பூஜையறையில் செய்யக் கூடாத முக்கியமான தவறுகள்! இந்த தவறுகளை மறந்தும் கூட செய்துவிடாதீர்கள்!!

- Advertisement -

ஒவ்வொரு வீட்டிலும் பூஜை அறையில் முக்கியமான ஒரு இடம் வீட்டில் சிறிய இடம் இருந்தாலும் ஏதாவது ஒரு சிறு பகுதி செய்வதற்காக கிழக்கு திசை நோக்கி வைத்திருப்போம். இறைவனை வணங்குவதற்கு பெரிதும் முக்கியத்துவம் கொடுப்போம். அப்படி இறைவழிபாடு செய்யும் பூஜை அறையை பராமரிப்பது ரொம்ப முக்கியமான ஒன்று ஒருவர் வீட்டிற்குள் நுழைந்தவுடன் வீட்டில் பூஜை அறையை சமையலறை பார்த்து தான் அந்த வீட்டில் உள்ளவர்களை புரிந்து கொள்வார்கள். நமது பூஜை அறை எப்படி சுத்தமாகவும் தெய்வம்சம் பொருந்தியதாகவும் இருக்கிறதோ அதுபோல நமது வீடும் முகமும் லக்ஷ்மி கடாட்சத்துடன் இருக்கும் பண வரவு அதிகரிக்கும்.

-விளம்பரம்-

வீடுகளில் வழிபாடு நடத்துவதற்கும் சில முறைகள் உள்ளன. அவற்றை பற்றி வேதங்களில் பல இடங்களில் கூறப்பட்டுள்ளது. அதன்படி, வீட்டில் பூஜை செய்யும் இடம் சரியான திசையில் அமைந்தால் வாழ்வில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும். மாறாக, தவறான திசையில் வீட்டின் வழிபாட்டு அறை இருந்தால், பல வகையான பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். மேலும், பூஜை அறையில் செய்யக்கூடாத சில விஷயங்களை நாம் கடைபிடிக்க வேண்டும், அப்படி கடைப்பிடித்தால் தெய்வங்களின் பரிபூரண அருள் நமக்கு கிடைக்கும். என்ன விஷயங்களை செய்யக்கூடாது என்பதனை பற்றி இந்த ஆன்மீக பதிவில் பார்க்கலாம்.

- Advertisement -

பூஜை அறையில் செய்ய‌ கூடாதவை

தீபம் ஏற்றும்போது தீபத்தின் ஒளி எந்த அளவிற்கு பிரகாசமாய் இருக்கிறதோ அந்த வீடும் பிரகாசமாய் இருக்கும். இதற்கு வைப்பதற்கான எண்ணிக்கைகள் கிடையாது.

அன்னம் முதலியவற்றை எவர்சில்வர் பாத்திரங்களில் நேரடியாக வைத்து தெய்வங்களுக்கு நிவேதனம் செய்யக்கூடாது.

பாத்திரத்தில் இலை வைத்து அதில் உணவை வைத்து நிவேதனம் செய்யலாம். எரியும் விளக்கில் எண்ணெய் அல்லது நெய்யை கையால் தொடுவதும் அதன் பிறகு அதைத் தன் தலையில் தடவிக் கொள்வதும் கூடாது.

-விளம்பரம்-

எப்போதும் பூஜை அறையில் தீபத்தின் ஒளியில்தான் நாம் தெய்வத்தை காண வேண்டும். கோயில் கருவறையில் தெய்வத்தின் அழகினை நாம் விளக்கில் எவ்வாறு கண்டு கொள்கிறோமோ அதனைப் போல நமது பூஜை அறையிலும் விளக்கில் தான் தெய்வத்தை பார்க்க வேண்டும். ஆனால் பலரது வீட்டில் வண்ணமயமான விளக்குகளை வைத்து அலங்கரித்து இருப்பார்கள் ஆனால் அப்படி செய்வது முற்றிலும் தவறு.

சிலர் விலக்கு ஏற்றும் பொழுதும் கூட கைபேசியை பேசிக்கொண்டே தான் விளக்கு ஏற்றுவார்கள் ஆனால் அப்படி நாம் செய்யக்கூடாது. விளக்கு ஏற்றும் பொழுது மனதார தெய்வத்தை வேண்டிக் கொண்டு நமக்கு என்ன வேண்டுமோ அதை தெய்வத்தின் முன்வைத்து விளக்கு ஏற்றினோமானால் அதன் பலன் நமக்கு முழுவதுமாக கிடைக்கும்.

தரையில் சுத்தமான பாய் அல்லது மனப்பலகை போட்டு அமர்ந்து தான் பூஜை செய்ய வேண்டும். தவிர நியூஸ் பேப்பர், பழைய துணி இவைகளை போட்டு அமர்ந்து பூஜை செய்யக்கூடாது.

-விளம்பரம்-

தெய்வத்திற்கு நெய்வேத்தியம் வைக்கும் பொழுது நாம் பயன்படுத்திய டம்ளரோ அல்லது வேறொரு பாத்திரத்திலோ எதுவும் வைக்கக் கூடாது. நெய்வேதியம் வைக்க வேண்டுமானால் அதற்கு தனி பாத்திரம் ஒன்றனை வைத்துக் கொள்ள வேண்டும்.

தெய்வத்திற்கு தீபாராதனை காட்டும் பொழுது மணியை மிகவும் சத்தமாக சிலர் அடிப்பார்கள் ஆனால் அப்படி செய்வது தவறான விஷயம். குழந்தைகளை கவனித்தால் தெரியும் அவர்கள் எவ்வாறு மணியை அடிக்கிறார்கள் என்று நாமும் அது போல் மணியை மெல்லமாக அடித்து தெய்வத்தை வழிபட வேண்டும்.