Home ஸ்நாக்ஸ் காரசாரமான ருசியில் கோவைக்காய் ப்ரை இனி இப்படி செஞ்சி பாருங்க! அட்டகாசமாக இருக்கும்!

காரசாரமான ருசியில் கோவைக்காய் ப்ரை இனி இப்படி செஞ்சி பாருங்க! அட்டகாசமாக இருக்கும்!

நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஒவ்வொரு காய்கறிகளும் ஒவ்வொரு விதமாக நமக்கு ஆரோக்கியத்தை அளிக்கின்றன. அதே போல் ஒரே விதமான காய்கறிகளை கொண்டு செய்யும் உணவு வகைகளை செய்து தராமல், சற்று வித்தியாசமாக செய்ய நினைப்பவர்களுக்கு தான் இந்த பதிவு. அந்த வகையில் உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய காய்களில் ஒன்றான கோவைக்காயை வைத்து இன்று நாம் சுவையான, சத்தான மற்றும் சுலபமாக கோவைக்காய் ப்ரை எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகிறோம். கோவைக்காய் உடலுக்கு மிகவும் நல்லது. கோவைக்காயில் பல விதமான சத்துக்கள் இருப்பதால் இவை உடம்பிற்கு மிகவும் நல்லது. குறிப்பாக இதில் உடம்பிற்கு மிகவும் அவசியமான இரும்பு சத்து, புரத சத்து, மற்றும் கால்சியம் அதிகம் இருக்கிறது. கோவைக்காய் தொப்பை, சர்க்கரை நோய், சிறுநீர் கழிப்பதில் பிரச்சனை, சிறுநீரகத்தில் கல் போன்ற பல நோய்களுக்கு நல்ல மருந்தாக பயன்படுகிறது.

-விளம்பரம்-

சர்க்கரை நோய்க்கான சிறந்த மருந்துதான் கோவைக்காய். இதில் உள்ள வைட்டமின்கள் B1, B2, B3, C மற்றும் இரும்பு, சுண்ணாம்பு, பொட்டாசியம் சத்துக்கள் உள்ளன. இதயம் சம்பந்தப்பட்ட நோய்களை குணப்படுத்தும். இதய துடிப்பினை சீராக்கும். இத்தனை சிறப்பு வாய்ந்த கோவக்காயில் ப்ரை செய்து குழந்தைகளுக்கு கொடுக்கும் போது அது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இந்த கோவைக்காய் ப்ரை சுவையான மற்றும் மொறு மொறுப்பானது. மாலை நேரங்களில் காபி அல்லது டீ யுடன் வைத்து சாப்பிட சுவையாக இருக்கும். மதிய உணவுடன் சாப்பிடுவதற்கும் பிரமாதமாக இருக்கும். எலுமிச்சை சாதம், தக்காளி சாதம், தயிர் சாதம், தேங்காய் சாதம் ஆகியவற்றுடன் சுவையாக இருக்கும். ருசியான இந்த கோவைக்காய் ப்ரை எப்படி செய்வதென்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

Print
5 from 1 vote

கோவைக்காய் ப்ரை | Kovakkai Fry Recipe In Tamil

நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஒவ்வொரு காய்கறிகளும் ஒவ்வொரு விதமாக நமக்கு ஆரோக்கியத்தை அளிக்கின்றன. அதே போல் ஒரே விதமான காய்கறிகளை கொண்டு செய்யும் உணவு வகைகளை செய்து தராமல், சற்று வித்தியாசமாக செய்ய நினைப்பவர்களுக்கு தான் இந்த பதிவு. அந்த வகையில் உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய காய்களில் ஒன்றான கோவைக்காயை வைத்து இன்று நாம் சுவையான, சத்தான மற்றும் சுலபமாக கோவைக்காய் ப்ரை எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகிறோம். கோவைக்காய் உடலுக்கு மிகவும் நல்லது. கோவைக்காயில் பல விதமான சத்துக்கள் இருப்பதால் இவை உடம்பிற்கு மிகவும் நல்லது. இந்த கோவைக்காய் ப்ரை சுவையான மற்றும் மொறு மொறுப்பானது. மாலை நேரங்களில் காபி அல்லது டீ யுடன் வைத்து சாப்பிட சுவையாக இருக்கும். மதிய உணவுடன் சாப்பிடுவதற்கும் பிரமாதமாக இருக்கும்.
Prep Time10 minutes
Active Time10 minutes
Total Time20 minutes
Course: LUNCH
Cuisine: Indian
Keyword: Kovakkai Fry
Yield: 4 People
Calories: 60kcal

Equipment

  • 1 கடாய்
  • 1 பவுள்

தேவையான பொருட்கள்

  • 250 கி கோவைக்காய்
  • 1/4 கப் கடலை மாவு
  • 2 டீஸ்பூன் அரிசி மாவு
  • 2 டீஸ்பூன் கார்ன் ப்ளவர்
  • 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1/2 டீஸ்பூன் சாம்பார் தூள்
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 டீஸ்பூன் ஆம்சூர் பவுடர்
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு
  • 1 கொத்து கறிவேப்பில்லை

செய்முறை

  • முதலில் கோவைக்காயை நன்கு கழுவி ஒரு துணியில் துடைத்து விட்டு நீளவாக்கில் நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • பின் நறுக்கி வைத்துள்ள கோவைக்காய், அரிசி மாவு, கடலை மாவு, கார்ன் பிளவர், காஷ்மீர் மிளகாய்த்தூள், உப்பு, சாம்பார் தூள், மஞ்சள் தூள், கறிவேப்பிலை சேர்த்து கலந்து கொள்ளவும்.
  • பின் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் விட்டு கெட்டியாக கலந்து கொள்ளவும்.
  • ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கோவைக்காயை சேர்த்து பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
  • இதனை ஒரு பவுளுக்கு மாற்றி விட்டு அதனுடன் ஆம்சூர் பவுடர் சேர்த்து கலந்து கொள்ளவும். கறிவேப்பிலையை தனியாக பொரித்து இதனுடன் சேர்த்து கொள்ளவும்.
  • அவ்வளவுதான் மிகவும் சுவையான, மொறு மொறு கோவைக்காய் வறுவல் தயார். இது அனைத்து வகை சாதத்திற்கும் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

Nutrition

Serving: 300g | Calories: 60kcal | Carbohydrates: 9.8g | Protein: 26.2g | Fat: 2.7g | Saturated Fat: 1.4g | Sodium: 35mg | Potassium: 67mg | Fiber: 2.3g | Vitamin A: 28IU | Vitamin C: 6mg | Calcium: 66mg | Iron: 10mg

இதனையும் படியுங்கள் : ருசியான இந்த கோவைக்காய் சாம்பார் வச்சு பாருங்க. சாம்பார்ன்னா இப்படித்தான் இருக்கணும்னு எல்லோரும் உங்கள பாராட்டுவாங்க!!!