குரு பெயர்ச்சியால் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய சில ராசிகள்

மேஷ ராசியில் பயணம் செய்து கொண்டிருந்த குரு பகவான் இப்பொழுது மே 1ம் தேதி ரிஷப ராசிக்குள் நுழைந்துள்ளார். ஜோதிட ரீதியாக சில கிரகங்களின் நகர்வுகள் அனைத்து ராசிக்காரர்களுக்கும் தாக்கத்தை ஏற்படுத்த கூடியதாக பார்க்கப்படுகிறது. அதிலும் ராகு கேது சனி மற்றும் குரு பகவானின் மாற்றங்கள் மிகவ

By Prem Kumar · 4/5/2024

மேஷ ராசியில் பயணம் செய்து கொண்டிருந்த குரு பகவான் இப்பொழுது மே 1ம் தேதி ரிஷப ராசிக்குள் நுழைந்துள்ளார். ஜோதிட ரீதியாக சில கிரகங்களின் நகர்வுகள் அனைத்து ராசிக்காரர்களுக்கும் தாக்கத்தை ஏற்படுத்த கூடியதாக பார்க்கப்படுகிறது. அதிலும் ராகு கேது சனி மற்றும் குரு பகவானின் மாற்றங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் அதனால் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கூட கிடைக்கும். அந்த வகையில் குரு பெயர்ச்சியால் ஒரு சிலர் மிகவும் உயர்ந்த நிலைக்குக் கூட சென்று விடுவார்கள் அந்த அளவிற்கு சில சமயங்களில் நடக்கும். அந்த வகையில் குரு பெயர்ச்சியால் ஒரு சில ராசிகளுக்கு என்ன பலன்கள் கிடைக்கும். எந்த விஷயங்களில் எல்லாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

மேஷ ராசி

நீங்கள் சந்திக்கும் பல தோல்விகளை மறைப்பதற்காக மற்றவர்களிடம் கோபமாக நடந்து கொண்டது, உங்களிடம் யார் பேசினாலும் அவர்களிடம் முரட்டுத்தனமாக நடந்து கொண்டது போன்ற விஷயங்களை கைவிட்டு மிகவும் பொறுமையாகவும் அன்பாகவும் மற்றவர்களிடம் நடந்து கொள்ள வேண்டும். போக்குவரத்து விஷயங்களில் சற்று கவனமாகவே இருக்க வேண்டும். இளைஞர்கள் காதல் வாழ்க்கையில் நுழையும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் திருமணம் செய்வதற்கு முன்பாக ஒரு முறைக்கு பலமுறை யோசித்து முடிவு எடுக்க வேண்டும். குழந்தைகள் படிப்பு விஷயத்தில் சற்று அதிகமான கவனம் கொண்டு செயல்பட வேண்டும்.

தனுசு ராசி

தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சியால் வீடு கட்டும் வாய்ப்பு அமையும் ஆனால் நிலத்தகராது போன்ற பிரச்சனைகளும் ஏற்படும். கோபத்தை குறைத்து யாரிடமும் வீண் வாக்குவாதம் சண்டைகள் போடாமல் இருப்பது மிகவும் நல்லது. யாரிடமும் தேவையில்லாத வாக்குறுதிகளை கொடுத்து யார் மனதையும் புண்படுத்த வேண்டாம். மாணவர்களுக்கு படிப்பு நாட்டமின்மை ஏற்படும் எனவே கொஞ்சம் கவனமாக படிக்க வேண்டும்.பணம் நிறைய இருந்தாலும் கூட தூக்கம் இல்லாத நிலையும் நிம்மதி இல்லாத நிலையும் உங்களுக்கு ஏற்படும். அதனால் மன அழுத்தமும் மன நலனில் பிரச்சினையும் ஏற்படலாம்.

கும்ப ராசி

கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சியின் காரணமாக தந்தையுடன் பல பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அண்ணன் தம்பி உறவிலும் கூட நிறைய சிக்கல்கள் ஏற்படும் எனவே கொஞ்சம் கவனமாகவே இருக்க வேண்டும். அரசியலில் இருப்பவர்களுக்கு பதவி காலியாகும் நிலையும் ஏற்படலாம் அதனால் யாரிடம் பேசினாலும் கொஞ்சம் பார்த்து பேச வேண்டும். பொருளாதார நிலையில் சிக்கல் ,குழந்தைகளுடைய வாழ்க்கையில் சிக்கல், சொந்த வீடு பிரச்சனை கடன் பிரச்சினை என அனைத்தும் நீங்கும். ஆனால் கொஞ்சம் ஏமாற்றங்களும் இடையூறுகளும் வந்து செல்லும். உடல் ஆரோக்கியத்திலும் வேலை பார்க்கும் இடத்திலும் சில பிரச்சனைகள் வந்து செல்லும்.

இதனையும் படியுங்கள் : குருபகவான் மற்றும் சூரிய பகவானின் சேர்க்கை நடைபெறும் மே மாதத்திற்கான ராசி பலன்கள்

Recipes AMP · Quick view
View full