இன்ஸ்டன்ட் மாங்காய் ஊறுகாய் இந்த மாதிரி செஞ்சு பாருங்க!!
ஊறுகாய் உண்ணும் உணவை ஊட்டி விடும் அப்படின்னு சொல்லுவாங்க அதுக்கு தகுந்த மாதிரி எந்த சாப்பாடா இருந்தாலும் கொஞ்சமா ஊறுகாய் இருந்தா போதும் பிடிக்காத சாப்பாடு கூட பிடிச்ச மாதிரி மாறிடும். அதுலயும் தயிர்சாதம் மோர் சாதம் பழைய சாதம் இது எல்லாத்துக்குமே ஊறுகாய் அவ்ளோ சூப்பரா இருக்கும். இ
ஊறுகாய் உண்ணும் உணவை ஊட்டி விடும் அப்படின்னு சொல்லுவாங்க அதுக்கு தகுந்த மாதிரி எந்த சாப்பாடா இருந்தாலும் கொஞ்சமா ஊறுகாய் இருந்தா போதும் பிடிக்காத சாப்பாடு கூட பிடிச்ச மாதிரி மாறிடும். அதுலயும் தயிர்சாதம் மோர் சாதம் பழைய சாதம் இது எல்லாத்துக்குமே ஊறுகாய் அவ்ளோ சூப்பரா இருக்கும். இதுக்கு மட்டும் இல்லாம சுடு கஞ்சி சாம்பார் சாதம் பருப்பு சாதம் இதுக்கும் கூட ஊறுகாய் வைத்து சாப்பிடுவது ரொம்ப ரொம்ப டேஸ்டாவே இருக்கும். சிலருக்கு ஊறுகாய பார்த்தாலே நாக்குல எச்சில் வரும் ஏதாவது சாப்பிடணும் போல தோணும். மாங்காய் ஊறுகாய், எலுமிச்சை ஊறுகாய், பூண்டு ஊறுகாய், தக்காளி ஊறுகாய், நெல்லிக்காய் ஊறுகாய் அப்படின்னு எக்கச்சக்கமான ஊறுகாய் ரெசிபி இருக்கு.
அந்த வகையில இன்னைக்கு நம்ம இந்த கோடை காலத்துல நமக்கு அதிகமா கிடைக்கக்கூடிய மாங்காய் வச்சு ஒரு சூப்பரான இன்ஸ்டன்ட் மாங்காய் ஊறுகாய் செய்யப் போறோம். இந்த மாங்காய் ஊறுகாய் செய்வதற்கு ஒரு சிலர் தனி மிளகாய் தூள் பயன்படுத்து வாங்க ஆனா நம்ம குழம்பு மிளகாய்த்தூள் பயன்படுத்தி இன்ஸ்டன்ட்டா 10 நிமிஷத்துல இந்த ஊறுகாய் செய்யப் போறோம். இந்த ஊறுகாய் ரெசிபி இருந்தா போதும் பழைய சாதத்தைக் கூட விரும்பி சாப்பிடுவாங்க. இந்த வெயில் காலத்துக்கு எல்லாருக்குமே பழைய சாதம் தயிர் சாதம், மோர்சாதம் இதுதான் சாப்பிடணும் போல தோணும்.
அந்த வகையில இந்த சூப்பரான இன்ஸ்டன்ட் மாங்காய் ஊறுகாய் செஞ்சு அதுக்கு சைடு டிஷ் ஆக வைத்து சாப்பிட்டால் எவ்வளவு வேணும்னாலும் சாப்பிடலாம். இந்த டைம்ல வீட்ல சாதம் மிஞ்சிடுச்சு அப்படின்னா கவலையே கிடையாது தண்ணி ஊத்தி வச்சிட்டு காலையில பழைய சாதமா மாத்தி கூட இந்த மாதிரி ஒரு ஊறுகாய் செஞ்சு கொடுத்துட்டீங்கன்னா சாதம் சட்டுன்னு காலியாகிவிடும் இன்னும் கொஞ்சம் வேணும்னு கேப்பாங்க அந்த அளவுக்கு டேஸ்ட்டா இருக்கும். இந்த ஊறுகாய் செய்வதற்கு ரொம்ப ரொம்ப குறைவான பொருட்கள் மட்டுமே போதுமானது. இப்ப வாங்க இந்த ருசியான இன்ஸ்டன்ட் மாங்காய் ஊறுகாய் ரெசிபி எப்படி செய்யறதுன்னு பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : இது வரை கோவைக்காயை கொண்டு வறுவல், பொரியல் தான் செய்துள்ளீர்களா? இனி கோவைக்காயில் ஊறுகாய் செய்து பாருங்கள் இதன் சுவைக்கு அடிமையாகிவிடுவீர்கள்!!!