சுட சுட சாதகத்துடன் சாப்பிட ருசியான சீரக புளிக்குழம்பு இப்படி ட்ரை பண்ணி பாருங்க! இதன் ருசியே தனி ருசி தான்!
சீரகம் உடல் சூட்டைக் குறைக்கும் மற்றும் செரிமானத்தை மேம்படுத்தும். இத்தகைய சீரகத்தை அடிக்கடி சமையலில் சேர்ப்பதைத் தவிர, சீரகத்தைக் கொண்டு குழம்பு செய்து சாப்பிடுவது இன்னும் நல்லது. உங்களுக்கு மதியம் என்ன குழம்பு செய்வதென்று தெரியவில்லையா? காய்கறிகள் எதுவும் இல்லையா? அப்படியானால்
சீரகம் உடல் சூட்டைக் குறைக்கும் மற்றும் செரிமானத்தை மேம்படுத்தும். இத்தகைய சீரகத்தை அடிக்கடி சமையலில் சேர்ப்பதைத் தவிர, சீரகத்தைக் கொண்டு குழம்பு செய்து சாப்பிடுவது இன்னும் நல்லது. உங்களுக்கு மதியம் என்ன குழம்பு செய்வதென்று தெரியவில்லையா? காய்கறிகள் எதுவும் இல்லையா? அப்படியானால் வீட்டில் சீரகம் இருந்தால், அதைக் கொண்டு ஒரு சுவையான குழம்பு செய்யுங்கள். சீரக குழம்பு ஒரு ஈஸியான வகையில் செய்து முடிக்கக்கூடிய ஒரு சூப்பரான ரெசிபி. அதிலும் சீரகம் மிகவும் பிடிக்கும் என்பவர்கள், இந்த ரெசிபியை வீட்டில் செய்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும். இந்த குழம்புக்கு தக்காளி தேவையில்லை. இது சாதத்துடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். அதோடு ஆரோக்கியமானதும் கூட.
உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு இந்த சீரக குழம்பு செய்து கொடுத்தால் உங்கள் வீட்டில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் அற்புதமாக இருக்கும். சூடான சாதத்தில் இந்த சீரகம் சேர்த்து செய்த புளிக்குழம்பை ஊற்றி சாப்பிட்டால் சூப்பராக இருக்கும். அடுத்தமுறை உங்களை இது போல் செய்து தர சொல்லி கேட்பார்கள். அஜூரண பிரச்சனை இருப்பவர்கள், பசி எடுக்காதவர்களுக்கு இந்த சீரக குழம்பை செய்து சாப்பிடலாம். குழந்தை பிறந்தவர்களுக்கு மதியம் சூடான சாதத்தில் நல்லெண்ணெய் சேர்த்து இந்த சீரக புளி குழம்பு பிசைந்து குடுத்தால் நல்லது. இந்த குழப்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : சுட சுட ருசியான மிளகு சீரக சாதம் ஒரு முறை இப்படி செய்து கொடுங்க! ஒரு பிடி சாதம் கூட மிச்சம் வைக்காம சாப்பிடுவார்கள்!