மாலை நேர பசி எடுத்தால் சட்டுனு இடியாப்ப பிரியாணி இப்படி சாப்பிட்டு பாருங்க! பார்த்தாலே நாவில் எச்சி ஊறும்!

- Advertisement -

இப்போ உணவு வகைகள்ல பிரியாணி ஒரு பிரதான உணவாக மாறிட்டு இருக்கு. எந்த விசேஷமானாலும் இல்லை ஏதாவது ஒரு பண்டிகை ஆனாலும் பிரியாணி இல்லாம நம்ம சாப்பிடுறதே கிடையாது. அந்த பிரியாணி அசைவ பிரியாணி ஆகவும் இருக்கலாம்   அல்லது சைவ பிரியாணியாகவும் இருக்கலாம்.அது விழாக்களை பொருத்து மாறி அமைகிறது. ஆனால் பிரியாணி அப்படிங்கறதுக்கு நாம ரொம்ப முக்கியமான ஒரு இடத்தில உணவு பட்டியலில் கொடுத்திருக்கிறோம். அப்படிப்பட்ட பிரியாணியை எப்போதும் பிரதான உணவாக சாப்பிட்ட நாம் இப்போ அதை டிபனா செய்து சாப்பிட போறோம்.

-விளம்பரம்-

பிரதான உணவு வகைகள் இருந்த பிரியாணியை எப்படிப்பா டிபனா சாப்பிட போறோம் அப்படின்னு யோசிக்கிறீங்களா. இப்ப நீங்க சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி, காளான் பிரியாணி, பன்னீர் பிரியாணி, வெஜிடபிள் பிரியாணி, பிளைன் பிரியாணி முட்டை,  மீன் ,இறால் இப்படி  பிரியாணிகளில் பல வகைகள் சாப்பிடிருந்தாலும் இப்ப நீங்க சாப்பிட போறது இடியாப்ப பிரியாணி. இந்த இடியாப்ப பிரியாணி எப்படி செய்வது பார்க்கலாம். இந்த இடியாப்ப பிரியாணி ரொம்ப சுலபமாகவும் டேஸ்டியாவும் மாலை நேரங்கள்ல பிரியாணியோட சுவைல சாப்பிட  நினைப்பவர்களுக்கு இந்த இடியாப்பத்தில் பிரியாணி செய்து மாலை நேரங்கள்ல டிபன் கொடுக்கும் போது அவங்க ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க.

- Advertisement -

குழந்தைகளுக்கும் இது ஒரு வித்தியாசமான மாலை சிற்றுண்டியா இருக்கும். அப்படிப்பட்ட மாலை சிற்றுண்டி இடியாப்ப பிரியாணி ரொம்ப சுலபமா எப்படி செய்து சாப்பிட போறோம் அப்படிங்கறத தெரிஞ்சுக்க போறோம். இதுக்கு நம்ம ரொம்ப கஷ்டப்பட்டு மசாலாக்கள் எல்லாம் அரைக்க போறது இல்ல எல்லாமே பாக்கெட் மசாலா வாங்கி வைத்திருந்து அந்த மசாலாவில்  நம்ம இப்போ செய்ய போறோம். ஏன் இடியாப்பம் அப்படிங்கிறது ஆல்ரெடி தயார் நிலையில்  வச்சிருக்க ஒரு உணவு அதை வைத்து நம்ம பண்ணும் போது ரொம்ப நேரம் வேக வைக்கிறது அவசியம் இல்லை.  ஆகையால் நம்ம  ரொம்ப சுலபமாக செய்யறதுக்கு அந்த பவுடர் எல்லாம் நமக்கு  ரொம்ப உபயோகமா இருக்கும். சுலபமா செய்யப்போறம் இந்த இடியாப்ப பிரியாணியை. எப்படி இந்த இடியாப்ப பிரியாணி செய்யலாம் அப்படிங்கிறத தெரிஞ்சிக்கலாம் வாங்க.

Print
4.80 from 5 votes

இடியாப்ப பிரியாணி | Idiyappa Biryani Recipe In Tamil

குழந்தைகளுக்கும் இது ஒரு வித்தியாசமான மாலை சிற்றுண்டியா இருக்கும். அப்படிப்பட்ட மாலை சிற்றுண்டி இடியாப்ப பிரியாணி ரொம்ப சுலபமா எப்படி செய்து சாப்பிட போறோம் அப்படிங்கறத தெரிஞ்சுக்க போறோம். இதுக்கு நம்ம ரொம்ப கஷ்டப்பட்டு மசாலாக்கள் எல்லாம் அரைக்க போறது இல்ல எல்லாமே பாக்கெட் மசாலா வாங்கி வைத்திருந்து அந்த மசாலாவில்  நம்மஇப்போ செய்ய போறோம். ஏன் இடியாப்பம் அப்படிங்கிறது ஆல்ரெடி தயார் நிலையில்  வச்சிருக்கஒரு உணவு அதை வைத்து நம்ம பண்ணும் போது ரொம்ப நேரம் வேக வைக்கிறது அவசியம் இல்லை.  ஆகையால்நம்ம  ரொம்பசுலபமாக செய்யறதுக்கு அந்த பவுடர் எல்லாம் நமக்கு  ரொம்பஉபயோகமா இருக்கும். சுலபமா செய்யப்போறம் இந்த இடியாப்ப பிரியாணியை. எப்படி இந்த இடியாப்ப பிரியாணி செய்யலாம் அப்படிங்கிறத தெரிஞ்சிக்கலாம் வாங்க.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: LUNCH
Cuisine: tamil nadu
Keyword: Idiyaappa Biryani
Yield: 4
Calories: 643kcal

Equipment

 • 1 கடாய்

தேவையான பொருட்கள்

 • 2 கப் உதிர்த்த இடியாப்பம்
 • 1 தக்காளி
 • 2 வெங்காயம்
 • 1 ஸ்பூன் மிளகாய் தூள்
 • 1 ஸ்பூன் கரம் மசாலா
 • 1 ஸ்பூன் பிரியாணி மசாலா
 • 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
 • உப்பு  தேவையானஅளவு

செய்முறை

 • இடியாப்பத்தை நன்றாக உதிரி உதிரியாக உதிர்த்து கொள்ளவும். வெங்காயத்தை நீளவாக்கிலும், தக்காளியை பொடியாகவும் நறுக்கிக் கொள்ளவும்.
 • அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய், நெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு போட்டு தாளிக்கவும். பிறகு அதில் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து நன்றாக பொன்னிறமாக வதக்கவும்.
 • வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் தக்காளி சேர்த்து நன்றாக குழைய வதக்கவும்.தக்காளி சுருண்டு வரும் போது இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
   
 • இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போனதும் உப்பு, மிளகாய் தூள், கரம் மசாலா, பிரியாணி மசாலா சேர்த்து 2 நிமிடம் கிளறி விடவும்
 • மசாலா பச்சை வாசனை போனவுடன் உதிர்த்து வைத்துள்ள இடியாப்பத்தை சேர்த்து தன்றாக கலந்து விட்டு அடுப்பிலிருந்து இறக்கி விடவும். சுவையான சூப்பரான இடியாப்ப பிரியாணி ரெடி.
 • மாலை நேர சிற்றுண்டிக்கு அருமையான சுவையில் இடியாப்ப பிரியாணி பரிமாற தயார்.

Nutrition

Serving: 400g | Calories: 643kcal | Carbohydrates: 43g | Cholesterol: 32mg | Sodium: 342mg | Potassium: 543mg | Calcium: 4.5mg