இது வரை கோவைக்காயை கொண்டு வறுவல், பொரியல் தான் செய்துள்ளீர்களா? இனி கோவைக்காயில் ஊறுகாய் செய்து பாருங்கள் இதன் சுவைக்கு அடிமையாகிவிடுவீர்கள்!!!

- Advertisement -

ஊறுகாய் இல்லையென்றால் சிலருக்கு உணவே இறங்காது. அந்தளவுக்கு அதன் சுவைக்கு அடிமையாகியிருப்பார்கள். ஊறுகாய்க்கு தேவையான பொருட்கள் குறிப்பிட்ட பருவத்தில் கிடைக்காதவையாக இல்லாதிருந்தாலும் கூட ஊறுகாய் எப்போதும் கிடைக்கிறது. தென்னிந்திய உணவில் ஊறுகாய்க்கு எப்போதுமே இடம் உண்டு. நம் வீட்டில் இருக்கும் பாட்டிமார்கள் குளிர்காலத்தில் தான் ஊறுகாய் போடும் மாங்காய், எலுமிச்சை பழங்களை காய வைப்பார்கள். அப்போது தான் அது சரியான பதத்தில் பழுத்து வரும். நம் வீடுகளில் அனைத்து உணவுகளுடனும் ஊறுகாய் பரிமாறப்படுகிறது.

-விளம்பரம்-

உணவின் சுவை எப்படி இருந்தாலும் சரி, அதனுடன் ஊறுகாய் இருந்தால் போதும். சுவை பன்மடங்கு அதிகமாகி விடும். மாங்காய், எலுமிச்சை முதல் சிவப்பு மற்றும் பச்சை மிளகாய், கேரட், பூண்டு, மீன் மற்றும் கோழி என கிட்டத்தட்ட எல்லாவற்றையும் ஊறுகாய் செய்கிறோம். நீங்கள் இதுவரை எத்தனையோ வகையான ஊறுகாயை சுவைத்திருப்பீர்கள். ஆனால் கோவைக்காயில் ஊறுகாய் செய்து சாப்பிட்டதுண்டா? இல்லையென்றால் இன்று அந்த ஊறுகாயை செய்து பாருங்கள். அதுவும் இந்த கோவைக்காய் ஊறுகாய் சாதம், சப்பாத்தி, தோசை போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.

- Advertisement -

நீங்கள் உங்கள் வீட்டை விட்டு வெளியூர்களில் வேலை செய்பவராயின், உங்கள் அம்மாவிடம் இந்த ஊறுகாயை செய்து கொடுக்கச் சொல்லி சாப்பிடுங்கள். நல்ல காரசாரமான இந்த ஊறுகாய் சைடு டிஷ் இல்லாத நாட்களில் நிச்சயம் கைகொடுக்கும். காரம் மற்றும் புளிப்பு சுவையின் கலவையான இந்த கோவைக்காய் ஊறுகாய் சப்பாத்தி முதல் தயிர் சாதம் வரை பல உணவுகளுக்கு பெஸ்ட் சைடு டிஷ் ஆக இருக்கும். பக்குவமாக வைத்துக் கொண்டால் 6 மாதம் வரை வைத்து ருசிக்கலாம். கடைகளில் வாங்கும் ஊறுகாய்களில் பிரிசர்வேட்டிவ்கள் சேர்க்கப்பட்டிருக்கும். இதற்கு பதிலாக சுகாதாரமான முறையில் நாமே வீட்டில் செய்தால் ஆரோக்கியத்திற்கு உகந்ததாக இருக்கும்.

Print
No ratings yet

கோவைக்காய் ஊறுகாய் | Kovakkai Pickle Recipe In Tamil

ஊறுகாய் இல்லையென்றால் சிலருக்கு உணவே இறங்காது. அந்தளவுக்கு அதன் சுவைக்கு அடிமையாகியிருப்பார்கள். உணவின் சுவை எப்படி இருந்தாலும் சரி, அதனுடன் ஊறுகாய் இருந்தால் போதும். சுவை பன்மடங்கு அதிகமாகி விடும். மாங்காய், எலுமிச்சை முதல் சிவப்பு மற்றும் பச்சை மிளகாய், கேரட், பூண்டு, மீன் மற்றும் கோழி என கிட்டத்தட்ட எல்லாவற்றையும் ஊறுகாய் செய்கிறோம். நீங்கள் இதுவரை எத்தனையோ வகையான ஊறுகாயை சுவைத்திருப்பீர்கள். ஆனால் கோவைக்காயில் ஊறுகாய் செய்து சாப்பிட்டதுண்டா? இல்லையென்றால் இன்று அந்த ஊறுகாயை செய்து பாருங்கள். அதுவும் இந்த கோவைக்காய் ஊறுகாய் சாதம், சப்பாத்தி, தோசை போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.
Prep Time10 minutes
Active Time15 minutes
Total Time25 minutes
Course: Pickle
Cuisine: Indian, TAMIL
Keyword: Kovakkai Pickle
Yield: 4 People
Calories: 211kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 மிக்ஸி
  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1/2 கி கோவைக்காய்
  • 3 டேபிள் ஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 4 டேபிள் ஸ்பூன் புளி கரைசல்
  • உப்பு தேவையான அளவு
  • நல்லெண்ணெய் தேவையான அளவு
  • 1 டீஸ்பூன் கடுகு
  • 1/2 டீஸ்பூன் வெந்தயம்
  • 2 வர ‌மிளகாய்
  • 2 கொத்து கறிவேப்பிலை
  • 1 துண்டு வெல்லம்
  • 10 பல் பூண்டு

செய்முறை

  • முதலில் கோவைக்காயை நன்கு கழுவி விட்டு நீள வாக்கில் துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • பின் பூண்டை தோல் உரித்து வைத்துக் கொள்ளவும். ஒரு‌ மிக்ஸி ஜாரில் வெந்தயம், கடுகு சேர்த்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும். ஒரு பவுளில் புளியை நன்கு கரைத்து வைத்துக் கொள்ளவும்.
  • பின் கோவைக்காயில் மிளகாய்த்தூள் மற்றும் உப்பு சேர்த்து பிரட்டி பத்து நிமிடங்கள் வரை ஊற வைத்துக் கொள்ளவும். சிறிது நேரம் கழித்து அதிலிருந்து வரும் சாறை பிழிந்து வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஊற வைத்துள்ள கோவைக்காயை சேர்த்து நன்கு வதக்கி வைத்துக் கொள்ளவும்.
  • பின் அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து கலந்து புளி விழுதை சேர்த்து ஐந்து நிமிடங்கள் நன்கு வேக விடவும்.
  • அதன்பிறகு வதக்கி வைத்துள்ள கோவைக்காயை சேர்த்து நன்கு கலந்து பொடித்து வைத்துள்ள கடுகு, வெந்தய பொடியை சேர்த்து நன்கு கலந்து விடவும்.
  • அதன்பிறகு இறுதியாக வெல்லம் சேர்த்து நன்கு கலந்து ஊறுகாயில் எண்ணெய் பிரிந்து வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.
  • தயாரான ஊறுகாயை எடுத்து ஒரு கண்ணாடி பௌலில் சேர்த்து வைத்து கொள்ளவும். இந்த கோவைக்காய் ஊறுகாய் சூடான சாதம், தயிர் சாதம், கலந்த சாதம், சப்பாத்தி போன்ற எல்லா உணவுடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

Nutrition

Serving: 550g | Calories: 211kcal | Carbohydrates: 3.4g | Protein: 14g | Fat: 2g | Sodium: 93.5mg | Potassium: 183mg | Fiber: 6.1g | Vitamin A: 81IU | Vitamin C: 312mg | Calcium: 25mg | Iron: 9.6mg

இதனையும் படியுங்கள் : காரசாரமான ருசியில் கோவைக்காய் ப்ரை இனி இப்படி செஞ்சி பாருங்க! அட்டகாசமாக இருக்கும்!