அசைவ சுவையில் பலாக்காய் குருமா ஒரு முறை இப்படி செய்து பாருங்கள் இதன் ருசிக்கு அடிமையாகி விடுவீர்கள்!!

பலாப்பழம் முக்கனிகளுள் ஒன்று. பலாப்பழ வாசனையை மூடி மறைக்க முடியாது. இதன் மேல் தோல் கரடுமுரடுமாக இருந்தாலும் பழத்தின் சுவை மட்டும் நாவிலே இருக்கும். பலாச்சுளையின் சுவையை வெறுப்போரும் இருக்க முடியாது. மிக அதிக இனிப்புச்சுவையுடைய பழங்களில் ஒன்று. கோடைகாலத்தில் பலாப்பழம் மற்றும் பலாக

By Prem Kumar · 14/6/2025

பலாப்பழம் முக்கனிகளுள் ஒன்று. பலாப்பழ வாசனையை மூடி மறைக்க முடியாது. இதன் மேல் தோல் கரடுமுரடுமாக இருந்தாலும் பழத்தின் சுவை மட்டும் நாவிலே இருக்கும். பலாச்சுளையின் சுவையை வெறுப்போரும் இருக்க முடியாது. மிக அதிக இனிப்புச்சுவையுடைய பழங்களில் ஒன்று. கோடைகாலத்தில் பலாப்பழம் மற்றும் பலாக்காய் அதிகம் கிடைக்கும். இந்த பழத்தைப் பார்த்தாலே நா ஊறும். அதேப் போன்று அதன் காயை சமைத்து சாப்பிட்டாலும், சுவையாக இருக்கும். இந்த பழம் பெரிதாகக் காய்ப்பதற்கு முன் சிறிய பிஞ்சாக இருக்கும்போதே சமைத்து சாப்பிடும் பழக்கம் நம் தமிழர்களிடையே உண்டு.

லேசான துவர்ப்புடன் இருக்கும் பலா பிஞ்சு ஏராளமான மருத்துவப் பயன்களைக் கொண்டிருக்கிறது. மேலும் இவற்றில் வைட்டமின் சி, ஏ, பொட்டாசியம், இரும்புச்சத்து, மக்னீசியம் போன்றவை அதிகம் நிறைந்துள்ளது. மேலும் பலாக்காயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளது. இதனை உணவில் சேர்த்து பார்வை கோளாறை தவிர்க்கலாம். பலாக்காய் சாப்பாட்டில் சேர்த்துக் கொள்வதினால் உடலில் புதிய ரத்தம் உற்பத்தி ஆகிறது. வலிமையை ஏற்படுத்துகிறது.

உங்கள் வீட்டில் உள்ளோர் பலாக்காயை சாப்பிடமாட்டார்கள் என்றால், அவர்களுக்கு ஒருமுறை இந்த பலாக்காய் குருமா செய்து கொடுங்கள். இந்த குருமா மிகவும் சுவையாக இருக்கும். அதுவும் ஒருமுறை இதை செய்து கொடுத்தால், அடிக்கடி செய்து கொடுக்குமாறு கேட்பார்கள். அந்த அளவில் சுவையாக இருக்கும். எப்பவுமே இட்லி தோசை சப்பாத்தி பூரிக்கு ஒரே மாதிரியா சட்னி சாம்பார் குருமா அப்படினு செஞ்சு ரொம்ப போர் அடிச்சு போச்சுன்னா இந்த பலாக்காய் குருமாவை ஒரு தடவை ட்ரை பண்ணி பாருங்க. இந்த ரெசிபி இட்லி தோசைக்கு அருமையா இருக்கும். இந்த ரெசிபில மசாலா அரைத்து சேர்க்கறதால சப்பாத்தி பூரிக்கும் கூட ரொம்ப ரொம்ப டேஸ்டா இருக்கும்.

இதனையும் படியுங்கள் : அடுத்தமுறை பலாக்காய் கிடைத்தால் மிஸ் பண்ணாம ருசியான மிளகு வறுவல் இனி இப்படி ட்ரை பண்ணி பாருங்கள்!

Recipes AMP · Quick view
View full