வார ராசிபலன் 19 ஜனவரி 2025 முதல் 25 ஜனவரி 2025 வரை!!
மேஷம் இந்த வாரம் உங்களுக்கு குடும்பத்தில் அமைதியும் சந்தோஷமும் நிலவும். ஒரு சிலருக்கு மட்டும் சிறுசிறு ஆரோக்கியக் குறைபாடுகள் ஏற்பட்டு, உடனுக்குடன் சரியாகிவிடும் என்பதால் கவலைப்படத் தேவையில்லை. ஒருசிலர் புதிய தொழில் தொடங்குவீர். போட்டியாளர் உங்களை விட்டு விலகுவர். இழுபறியாக இருந்
மேஷம்
இந்த வாரம் உங்களுக்கு குடும்பத்தில் அமைதியும் சந்தோஷமும் நிலவும். ஒரு சிலருக்கு மட்டும் சிறுசிறு ஆரோக்கியக் குறைபாடுகள் ஏற்பட்டு, உடனுக்குடன் சரியாகிவிடும் என்பதால் கவலைப்படத் தேவையில்லை. ஒருசிலர் புதிய தொழில் தொடங்குவீர். போட்டியாளர் உங்களை விட்டு விலகுவர். இழுபறியாக இருந்த விவகாரம் முடிவிற்கு வரும். இந்த வாரம் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். எடுக்கும் வேலை லாபத்தில் முடியும். வேலைக்காக முயற்சி செய்து வந்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும்.
ரிஷபம்
இந்த வாரம் பணவரவு நல்லபடி இருக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வீட்டில் சுபநிகழ்ச்சி நடப்பதற்கு வாய்ப்பு உள்ளது. கடந்த வாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். பெரிய மனிதர்களின் சந்திப்பு நிகழும். அவர்கள் வழியில் லாபம் ஏற்படும். எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்த நண்பர்கள் மறுபடியும் நட்பு பாராட்டுவார்கள். உங்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வார். இழுபறியாக இருந்த வேலைகளை முடித்து வைப்பார். எதிர்பார்த்த பணம் வரும்.
மிதுனம்
இந்த வாரம் பணவரவு சுமாராகத்தான் இருக்கும். செலவுகளும் அதிகரிக்கக்கூடும். பண விஷயத்தில் எச்சரிக்கையாக இருங்கள். குடும்பத்தில் தேவையற்ற பிரச்னைகள் ஏற்படக்கூடும். பொறுமையுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. இந்த வாரம் கையில் எடுத்த வேலையை முடித்து லாபம் காண்பீர். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். ஒரு சிலருக்கு கண்களில் பிரச்னை ஏற்படக்கூடும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை நீங்கும். அரசு வேலைகளில் நிதானம் தேவை. தற்காலிக பணியிடை நீக்கம் ஏற்படலாம். உங்கள் செயல்களில் இருந்த தடை விலகும்.
கடகம்
இந்த வாரம் உங்களுக்கு பணவரவு எதிர்பார்க்கும் அளவுக்கு இருக்காது. தேவைகளுக்காக கடன் வாங்கவேண்டிய சூழ்நிலையும் உண்டாகும். பொருள்களும், பணமும் களவு போகக்கூடும் என்பதால், வீட்டிலும் வெளியிலும் கவனமாக இருக்கவும். நினைத்த வேலைகளை நினைத்தபடி நடத்தி முடிப்பீர். நேற்றைய பிரச்னை முடிவிற்கு வரும். அரசு பணியில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த மாற்றத்தை உண்டாக்குவார். வியாபாரிகள் தங்கள் தொழிலை விரிவு செய்வீர்கள். வெளியூர் பயணங்களில் மூலமாக கிடைக்க உதவிகள் தாமதமாக வந்து சேரும்.
சிம்மம்
இந்த வாரம் பணவரவு திருப்தி தருவதாக இருக்கும். எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். ஒரு சிலருக்கு சிறிய அளவில் உடல் நலன் பாதிக்கப்படக்கூடும். திருமண முயற்சிகள் சாதகமாக முடியும். பண விவகாரங்களில் எச்சரிக்கை அவசியம். புதிய முதலீடுகளில் யோசித்து செயல்படுவதுடன் நண்பர்களையும், வாழ்க்கைத் துணையையும் அனுசரித்துச் செல்வது நல்லது. இந்த வாரம் தவறான வழிகளில் செல்லாமல் இருப்பது நல்லது. எதிர்பாலினரால் சிலருக்கு நெருக்கடி உண்டாகும். பெரிய மனிதர்களின் ஆதரவால் தொழிலை மேம்படுத்துவீர்கள்.
கன்னி
இந்த வாரம் பணவரவு ஓரளவுக்கே இருக்கும். தேவையற்ற செலவுகள் எதுவும் ஏற்படாது. குடும்பத்தில் ஓரளவு நிம்மதியான சூழ்நிலை உண்டாகும். கணவன் – மனைவி இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். இந்த வாரம் குடும்பத்தில் சிறு குழப்பம் தோன்றும். நிதானமுடன் செயல்படுவது நல்லது. வேலை உயர்வு கிடைத்து வீடும் மாறி செல்வீர்கள். தனியார் துறை ஊழியர்கள் உழைப்புக்கேற்ற வருமானம் பெற்று உற்சாகமடைவார்கள். வழக்கு விவகாரம் சாதகமாகும். செல்வாக்கு உயரும். வாரத்தின் முற்பகுதியில் ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். மேல் அதிகாரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் அகலும்.
துலாம்
இந்த வாரம் வருமானம் திருப்தி தருவதாக இருக்கும். அதேநேரம் செலவுகளும் சற்று அதிகரிக்கும். இதுவரை தடைபட்டிருந்த வேலை நடக்கும். வரவேண்டிய பணம் வரும். குடும்ப நெருக்கடி நீங்கும். வாரத்தின் பிற்பகுதியில் நினைத்ததை நடத்தி முடிப்பீர். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். கணவன் – மனைவி இடையில் சிறு அளவில் கருத்துவேறுபாடுகள் தோன்றக்கூடும் என்பதால் பொறுமை அவசியம். சிறு வியாபாரிகள் கணிசமான லாபம் பெறுவார்கள். பிள்ளைகளால் பெற்றோருக்கு பெருமை கிடைக்கும். தொழில் வியாபாரம் சிறப்பாக நடக்கும்.
விருச்சிகம்
இந்த வாரம் உங்களுக்கு பொருளாதார நிலை சுமாராகத்தான் இருக்கும். தேவையற்ற செலவுகள் எதுவும் இருக்காது. கணவன் – மனைவி இடையில் சிறு அளவில் கருத்து வேறுபாடு ஏற்படக்கூடும். பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். சுய தொழில் புரிபவர்களுக்கு பணியாளர் ஒத்துழைப்பு அதிகரிக்கும். இந்த வாரம் வியாபாரத்தில் இருந்த தடை விலகும். வருமானம் உயரும். வெளிநாட்டு முயற்சி சாதகமாகும். திட்டமிட்டு செயல்படும் காரியங்களில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். பழைய வீட்டை புதுப்பிப்பீர்கள்.
தனுசு
இந்த வாரம் உங்களுக்கு பணவரவு திருப்தியாக இருக்கும். பணம் மற்றும் பொருள்கள் களவு போகக்கூடும் என்பதால் எச்சரிக்கையாக இருக்கவும். மற்றவர்களிடம் பேசும்போது பொறுமை மிக அவசியம். புதிய முயற்சிகள் எதையும் இந்த வாரம் தொடங்க வேண்டாம். வெளிநாட்டு வேலைக்காக முயற்சிப்பவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். ஒரு சிலருக்கு வாரத்தின் முற்பகுதியில் வெளியூர் பயணம் ஏற்படும். அதனால் லாபம் உண்டாகும். நண்பர்களால் சில சிக்கல்களை சந்திக்க வேண்டிய கட்டாயம் உருவாகும். போட்டி பந்தயங்களில் உங்களுக்கு வெற்றி கிடைக்கும்.
மகரம்
இந்த வாரம் உங்களுக்கு பணவரவு சுமாராகத்தான் இருக்கும். திடீர் செலவுகளும் ஏற்படக்கூடும். வீட்டில் தேவையற்ற பிரச்னைகளால் மன அமைதி குறையக்கூடும். தாயாரின் உடல் ஆரோக்கியம் சீராகும். பூர்வீக சொத்தில் இருந்த வில்லங்கத்தை தீர்ப்பதற்காக காவல் நிலையத்துக்கு செல்வீர்கள். கணவன் – மனைவி இடையில் அந்நியோன்யம் உண்டாகும். புதிய முயற்சிகளில் ஒருமுறைக்கு பலமுறை யோசிப்பது நல்லது. எந்த நிலை வந்தாலும் அதை சமாளிக்கும் நிலை உண்டாகும். பொன் பொருள் சேரும். வெளிநாட்டிலிருந்து நல்ல செய்தி வந்து சேரும்.
கும்பம்
இந்த வாரம் உங்களுக்கு பணவரவு திருப்தி தருவதாக இருக்கும். தேவையற்ற செலவுகள் எதுவும் ஏற்படாது. தாயாரின் உடல்நலனில் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. சகோதர வகையில் அன்பும் ஆதரவும் உண்டாகும். உங்கள் வேலைகளில் நிதானம் தேவை. தொழிலில் சில பிரச்னைகள் தோன்ற வாய்ப்பிருப்பதால் கணக்கு வழக்குகளில் சரியாக இருப்பது நல்லது. புதிய முதலீடுகளில் கவனம் தேவை. நண்பர்களிடமும் வாழ்க்கைத் துணையிடமும் அனுசரித்துச் செல்வதால் சங்கடம் நீங்கும். பழைய கடன்களை அடைத்து நிம்மதி பெருமூச்சு விடுவீர்கள்.
மீனம்
இந்த வாரம் உங்களுக்கு பணவரவு திருப்திகரமாக இருக்கும். செலவுகள் ஏற்பட்டாலும் சமாளித்துவிட முடியும். சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். திருமண முயற்சிகள் நல்லபடி முடியும். நீங்கள் நினைத்ததை சாதிக்கும் வாரம் இது. குடும்ப நலனுக்காக இரவு பகலாக உழைப்பீர்கள். வியாபாரிகளுக்கு வரவு அதிகரிக்கும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த மாற்றம் கிடைக்கும். உழைப்பாளர் நிலை உயரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். உங்கள் நிலை உயரும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். கணவன் – மனைவி இடையில் சிறு சிறு பிரச்னைகள் ஏற்படக்கூடும்.
இதனையும் படியுங்கள் : 2025ல் சனி குரு ராகு கேது பெயர்ச்சிகளால் ராஜயோகத்தை பெறப்போகும் ராசிகள்!!