு உணவு அதை வைத்து நம்ம பண்ணும் போது ரொம்ப நேரம் வேக வைக்கிறது அவசியம் இல்லை.  ஆகையால்நம்ம  ரொம்பசுலபமாக செய்யறதுக்கு அந்த பவுடர் எல்லாம் நமக்கு  ரொம்பஉபயோகமா இருக்கும். சுலபமா செய்யப்போறம் இந்த இடியாப்ப பிரியாணியை. எப்படி இந்த இடியாப்ப பிரியாணி செய்யலாம் அப்படிங்கிறத தெரிஞ்சிக்கலாம் வாங்க.
Course LUNCH
Cuisine tamil nadu
Keyword Idiyaappa Biryani
Prep Time 5 minutes
Cook Time 10 minutes
Servings 4
Calories 643

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 2 கப் உதிர்த்த இடியாப்பம்
  • 1 தக்காளி
  • 2 வெங்காயம்
  • 1 ஸ்பூன் மிளகாய் தூள்
  • 1 ஸ்பூன் கரம் மசாலா
  • 1 ஸ்பூன் பிரியாணி மசாலா
  • 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • உப்பு  தேவையானஅளவு

Instructions

  • இடியாப்பத்தை நன்றாக உதிரி உதிரியாக உதிர்த்து கொள்ளவும். வெங்காயத்தை நீளவாக்கிலும், தக்காளியை பொடியாகவும் நறுக்கிக் கொள்ளவும்.
  • அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய், நெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு போட்டு தாளிக்கவும். பிறகு அதில் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து நன்றாக பொன்னிறமாக வதக்கவும்.
  • வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் தக்காளி சேர்த்து நன்றாக குழைய வதக்கவும்.தக்காளி சுருண்டு வரும் போது இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
     
  • இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போனதும் உப்பு, மிளகாய் தூள், கரம் மசாலா, பிரியாணி மசாலா சேர்த்து 2 நிமிடம் கிளறி விடவும்
  • மசாலா பச்சை வாசனை போனவுடன் உதிர்த்து வைத்துள்ள இடியாப்பத்தை சேர்த்து தன்றாக கலந்து விட்டு அடுப்பிலிருந்து இறக்கி விடவும். சுவையான சூப்பரான இடியாப்ப பிரியாணி ரெடி.
  • மாலை நேர சிற்றுண்டிக்கு அருமையான சுவையில் இடியாப்ப பிரியாணி பரிமாற தயார்.

Nutrition

Serving: 400g | Calories: 643kcal | Carbohydrates: 43g | Cholesterol: 32mg | Sodium: 342mg | Potassium: 543mg | Calcium: 4.5mg
Advertisement
Prem Kumar

Recent Posts

இன்றைய ராசிபலன் – 12 மே 2024!

மேஷம் இன்று செய்யும் தர்மகாரியம் உங்களுக்கு மன அமைதி மற்றும் சவுகரியத்தைக் கொண்டு வரும். சக அலுவலர்களும் மற்றவர்களும் கவலை…

4 நிமிடங்கள் ago

வீடே மணக்க மணக்க ருசியான ஆலு மேத்தி கிரேவி ஒரு முறை இப்படி செய்து பாருங்கள்!

இன்று இரவு உங்கள் வீட்டில் செய்யும் சப்பாத்தி, பூரிக்கு வித்தியாசமான சுவையுடைய சைடு டிஷ் என்ன செய்யலாம் என்று யோசித்துக்…

8 மணி நேரங்கள் ago

பிரட் இல்லாமலே பிரட் அல்வா செய்யலாம் எப்படி தெரியுமா ? இதோ இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

அல்வா என்றாலே அனைவரின் நாவிலும் நீர் சுரக்கத்தான் செய்யும். அப்படி இருக்க  ப்ரட் அல்வாவை அதன் வாசனையிலேயே மனம் நிறைய…

12 மணி நேரங்கள் ago

காலிஃப்ளவர் முட்டை ப்ரை எப்படி ஒரு தடவை செஞ்சு அசத்துங்க!

எப்பவும் சாதத்துக்கு ஒரே மாதிரியான பொரியல் செஞ்சு சாப்பிட்டு போர் அடிச்சிடுச்சா அப்போ உங்களுக்கு தான் இந்த காலிஃப்ளவர் முட்டை…

12 மணி நேரங்கள் ago

டேஸ்டியான மற்றும் ஆரோக்கியமான வெஜிடபிள் அவல் கட்லெட் 10 நிமிடத்தில் வீட்டிலேயே ஒரு முறை இப்படி செய்து பாருங்கள்!!

நம்மில் பலருக்கும் கட்லெட் மிகவும் பிடித்த ஸ்னாக்ஸ் ரெசிபிகளில் ஒன்று. அந்தவகையில், ஆரோக்கியமான மற்றும் சத்து நிறைந்த ஒரு ரெசிபி…

13 மணி நேரங்கள் ago

தீராத துன்பங்கள் அனைத்தும் தீர்ந்து போவதற்கு ஆஞ்சநேயரை வழிபட வேண்டிய முறை

ராம நாமத்தை மனதார உச்சரித்து முழுமனதோடு ஆஞ்சநேயரே வேண்டுபவர்களை அவர் ஒருபோதும் கைவிடுவதில்லை. ராமருடைய தீவிர பக்தரான ஆஞ்சநேயர் தைரியம்…

14 மணி நேரங்கள் ago