பூஜை அறையில் இருக்க கூடாத சில பொருட்கள்!
பூஜை அறையில் சுவாமி படங்களை தான் பெரும்பாலும் அனைவருமே வைத்து வழிபடுவோம். ஆனால் சாமி படம் தவிர பூஜைகளில் ஒரு சில பொருட்களை வைத்து நாம் வழிபட்டு வருவதால் வீட்டில் பல பிரச்சினைகள் வரும் என்று கூறப்படுகிறது. ஒருவேளை உங்களுடைய வீட்டில் சாமி படங்கள் சிலைகளைத் தவிர வேறு ஏதாவது பொருட்கள
பூஜை அறையில் சுவாமி படங்களை தான் பெரும்பாலும் அனைவருமே வைத்து வழிபடுவோம். ஆனால் சாமி படம் தவிர பூஜைகளில் ஒரு சில பொருட்களை வைத்து நாம் வழிபட்டு வருவதால் வீட்டில் பல பிரச்சினைகள் வரும் என்று கூறப்படுகிறது. ஒருவேளை உங்களுடைய வீட்டில் சாமி படங்கள் சிலைகளைத் தவிர வேறு ஏதாவது பொருட்கள் இருந்தால் இந்த பதிவினை பார்த்து அதனை சரி செய்து கொள்ளுங்கள். அதனைப் பற்றி விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம்.
பூஜை அறையில் வைக்க கூடாத பொருட்கள்
பொதுவாக எந்த கோவிலுக்கு போனாலும் அங்குள்ள சாமி சிலைகளை புகைப்படம் எடுத்து வீட்டில் வந்து அதனை பிரேம் போட்டு மாட்டி வைக்கும் பழக்கம் ஒரு சிலருக்கு உள்ளது. அதனால் நம் வீட்டில் நிறைய சாமி படங்களும் சேர்ந்துவிடும் ஆனால் அந்த சுவாமி படங்களுக்கு எல்லாம் நாம் பூஜை செய்யாவிட்டால் நம் குடும்பத்தில் நிச்சயமாக கஷ்டங்கள் ஏற்படும். எனவே உங்கள் வீட்டில் எத்தனை சுவாமி படங்கள் இருந்தாலும் அனைத்திற்கும் பூஜை புனஸ்காரங்கள் செய்ய வேண்டும்.
ஒரு சிலர் சில வீடியோக்களை பார்த்துவிட்டு அதில் உள்ள சில சுவாமி சிலைகள் சக்கரம் என்று ஒரு சில பொருட்களை வாங்கி வந்து பூஜையறையில் வைப்பார்கள் ஆனால் அதற்கு நாம் முறையாக பூஜை செய்யாமல் அப்படியே வைத்து விட்டாலும் நம் வீட்டில் கஷ்டங்கள் வரும்.
நிறைய சுவாமி படங்களை பூஜை அறையில் சேர்த்து வைத்தால் சில நேரத்தில் அந்த படத்தில் பூச்சி பிடித்து போகும். பூஜை அறை பராமரிக்கப்படாமல் இருந்தால் நிச்சயமாக அந்த இடத்தில் தெய்வம் வாழாது குடும்பத்தில் நிச்சயமாக பிரச்சனைகள் வரும்.
பூஜை அறையில் உள்ள தேவையில்லாத சுவாமி படங்களை எல்லாம் நீக்கிவிட்டு உங்களுக்கு தெய்வீகமான சுவாமி படங்களை மட்டும் வைத்து அதனை நன்றாக சுத்தம் செய்து அதற்கு ஏற்ற பூஜை புனஸ்காரங்களை செய்ய வேண்டும்.
மிகவும் பழையதாக மாறிவிட்ட சுவாமி படங்களை பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்ய கூடாது அதனை எல்லாம் நீக்கிவிட வேண்டும் இப்படி செய்தால் நிச்சியமாக குடும்பத்தில் கஷ்டங்கள் தீரும்.
அனைவரது வீட்டிலும் விநாயகர் முருகர் லட்சுமி சரஸ்வதி பெருமாள் குலதெய்வம் போன்ற தெய்வ படங்களை மட்டுமே பூஜை அறையில் வைத்து வழிபடுவது நல்லது. இந்த படங்களுக்கு தினமும் பொட்டு வைத்து பூ வைத்து நெய்வேத்தியம் வைத்து வழிபட்டாலே தெய்வீக அருள் பரிபூரணமாக கிடைக்கும்.
இதனையும் படியுங்கள் : பூஜையறையில் செய்யக் கூடாத முக்கியமான தவறுகள்! இந்த தவறுகளை மறந்தும் கூட செய்துவிடாதீர்கள்!!