குருபகவான் மற்றும் சூரிய பகவானின் சேர்க்கை நடைபெறும் மே மாதத்திற்கான ராசி பலன்கள்

- Advertisement -

மே மாதத்தில் குரு பெயர்ச்சி பலன்கள் ஏற்கனவே பல ராசிகளுக்கு தாக்கம் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது அந்த வகையில் மே மாதத்தில் குரு பெயர்ச்சியை தவிர, மே பத்தாம் தேதி புதன் மேஷ ராசியிலும், மே 14 ம் தேதி சூரியன் ரிஷப ராசியிலும், மே 19 ம் தேதி சுக்கிரன் ரிஷப ராசியிலும் நுழைய உள்ளார்கள். இந்த சூழ்நிலையில் மே 14ஆம் தேதி ரிஷப ராசியில் குருபகவான் மற்றும் சூரிய பகவானின் சேர்க்கை நடைபெறும். மே 19ஆம் தேதி குரு பகவான் மற்றும் சுக்கிர பகவானின் சேர்க்கை நடைபெறுவதால் கஜலட்சுமி யோகம் உருவாகும். அந்த வகையில் இருக்கின்ற 12 ராசிகளும் தாக்கத்தை பெறுவார்கள். எந்தெந்த ராசிகள் என்னென்ன அதிர்ஷ்டத்தையும் எந்தெந்த ராசிகள் என்னென்ன கஷ்டத்தையும் பெற போகிறார்கள் என்பதை பற்றிய மே மாத ராசி பலன்களை இந்த பதிவில் பார்க்கலாம்

-விளம்பரம்-

மேஷ ராசி

மற்றவர்களுடன் சண்டைகளை தவிர்த்து கொள்வது நல்லது. நீங்கள் வேலை பார்க்கும் இடத்தில் அந்த வேலைகளை முடிப்பதற்கு மிகவும் சிரமமாக இருக்கும். எனவே வேலையில் உங்களின் முன்னேற்றம் மிகவும் குறைவாகவே இருக்கும். குடும்பத்தில் சில பிரச்சினைகளால் உங்களுடைய தந்தையுடன் சில வாக்குவாதங்கள் ஏற்படலாம் ஆனால் உங்களுடைய காதல் வாழ்க்கை மிகவும் இனிமையாகவே அமையும்

- Advertisement -

ரிஷப ராசி

உங்களுடைய முயற்சிக்கு வெற்றி கிடைக்கும். வேலை சம்பந்தமான விஷயங்களில் வெற்றியை மட்டுமே அடைவீர்கள். ஒரு சில ரிஷப ராசிக்காரர்களுக்கு வேலை மாற்றத்தால் இடமாற்றம் போன்ற சூழல் ஏற்படும். தம்பதிகளுக்கு இடையே கிடைக்கும் உதவியின் மூலம் மகிழ்ச்சியை பெறலாம். உடல்நிலை சம்பந்தமான விஷயங்களில் மருத்துவ செலவுகள் ஏற்படலாம்.

மிதுன ராசி

இந்த நேரம் உங்களுக்கு மிகவும் நல்ல நேரமாக அமையும். வேலையில் முன்னேறுவதற்கு இது ஒரு நல்ல காலமாக அமையும். நீங்கள் என்னதான் உயர் பதவிகளை அடைந்தாலும் உங்களுடன் வேலை பார்ப்பவர்களுடன் சில சிக்கல்கள் ஏற்பட்டு அதன் மூலம் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. பொருளாதார நிலையில் நிறைய மாற்றங்களும் ஏற்படலாம் எனவே கொஞ்சம் கவனமாக இருப்பது நல்லது.

கடக ராசி

நீங்கள் வேலை பார்க்கும் இடத்தில் பல்வேறு ஏற்றத்தாழ்வுகளை நீங்கள் சந்திக்க நேரிடும். நீங்கள் வேலை பார்க்கும் இடத்தில் உங்களுக்கு மன அழுத்தம் ஏற்படும் அதனால் வேலை பார்க்கும் இடத்தில் உங்களுக்கு இந்த மன அழுத்தம் முன்னேற்றத்திற்கு ஒரு தடையாக மாறும். உங்களுடைய துணையின் மேல் உங்களுக்கு சில சமயங்களில் தவறான புரிதலும் ஏற்படலாம். சில காலங்களுக்கு முன்பாக நீங்கள் செய்த முதலீடு உங்களுக்கு இப்பொழுது கை கொடுக்கும். குடும்பத்தில் சில பிரச்சனைகளின் மூலம் மன அழுத்தமும் ஏற்படும்.

-விளம்பரம்-

சிம்ம ராசி

குடும்ப சொத்து தொடர்பான வழக்கு ஏதேனும் இருந்தால் அவை இந்த காலகட்டத்தில் உங்களுக்கு மிகவும் சாதகமானதாக அமையும். ஏதேனும் ஒரு தொழிலில் முதலீடு செய்வதாக இருந்தால் மிகவும் கவனம் தேவை யோசித்து எந்த ஒரு தொழிலிலும் முதலீடு செய்ய வேண்டும். உங்களின் புத்திசாலித்தனத்தை உபயோகித்து எந்த ஒரு காரியத்தையும் செய்ய வேண்டும். பயணத்தில் கவனம் தேவை ஏனென்றால் சிறிய பெரிய காயம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். உங்களுடைய ஆலோசனைகளை மதித்து உங்களுடைய பணியிடத்தில் உள்ள மேல் அதிகாரிகள் உங்களை பாராட்டுவார்கள்.

கன்னி ராசி

உங்கள் வேலையில் பல சிரமங்கள் ஏற்படலாம் அப்படி ஏற்படும்பொழுது அதில் மிகவும் கவனத்தோடு கையாள வேண்டும். தொழிலதிபர்கள் வாழ்க்கையில் பல ஏற்ற இறக்கங்களை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். உங்கள் காதல் வாழ்க்கையில் மிகவும் உறுதியாக இருக்க வேண்டும் இல்லை எனில் அந்த வாழ்க்கையில் பல பிரச்சினைகள் ஏற்படும். உங்கள் தொழிலில் நீங்கள் விரிவாக்கங்களை ஏற்படுத்த நினைத்திருந்தால் கொஞ்சம் பொறுமையாக செய்ய வேண்டும். குடும்பத்திலும் பல பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது எனவே நீங்கள் அனைத்து விஷயங்களையும் பொறுமையாக கையாள வேண்டும்.

துலாம் ராசி

உங்கள் அலுவலகப் பணியில் முக்கியத்துவம் கொடுத்து வேலையில் மிகவும் கடினமாக உழைத்தால் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். அதன் மூலம் புதிய வேலைவாய்ப்பு அல்லது சொந்த தொழில் தொடங்கும் வாய்ப்புகளும் அமையும். உங்கள் காதல் உறவை வலுப்படுத்த அவர்களுடன் நிறைய நேரம் செலவிடுங்கள். உடற்பயிற்சி செய்வது உங்களுடைய உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

-விளம்பரம்-

விருச்சிக ராசி

நீங்கள் பார்க்கின்ற வேலையில் முன்னேற்றம் அமையும். நீங்கள் செய்யும் வியாபாரத்தில் அதிக கவனம் செலுத்தி முழு ஈடுபாட்டுடன் இருந்தால் அதில் வெற்றி கிடைக்கும். நீண்ட காலத்திற்கு முன்பாக நீங்கள் செய்த முதலீடு தற்போது உங்களுக்கு கை கொடுத்து அந்த முடிவை சரியானதாக மாற்றும். உடல்நல குறைவால் காய்ச்சல் மற்றும் தலைவலி போன்ற பிரச்சனைகள் ஏற்படும். தேவையற்ற விஷயங்களில் பணத்தையும் நேரத்தையும் செலவழிப்பதை நிறுத்தி விட்டு தேவையான விஷயங்களில் நேரத்தை செலவிடுங்கள். உங்களுடைய வாழ்க்கையில் நீங்கள் தனிமையை உணர்வீர்கள்.

தனுசு ராசி

உங்களுடைய தன்னம்பிக்கை அதிகரித்து அதன் மூலம் நீங்கள் பார்க்கின்ற வேலைகளில் இருக்கக்கூடிய சில தேவையற்ற சிந்தனைகள் மாறும். வேலையில் மாற்றத்தை தவிர்க்க வேண்டும் முடிந்த அளவிற்கு அதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உங்களுடைய காதல் உறவுகளின் மேல் நம்பிக்கையின்மை காரணமாக அந்த உறவில் சில விரிசல்கள் ஏற்படும். புதிய முடிவுகளை எடுப்பதை தவிர்க்க வேண்டும் அது உங்களுக்கு நன்மையை அளிக்காது.

மகர ராசி

நீங்கள் வேலை பார்க்கும் பணியிடத்தில் எதிரிகளால் உங்களுடைய வேலையில் சில சிக்கல்கள் மற்றும் தடைகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் சில ஏற்ற தாழ்வுகளும் இருக்கும். முன்னோர்களின் சொத்துக்களால் உங்களுக்கு ஆதாயம் கிடைக்கும். எந்த ஒரு முடிவையும் நீங்கள் எடுப்பதற்கு முன்பாக உங்களுடைய குடும்பத்துடன் ஆலோசனை செய்ய வேண்டும். உங்கள் துணையுடன் எதிர்காலத்தை நோக்கிய பயணத்தை திட்டமிடுவதற்கான ஒரு நல்ல நேரமாக இந்த நேரம் உள்ளது.

கும்ப ராசி

வேலை பார்க்கும் இடத்தில் இருந்த அனைத்து சிக்கல்களும் நீங்கி நீங்கள் வேலையை மாற்றுவதற்கான சூழலும் ஏற்படும். புதிய வணிக வாய்ப்புகளால் பொருளாதாரத்தில் மாற்றம் ஏற்படும். உங்களுடைய மனைவியுடன் சில கருத்து வேறுபாடுகள் ஏற்படும் போது அதனை பொறுமையாக பேசி தீர்ப்பது நல்லது. உங்கள் உடல்நலத்தில் சற்று கவனம் தேவை. குடும்பத்தில் முன்பு இருந்த அனைத்து பிரச்சனைகளும் நீங்கி வாழ்க்கையில் மகிழ்ச்சி கிடைக்கும்.

மீன ராசி

நீங்கள் வேலை பார்க்கும் இடத்தில் உங்களுடைய திறமை மேம்பட்டு அதன் மூலம் நீங்கள் உற்சாகமாக வேலை செய்வீர்கள். தனியார் துறைகள் வேலை பார்ப்பவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும் அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டால் உங்கள் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றங்களும் ஏற்படும். பயணத்தின் போது கவனம் தேவை. சின்ன சின்ன காயங்கள் ஏற்படலாம். நீண்ட காலத்திற்கு முன்பாக செய்த முதலீடு தற்போது நல்ல முடிவாக அமையும்.