Home ஐஸ் பலாப்பழம் கெடச்சா இப்படி ஒரு தடவை ஐஸ்கிரீம் செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

பலாப்பழம் கெடச்சா இப்படி ஒரு தடவை ஐஸ்கிரீம் செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

பலாப்பழம் சின்னதா பல காயா இருக்கும்போது அதை வச்சு நம்ம நிறைய ரெசிப்பிஸ் செஞ்சு சாப்பிட்டு இருப்போம் பலாக்காய் பிரியாணி பலாக்காய் கிரேவி அப்படின்னு செய்ற எல்லாமே ரொம்ப டேஸ்ட்டா இருக்கும். ஆனா பலாப்பழத்தை வைத்து நம்ம பெருசா எந்த ஒரு ரெசிபியும் செஞ்சு சாப்பிட்டு இருக்க மாட்டோம் பலாப்பழத்தை அப்படியே சாப்பிடுவதற்கு ரொம்ப ருசியா இருக்கும்.

-விளம்பரம்-

ஆனா இப்ப நம்ம பலாப்பழத்தை வைத்து சூப்பரான ஒரு ஐஸ்கிரீம் தான் எப்படி செய்யறதுன்னு பாக்க போறோம். இந்த அடிக்கிற வெயிலுக்கு பலாப்பழத்தில் ஐஸ்கிரீம் செஞ்சு சாப்பிட்டா ரொம்பவே டேஸ்டா இருக்கும் தொண்டைக்கு இதமா நல்லா ஜில்லுனு சாப்பிட்டா அவ்வளவு சூப்பரா இருக்கும். இப்போ குழந்தைகளுக்கு லீவு விட்டு இருக்கிறதால அவங்க ஏதாவது டிஃபரண்டா செஞ்சு கொடுக்க சொல்லி கேட்டாங்கன்னா பலாப்பழத்தை வைத்து இந்த ஐஸ்க்ரீம் செஞ்சு குடுங்க ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க வெயில்ல போய் விளையாடவே மாட்டாங்க வீட்டுக்குள்ளேயே தான் இருப்பாங்க.

அவ்ளோ சூப்பரான இந்த பலாப்பழ ஐஸ் கிரீமை ஒரே ஒரு தடவை செஞ்சு பாருங்க அதுக்கப்புறம் பலாப்பழம் எப்ப வாங்கினாலும் இந்த ஐஸ்கிரீமை மறக்காம செஞ்சு சாப்பிடுவீங்க.அந்த அளவுக்கு இந்த பலாப்பழ ஐஸ்கிரீம் ஓட டேஸ்ட் உங்களுக்கு புடிச்சு போயிடும். இந்த பலாப்பழ ஐஸ் கிரீம் செய்வதற்கு நிறைய பொருட்கள் எல்லாம் தேவைப்படாது ரொம்ப குறைவான பொருட்கள் மட்டுமே தான் தேவைப்படும். இப்ப வாங்க ரொம்ப குறைவான பொருட்களை வைத்து சூப்பரான வாயில் வச்ச உடனே கரைய கூடிய ஜில்லுனு இருக்கக்கூடிய பலாப்பழ ஐஸ்கிரீம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

Print
No ratings yet

பலாப்பழ ஐஸ்கிரீம் | Jackfruit Icecream Recipe In Tamil

சூப்பரான இந்த பலாப்பழ ஐஸ் கிரீமை ஒரே ஒரு தடவை செஞ்சு பாருங்க அதுக்கப்புறம் பலாப்பழம் எப்பவாங்கினாலும் இந்த ஐஸ்கிரீமை மறக்காம செஞ்சு சாப்பிடுவீங்க.அந்த அளவுக்கு இந்த பலாப்பழஐஸ்கிரீம் ஓட டேஸ்ட் உங்களுக்கு புடிச்சு போயிடும். இந்த பலாப்பழ ஐஸ் கிரீம் செய்வதற்குநிறைய பொருட்கள் எல்லாம் தேவைப்படாது ரொம்ப குறைவான பொருட்கள் மட்டுமே தான் தேவைப்படும்.இப்ப வாங்க ரொம்ப குறைவான பொருட்களை வைத்து சூப்பரான வாயில் வச்ச உடனே கரைய கூடிய ஜில்லுனுஇருக்கக்கூடிய பலாப்பழ ஐஸ்கிரீம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
Prep Time1 day 12 hours
Active Time15 minutes
Course: deserts
Cuisine: tamil nadu
Keyword: Jackfruit ice cream
Yield: 4
Calories: 102kcal

Equipment

  • 1 பெரிய பவுள்

தேவையான பொருட்கள்

  • 1 கப் பலாப்பழம்
  • 1 கப் ஃப்ரெஷ் க்ரீம்
  • 1 கப் பால்
  • 1 டேபிள் ஸ்பூன் சர்க்கரை
  • 1 டேபிள் ஸ்பூன் பால் பவுடர்

செய்முறை

  • முதலில் பலாபழத்தின் கொட்டைகளை நீக்கி விட்டு அதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளவும்
  • அதனுடன் பிரஷ் கிரீமையும் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்
  • இப்பொழுது ஒரு பாத்திரத்தில் பால் சேர்த்து அதனுடன் பால் பவுடர் மற்றும் சர்க்கரை சேர்த்து நன்றாககொதிக்க வைத்து ஆறவைத்து பலாப்பழ விழுதுடன் சேர்த்துக் கொள்ளவும்
  • அனைத்தையும் நன்றாக கிளறி ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் சேர்த்து அதன் மேல் சிறிதாக நறுக்கிய பலாப்பழதுண்டுகளை சேர்த்து அந்த டப்பாவை நன்றாக மூடி ஐந்து மணி நேரம் பிரிட்ஜுக்குள் வைத்து எடுத்தால் சுவையான பலாப்பழ ஐஸ்கிரீம்தயார்.

Nutrition

Serving: 300g | Calories: 102kcal | Carbohydrates: 22g | Protein: 7g | Fat: 1.2g | Potassium: 17mg | Sugar: 2.2g | Calcium: 8.8mg

இதனையும் படியுங்கள் : வீட்டில் இருக்கும் பாதாம் டிரிங் மிக்ஸ் வைத்தே சுவையான க்ரீமி ஐஸ்கிரீம் இப்படி செய்யலாம்!