சுபகாரிய தடையை நீக்கும் குரு வழிபாடு!!

- Advertisement -

ஒருவருடைய வாழ்க்கையில் நிகழக்கூடிய அனைத்து சுபகாரியங்களுமே நல்ல முறையில் நடக்க வேண்டும் என்று நினைப்போம். குழந்தை பிறப்பதில் இருந்து குழந்தைக்கு பெயர் வைப்பது, மொட்டை அடிப்பது, காது குத்துவது, குழந்தையை பள்ளிக்கு அனுப்புவது, குழந்தைகள் சிறப்பாக விளங்குவது என அனைத்தும் சுப காரியங்கள் தான் இவை அனைத்துமே நல்லபடியாக நடக்க வேண்டும் என்று மனதார அனைத்து தெய்வங்களையும் வேண்டிக் கொண்டு இருப்போம். இந்த அனைத்து சுப காரியங்களும் நல்ல முறையில் நடந்தேறுவதற்கு காரிய தடை இன்றி நடப்பதற்கு ஒரு எளிமையான வழிபாட்டு முறையை பற்றி இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கலாம்.

-விளம்பரம்-

குரு பகவான்

எந்த ஒரு கிரகத்திற்கும் இல்லாத அற்புதமான சக்தி குரு பகவானுக்கு உள்ளது. அனைத்து விதமான சுப காரியங்களையும் நடத்துவதற்கு குரு பகவான் உதவி செய்வார் குரு பார்க்க கோடி நன்மை என்று கூறுவார்கள். குரு பகவானுடைய பார்வை பட்ட இடம் நிச்சயமாக நல்ல இடமாக இருக்கும் குரு பகவானின் அருளை ஒருவர் பரிபூரணமாக பெற்றுவிட்டால் அவர்களுடைய வாழ்க்கையில் அனைத்து சுப காரியங்களும் தடைகள் இன்றி நடத்தும் கண்டிப்பாக குரு பகவானே வழிபாடு செய்தால் அவர்களுடைய வாழ்க்கையில் வெற்றி கிட்டும். குரு பகவானுக்கு உரிய வியாழக்கிழமை என்று நாம் குரு ஹோரையில் ஒரு வழிபாட்டை மேற்கொள்வதன் மூலம் சுப காரிய தடைகள் அனைத்தும் நீங்கும்.

- Advertisement -

சுபகாரிய தடைகள் நீங்க வழிபாடு

இந்த வழிபாட்டை செய்வதற்கு மஞ்சள் நிற பேப்பர் மஞ்சள் நிற துணி கருப்பு கொண்டை கடலை தேவைப்படும். மஞ்சள் நிற பூக்களை குரு பகவானுக்கு சூட்டி விட்டு பூஜை அறையில் விளக்கு ஏற்றிவிட்டு மஞ்சள் நிற பேப்பரில் சுபகாரிய தடைகள் என்னென்ன இருக்கிறதோ அனைத்தையும் வரிசையாக எழுத வேண்டும். ஒரு மஞ்சள் நிற துணியில் இந்த பேப்பரை வைத்து விட்டு அதற்கு மேல் 9 கருப்பு கொண்டை கடலையை வைத்து மூட்டையாக கட்டிக் கொள்ள வேண்டும். பிறகு அருகிலுள்ள நவகிரக கோவிலுக்கு சென்று நவகிரகங்களை வழிபட்டு விட்டு கட்டிய மூட்டையை வைத்து நவகிரகங்களை ஒன்பது முறை வலம் வந்து பிறகு அந்த முடிச்சை வீட்டுக்கு கொண்டு வந்து வீட்டின் பூஜை அறையில் வைக்க வேண்டும். அடுத்த வாரம் வியாழக்கிழமை கருப்பு கொண்டை கடலையை எடுத்து பறவைகளுக்கு தானமாக போட வேண்டும். தொடர்ச்சியாக ஒன்பது வாரங்கள் இந்த வழிபாட்டை செய்தால் குரு பகவானால் தடைபட்டு நின்ற சுப காரியங்கள் அனைத்தும் நடைபெறும்.

இதனையும் படியுங்கள் : குரு பகவானை வசியப்படுத்த எளிய பரிகாரங்கள்!!