Advertisement
ஐஸ்

பலாப்பழம் கெடச்சா இப்படி ஒரு தடவை ஐஸ்கிரீம் செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

Advertisement

பலாப்பழம் சின்னதா பல காயா இருக்கும்போது அதை வச்சு நம்ம நிறைய ரெசிப்பிஸ் செஞ்சு சாப்பிட்டு இருப்போம் பலாக்காய் பிரியாணி பலாக்காய் கிரேவி அப்படின்னு செய்ற எல்லாமே ரொம்ப டேஸ்ட்டா இருக்கும். ஆனா பலாப்பழத்தை வைத்து நம்ம பெருசா எந்த ஒரு ரெசிபியும் செஞ்சு சாப்பிட்டு இருக்க மாட்டோம் பலாப்பழத்தை அப்படியே சாப்பிடுவதற்கு ரொம்ப ருசியா இருக்கும்.

ஆனா இப்ப நம்ம பலாப்பழத்தை வைத்து சூப்பரான ஒரு ஐஸ்கிரீம் தான் எப்படி செய்யறதுன்னு பாக்க போறோம். இந்த அடிக்கிற வெயிலுக்கு பலாப்பழத்தில் ஐஸ்கிரீம் செஞ்சு சாப்பிட்டா ரொம்பவே டேஸ்டா இருக்கும் தொண்டைக்கு இதமா நல்லா ஜில்லுனு சாப்பிட்டா அவ்வளவு சூப்பரா இருக்கும். இப்போ குழந்தைகளுக்கு லீவு விட்டு இருக்கிறதால அவங்க ஏதாவது டிஃபரண்டா செஞ்சு கொடுக்க சொல்லி கேட்டாங்கன்னா பலாப்பழத்தை வைத்து இந்த ஐஸ்க்ரீம் செஞ்சு குடுங்க ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க வெயில்ல போய் விளையாடவே மாட்டாங்க வீட்டுக்குள்ளேயே தான் இருப்பாங்க.

Advertisement

அவ்ளோ சூப்பரான இந்த பலாப்பழ ஐஸ் கிரீமை ஒரே ஒரு தடவை செஞ்சு பாருங்க அதுக்கப்புறம் பலாப்பழம் எப்ப வாங்கினாலும் இந்த ஐஸ்கிரீமை மறக்காம செஞ்சு சாப்பிடுவீங்க.அந்த அளவுக்கு இந்த பலாப்பழ ஐஸ்கிரீம் ஓட டேஸ்ட் உங்களுக்கு புடிச்சு போயிடும். இந்த பலாப்பழ ஐஸ் கிரீம் செய்வதற்கு நிறைய பொருட்கள் எல்லாம் தேவைப்படாது ரொம்ப குறைவான பொருட்கள் மட்டுமே தான் தேவைப்படும். இப்ப வாங்க ரொம்ப குறைவான பொருட்களை வைத்து சூப்பரான வாயில் வச்ச உடனே கரைய கூடிய ஜில்லுனு இருக்கக்கூடிய பலாப்பழ ஐஸ்கிரீம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

பலாப்பழ ஐஸ்கிரீம் | Jackfruit Icecream Recipe In Tamil

Print Recipe
Advertisement
சூப்பரான இந்த பலாப்பழ ஐஸ் கிரீமை ஒரே ஒரு தடவை செஞ்சு பாருங்க அதுக்கப்புறம் பலாப்பழம் எப்பவாங்கினாலும் இந்த ஐஸ்கிரீமை மறக்காம செஞ்சு சாப்பிடுவீங்க.அந்த அளவுக்கு இந்த பலாப்பழஐஸ்கிரீம் ஓட டேஸ்ட் உங்களுக்கு புடிச்சு போயிடும். இந்த பலாப்பழ ஐஸ் கிரீம் செய்வதற்குநிறைய பொருட்கள் எல்லாம் தேவைப்படாது ரொம்ப குறைவான பொருட்கள் மட்டுமே தான் தேவைப்படும்.இப்ப வாங்க ரொம்ப
Advertisement
குறைவான பொருட்களை வைத்து சூப்பரான வாயில் வச்ச உடனே கரைய கூடிய ஜில்லுனுஇருக்கக்கூடிய பலாப்பழ ஐஸ்கிரீம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
Course deserts
Cuisine tamil nadu
Keyword Jackfruit ice cream
Prep Time 1 day 12 hours
Cook Time 15 minutes
Servings 4
Calories 102

Equipment

  • 1 பெரிய பவுள்

Ingredients

  • 1 கப் பலாப்பழம்
  • 1 கப் ஃப்ரெஷ் க்ரீம்
  • 1 கப் பால்
  • 1 டேபிள் ஸ்பூன் சர்க்கரை
  • 1 டேபிள் ஸ்பூன் பால் பவுடர்

Instructions

  • முதலில் பலாபழத்தின் கொட்டைகளை நீக்கி விட்டு அதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளவும்
  • அதனுடன் பிரஷ் கிரீமையும் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்
  • இப்பொழுது ஒரு பாத்திரத்தில் பால் சேர்த்து அதனுடன் பால் பவுடர் மற்றும் சர்க்கரை சேர்த்து நன்றாககொதிக்க வைத்து ஆறவைத்து பலாப்பழ விழுதுடன் சேர்த்துக் கொள்ளவும்
  • அனைத்தையும் நன்றாக கிளறி ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் சேர்த்து அதன் மேல் சிறிதாக நறுக்கிய பலாப்பழதுண்டுகளை சேர்த்து அந்த டப்பாவை நன்றாக மூடி ஐந்து மணி நேரம் பிரிட்ஜுக்குள் வைத்து எடுத்தால் சுவையான பலாப்பழ ஐஸ்கிரீம்தயார்.

Nutrition

Serving: 300g | Calories: 102kcal | Carbohydrates: 22g | Protein: 7g | Fat: 1.2g | Potassium: 17mg | Sugar: 2.2g | Calcium: 8.8mg

இதனையும் படியுங்கள் : வீட்டில் இருக்கும் பாதாம் டிரிங் மிக்ஸ் வைத்தே சுவையான க்ரீமி ஐஸ்கிரீம் இப்படி செய்யலாம்!

Advertisement
Ramya

Recent Posts

ருசியான ஆந்திரா ஸ்டைல் கோங்குரா சாதம் இப்படி ஒரு முறை வீட்டிலயே செய்து பாருங்க!

சிலர் பலவகையான உணவுகளை சாப்பிட வேண்டும் என்ற ஆசையும் விருப்பம் கொண்டிருப்பார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு எல்லாம் மிகவும் விருப்பமான ஒரு உணவுமுறை…

6 நிமிடங்கள் ago

குளு குளுனு 90’Kids தேங்காய் பால் குச்சி ஐஸ் அடுப்பு பக்கமே போகாம சுலபமாக இப்படி செய்து பாருங்க!

ஐஸ் ஐஸ் ஐஸ் பால் ஜஸ் , சேமியா ஐஸ் 90ஸ் கிட்ஸோட பிடித்தமான சத்தம் அப்படினு சொல்லலாம். இப்பல்லாம்…

4 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 21 மே 2024!

மேஷம் புதிய பிரச்சினைகள் தோன்றி மன அழுத்தத்தை ஏற்படுத்தும். பணம் பற்றாக்குறையால் இன்று வீட்டில் வேற்றுமை காணப்படும். வேலையில் நல்ல…

11 மணி நேரங்கள் ago

மணமணக்கும் ருசியான கேரட் புலாவ் ஈஸியாக பதினைந்தே நிமிடத்தில் இப்படி செய்து பாருங்கள் மிகவும் ருசியாக இருக்கும்!!

புலாவ் உலகம் முழுவதும் பிரபலமடைந்து இருக்கும் ஒரு உணவு வகை. பொதுவாக வெரைட்டி ரைஸ் என்றாலே குழந்தைகள் அதிகம் விரும்பி…

1 நாள் ago

காலை வேளையில் உடல் சூட்டை குறைக்கும் இந்த வெந்தய களியை ஒரு முறை செய்து கொடுங்கள் பின் அடிக்கடி கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்!!!

அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தும் பல உணவு பொருள்கள், நமக்கு மருந்தாகவும் பயன்படக்கூடியவை. அதில் வெந்தயத்திற்கு மிக முக்கிய இடம் உண்டு.…

1 நாள் ago

விரதம் இருப்பதால் கிடைக்கும் நன்மைகள்

விரதம் என்ற சொல்லுக்கு பலவகையான அர்த்தங்கள் உள்ளது என்று சொல்லலாம். நோன்பு உபவாசம் உணவை தவிர்த்தல் என்று பல சொற்களால்…

2 நாட்கள் ago