இன்னும் மூன்று மாதங்களில் கடக ராசியில் பெயர்ச்சி அடையும் குரு பகவான் இனி இந்த ராசிகளுக்கு செல்வ மழை தான்!!

மனித வாழ்விற்கு தேவையான அனைத்து விதமான செல்வங்களையும் தருபவர் என்பதால், எந்த கிரகத்திற்கும் இல்லாத தனிச் சிறப்பு குருவிற்கும், குருவின் பார்வைக்கும் உண்டு. நவக்கிரகங்களில் முழுமையான சுப கிரகமாக திகழ்பவர், குரு பகவான். இவர் மனித வாழ்விற்கு தேவையான அனைத்து விதமான செல்வங்களையும் தரு

By ·

மனித வாழ்விற்கு தேவையான அனைத்து விதமான செல்வங்களையும் தருபவர் என்பதால், எந்த கிரகத்திற்கும் இல்லாத தனிச் சிறப்பு குருவிற்கும், குருவின் பார்வைக்கும் உண்டு. நவக்கிரகங்களில் முழுமையான சுப கிரகமாக திகழ்பவர், குரு பகவான். இவர் மனித வாழ்விற்கு தேவையான அனைத்து விதமான செல்வங்களையும் தருபவர் என்பதால், எந்த கிரகத்திற்கும் இல்லாத தனிச் சிறப்பு குருவிற்கும், குருவின் பார்வைக்கும் உண்டு. ஒரு ஜாதகத்தில் எத்தனை தோஷங்கள் இருந்தாலும், குரு பார்வை இருந்தால் கெடுபலன்கள் குறைந்து நற்பலன்கள் மிகும். எனவேதான் ஜோதிட சாஸ்திரம் ‘குரு பார்க்க கோடி நன்மை’ என்று கூறுகிறது. அந்த வகையில் ஜோதிடத்தில், சனி பெயர்ச்சிக்கு அடுத்தபடியாக அதிக முக்கியத்துவம் வாய்ந்த குரு கடக ராசிக்குள் நுழையும் போது ஆறு ராசிக்காரர்கள் பல நன்மைகளை பெறலாம். இதனிடையே வரும் அக்டோபர் 19 குரு மீண்டும் கடக ராசியில் பெயர்ச்சி அடைவார். இதன் பின்னர் டிசம்பரில் மிதுன ராசிக்குள் மீண்டும் நுழைவார். இந்த பெயர்ச்சி காரணமாக ஆறு ராசிக்காரர்கள் அபரிமிதமான பலனை பெற போகிறார்கள் யார் அந்த ராசிக்காரர்கள் என்று இந்த ஆன்மிகப் பதிவில் பார்ப்போம்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு குருவின் இந்தப் பெயர்ச்சியால் வருமானம் அதிகரிக்கும். பணியிடத்தில் ஆதரவு கிடைக்கும். பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. உற்சாகமாக எதையும் கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். வேலையில் எடுக்கும் முயற்சிகள் உங்களுக்கு வெற்றியைத் தரும். நிதி நிலைமை வலுவடையும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும், கௌரவம் மற்றும் புகழும் உயரும். வீட்டில் சுப நிகழ்வுகள் நடைபெறும். பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். பிள்ளைகளால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிறையும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள் குருவின் இந்தப் பெயர்ச்சியால் நிலுவையில் உள்ள பணிகளில் வெற்றி அடையும். பல முக்கியமான திட்டங்களை முடிப்பது நிதி நன்மைகளைத் தரும். நீங்கள் மத நடவடிக்கைகளில் பங்கேற்பீர்கள். ஆன்மீக தலங்களுக்கு சென்று வரும் வாய்ப்பு கிடைக்கும். ஆரோக்கியம் முன்பை விட சிறப்பாக இருக்கும். புதிய வேலைக்கான வாய்ப்புகளை பெறலாம். நின்றுபோன வேலைகள் முடியத் தொடங்கும். புதிய வேலையைத் தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் நல்ல வாய்ப்புகள் அதிகரிக்கும். வாகன யோகம் உண்டாகும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு குருவின் இந்தப் பெயர்ச்சியால் சிறந்த நேரத்தை தரும். உங்கள் கடின உழைப்பு பலனளிக்கும், மேலும் சமூகத்தில் புதிய மரியாதை மற்றும் அங்கீகாரத்தைப் பெறுவீர்கள். இந்த காலத்தில் வியாபாரத்தில் நல்ல லாபத்தை பெறலாம். சமூகத்தில் உங்கள் மரியாதை அதிகரிக்கும். புதிய வாகனங்களை வாங்கி மகிழ்வீர்கள். உங்களின் தேவைகள் எளிதாகப் பூர்த்தியாகும். வெளிநாடு செல்ல வாய்ப்பு உள்ளது. குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு, பாராட்டு கிடைக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு குருவின் இந்தப் பெயர்ச்சி நல்ல பலன்களை தரும். நம்பிக்கை அதிகரிக்கும். பெரிய இழப்பிலிருந்தும் நீங்கள் மீண்டு வர முடியும். பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும். நிலுவையில் உள்ள வேலைகள் விரைவில் முடிவடையும். குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். குழந்தைகளிடமிருந்து சில நல்ல செய்திகளைக் பெறுவீர்கள். வியாபாரிகள் திட்டமிட்ட வேலைகளில் கடுமையாக உழைப்பீர்கள். பொறுமையுடன் செயல்பட்டால் பிரச்சினைகளைத் தவிர்க்கலாம். வேலை செய்யும் இடத்தில் சம்பளம் அதிகரித்து பதவி உயர்வு கிடைக்கும்.

தனுசு

குருவின் இந்தப் பெயர்ச்சி தனுசு ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கும். திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். பதவி உயர்வு கிடைக்கலாம். புதிய வாகனம் அல்லது சொத்தை வாங்கலாம். வேலையில் எடுக்கும் முயற்சிகள் உங்களுக்கு வெற்றியைத் தரும். நிதி நிலைமை வலுவடையும். கடின உழைப்புக்கு பலன் கிடைக்கும். வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். புதிய செயல்களுக்கு அஸ்திவாரம் போடுவீர்கள். உறவினர் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். குடும்பத்தை விட்டுப் பிரிந்திருந்தவர்கள் மீண்டும் வந்து இணைவார்கள்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு குருவின் இந்தப் பெயர்ச்சியால் பல நன்மைகள் உண்டாகும். இந்த பெயர்ச்சி மீன ராசிக்காரர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆரோக்கியம் முன்பை விட சிறப்பாக இருக்கும். உங்களின் தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் அதிகரிக்கும். தொழிலில் சிக்கல்களை சமாளிப்பீர்கள். இந்த நேரத்தில் உங்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும். சமூகத்தில் புதிய மரியாதை மற்றும் அங்கீகாரத்தைப் பெறுவீர்கள். தனிப்பட்ட வாழ்க்கையும் இனிமையாக இருக்கும். பயணம் செல்ல நேரலாம். மனதிற்கு நெகிழ்ச்சியான சம்பவங்கள் நடக்கும்.

இதனையும் படியுங்கள் : சுபகாரிய தடையை நீக்கும் குரு வழிபாடு!!

Recipes AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை