Home சைவம் இட்லி, தோசைக்கு ருசியான அரைச்சி விட்ட குருமா இப்படி செய்து பாருங்க! இட்லி தோசைக்கு சூப்பராக...

இட்லி, தோசைக்கு ருசியான அரைச்சி விட்ட குருமா இப்படி செய்து பாருங்க! இட்லி தோசைக்கு சூப்பராக இருக்கும்!

idli dosa kuruma

இட்லி, தோசைக்கு எப்பொழுதும் சாம்பார், அல்லது சட்னி செஞ்சி சாப்பிட்டு சாப்பிட்டு போர் அடித்து விட்டதா? அப்போ இனி கவலை வேண்டாம் இது போன்று குருமா செஞ்சி சாப்பிட்டு பாருங்க. மீண்டும் மீண்டும் சுவைக்க தோன்றும்.

-விளம்பரம்-

இதையும் படியுங்கள் : வெள்ளை பூசணி சாம்பார் இப்படி செய்து பாருங்க! ஒரே மாதிரயாக சாம்பார் வைப்பதற்கு ஒரு மாறுதலாக இருக்கும்!

எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க. இந்த குருமா எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

Print
4.17 from 6 votes

இட்லி, தோசை குருமா | Idli, Dosa, Kuruma Recipe In Tamil

இட்லி, தோசைக்கு எப்பொழுதும் சாம்பார், அல்லது சட்னி செஞ்சி சாப்பிட்டு சாப்பிட்டு போர் அடித்து விட்டதா? அப்போ இனி கவலை வேண்டாம் இது போன்று குருமா செஞ்சி சாப்பிட்டு பாருங்க. மீண்டும் மீண்டும் சுவைக்க தோன்றும். எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க. இந்த குருமா எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
Prep Time5 minutes
Active Time10 minutes
Total Time15 minutes
Course: Breakfast, dinner
Cuisine: Indian, TAMIL
Keyword: Kuruma, குருமா
Yield: 4 people
Calories: 120kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

அரைப்பதற்கு:

  • 4 பல் பூண்டு
  • 2 பீஸ் இஞ்சி
  • 2 பச்சை மிளகாய்
  • துருவிய தேங்காய் ஒரு கைப்பிடி
  • 10 முந்திரி பருப்பு
  • 1 தக்காளி நறுக்கியது

தாளிப்பதற்கு:

  • 2 ஸ்பூன் கடலை எண்ணெய்
  • 1 பெரிய வெங்காயம் நறுக்கியது
  • 2 பட்டை
  • 2 கிராம்பு
  • 1 டீஸ்பூன் சோம்பு
  • கருவேப்பிலை கொஞ்சம்
  • ½ கப் சோயாபீன்ஸ்
  • 1 டீஸ்பூன் மிளகாய் பொடி
  • 1 டீஸ்பூன் தனியா பொடி
  • ½ டீஸ்பூன் கரம் மசாலா
  • ½ டீஸ்பூன் சோம்பு பொடி
  • உப்பு தேவையான அளவு
  • கொத்தமல்லி தலை கொஞ்சம்

செய்முறை

  • முதலில் அரைப்பதற்கு கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்சியில் சேர்த்து நன்கு பேஸ்ட் போல் அரைத்துக்கொள்ளவும்.
  • அடுத்து ஓர் கடாயில் கடலை எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, சோம்பு சேர்த்து பொரிந்ததும், நறுக்கிய வெங்காயம் சேர்த்து அத்துடன் கருவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.
  • வெங்காயம் வதங்கியதும் சோயாபீன்ஸ் சேர்த்து தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து மூடி போட்டு கொதிக்க விடவும்.
  • நன்கு கொதித்ததும் அரைத்து வைத்துள்ள பேஸ்டை சேர்த்து அத்துடன் நறுக்கிய கொத்தமல்லி தலைகளை தூவி ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.

Nutrition

Serving: 450G | Calories: 120kcal | Carbohydrates: 23g | Protein: 11g | Fat: 0.1g | Saturated Fat: 0.5g | Cholesterol: 0.2mg | Potassium: 56mg | Fiber: 4g | Sugar: 0.5g