வார ராசிபலன் 22 ஜூன் 2025 முதல் 28 ஜூன் 2025 வரை!!
மேஷம் இந்த வாரம் புது நண்பர்கள் மூலம் நன்மைகள் ஏற்படும்.சுக்கிரன், சந்திரன் ஆகிய கிரகங்கள் நல்ல தொடர்புகளை ஏற்படுத்துவார்கள். தனியார் உத்தியோகஸ்தர்கள் பணி உயர்வு பெறுவர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் உற்சாகமாக சுற்றுலா சென்று மகிழ்வர். மனைவி வழியில் ஆதாயம் உண்டு. அரசாங்க உதவிகள் உண்ட
மேஷம்
இந்த வாரம் புது நண்பர்கள் மூலம் நன்மைகள் ஏற்படும்.சுக்கிரன், சந்திரன் ஆகிய கிரகங்கள் நல்ல தொடர்புகளை ஏற்படுத்துவார்கள். தனியார் உத்தியோகஸ்தர்கள் பணி உயர்வு பெறுவர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் உற்சாகமாக சுற்றுலா சென்று மகிழ்வர். மனைவி வழியில் ஆதாயம் உண்டு. அரசாங்க உதவிகள் உண்டு. எதிர்பார்ப்புகள் படிப்படியாக நிறைவேறும். முயற்சிகள் வெற்றி பெறும். தடைப்பட்ட பணிகள் சற்று வேகம் எடுக்கும். தொழில் வளம் லாபகரமாக இருக்கும். பிள்ளைகள் விஷயத்தில் கண்காணிப்பும் கவனமும் தேவை. அவ்வப் பொழுது மனதில் எதிர்மறைச் சிந்தனைகள் எட்டிப்பார்க்கும். எவ்வளவு பணம் வந்தாலும் ஏதோ ஒரு விதத்தில் செலவாகிக் கொண்டே இருக்கும். எனவே செலவில் கவனம் தேவை.
ரிஷபம்
இந்த வாரம் சமூக முக்கியத்துவம் பெற்ற மனிதர்களாக உலா வருவார்கள். தன ஸ்தானத்தில் உள்ள சுப கிரகங்கள் பொருளாதாரம் முன்னேற்றத்தை தருவார்கள். அரசு உத்தியோகஸ்தர்கள் பணிகளில் தாங்களே களத்தில் இறங்கி செயல்பட வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் பாடங்களிலும் கவனம் செலுத்த வேண்டும். பொருளாதாரத்தில் பிரச்னை இருக்காது. சேமிப்புக்கும் வழி உண்டு. சிலருக்கு இடமாற்றமும், வீடு மாற்றமும் அமையும். பிள்ளைகளுக்கு வேலை கிடைக்கும் அமைப்புண்டு. தாய்வழிச் சொந்தங்கள் கை கொடுக்கும். அரசு வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு வெற்றி பெற வாய்ப்பு அதிகம். அடிக்கடி மனக் கவலையும், குழப்பமும் ஏற்படும். கணவன் மனைவி உறவுகளில் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை வேண்டும்.
மிதுனம்
இந்த வாரம் எதிர்பார்த்த தன வரவை பெறுவர். லாபஸ்தான சுக்கிரன், சந்திரன் ஆகியோர் மன விருப்பத்தை பூர்த்தி செய்வார்கள். தனியார் உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு புதிய நண்பர்களால் நன்மை ஏற்படும். வருகின்ற பிரச்னைகளும் சிரமங்களும் பெருமளவு குறைந்துவிடும். பிரச்னைகளை சமாளிக்கும் ஆற்றல் அதிகரிக்கும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த பதவி கிடைக்கும். திருமண வயதினருக்கு வரன் வரும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மனதில் பரபரப்பு, தேவையில்லாத டென்ஷன் போன்றவற்றைக் கவனமாகக் கையாள வேண்டும். சகோதர உறவு சற்று பாதிக்கும் கவனம் தேவை.
கடகம்
இந்த வாரம் மகிழ்ச்சியான சம்பவங்கள் நடந்தேறும். 10-ல் உள்ள சுக்கிரன், 12-ல் உள்ள சுப கிரகங்கள் வெளிநாட்டு தொடர்புகளை ஏற்படுத்துவார்கள். பள்ளி, பள்ளி கல்லூரி மாணவர்கள் எதிர்காலத்தை உருவாக்கிக் கொள்ளும் வழிகாட்டுதல் கிடைக்க பெறுவர். அரசாங்க உத்தியோகஸ்தர்கள் நிர்வாகத்தின் பாராட்டு பெறுவார்கள். வெளிநாட்டு வேலைவாய்ப்பு, பத்திரிகை துறையில் உள்ளவர்களுக்கு வளர்ச்சி போன்றவை நடக்கும். மேல்படிப்பு, வீடு கட்டுதல் போன்றவை நன்றாக நடைபெறும். கொஞ்சம் நிதானித்துச் செயல்பட்டால் சிக்கல்கள் குறையும். பேச்சில் கவனம் தேவை. சகோதர உறவுகளை அனுசரித்துச் செல்லவும். வண்டி வாகனங்கள் செலவு வைக்கும். தேவையில்லாத விரயச் செலவுகள் ஏற்படும். உடல்நிலையில் சற்று அதிக கவனம் எடுத்துக் கொள்ளவும்.
சிம்மம்
இந்த வாரம் சிம்மம் ராசியினருக்கு சிக்கல்கள் அகன்று மனதில் நம்பிக்கை உருவாகும். லாப ஸ்தான குரு, பாக்ய ஸ்தான சுக்கிரன் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்துவார்கள். குடும்பச் சூழல் நன்றாக இருக்கும். அரசு உத்தியோகஸ்தர்கள் நவீன தொழில்நுட்பங்களை கற்றுக் கொள்வர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் எதிர்கால முன்னேற்றத்திற்கான புதிய விஷயங்களை அறிந்து கொள்வார்கள். பொருளாதார முன்னேற்றம் இருக்கும். தொழில் வளர்ச்சி இருக்கும். எதையும் திட்டமிட்டுச் செய்து வெற்றி காண்பீர்கள். சில விஷயங்களில் நீங்கள் எதிர்பாராத சந்தோஷம் கிடைக்கும். மனக்கசப்புகள் மாறும். தாய் வழி உறவுகள் கருத்து வேறுபாடு நீங்கி மகிழ்ச்சியைத் தருவார்கள், உதவியும் செய்வார்கள். தேவையில்லாத வம்பு வழக்குகள் வந்து சேரும். அவசரப்பட வேண்டாம்.
கன்னி
இந்த வாரம் வீடுகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வர். பத்தாவது இடத்தில் உள்ள ராசி அதிபதி சமூக மதிப்பை உயர்த்துவார். தனியார் உத்தியோகஸ்தர்கள் உயர் அதிகாரிகளின் தொடர்பால் நன்மை பெறுவார்கள். பள்ளி, கல்லூரி மாணவர்கள் விளையாட்டு திறமைகளை வெளிப்படுத்தி கல்வி நிறுவனங்களுக்கு புகழ் சேர்ப்பர். வேலைவாய்ப்பு தேடுபவர்களுக்கு நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும். கடன்கள் ஓரளவு அடைபடும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். பகை குறையும். நட்பு வளரும். கணவன் மனைவி உறவுகள் சிக்கலாகும் என்பதால், வீட்டில் சுமுகமாக நடந்து கொள்ளவும். புதிய தொழில்களை இப்பொழுது செய்ய வேண்டாம். எதிர்காலத்தைக் குறித்து திட்டமிட்டுக் கொள்ளலாம். மிகவும் எச்சரிக்கையோடு தொழில் வணிகத்தில் செயல்படவும்.
துலாம்
இந்த வாரம் விட்டு விலகிய உறவுகள் நாடி வரும். பாக்கிய ஸ்தான குரு, ராசியை பார்க்கும் சுக்கிரன் ஆகியோரால் சுபச் செய்திகள் வரும். அரசு உத்தியோகஸ்தர்கள் அலுவலக சிக்கல்களில் வெற்றி பெறுவார்கள். மாணவர்கள் உறவினர் வீட்டு விஷேசங்களில் கலந்து கொள்வர். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நிகழும். சிலருக்கு நல்ல வசதியான வீடு மாற்றம் நிகழும். தெய்வ தரிசனம், கோயில் பயணங்கள் நடைபெற வாய்ப்புண்டு. தொழில் முன்னேற்றம் ஏற்படும். பூர்வீகச் சொத்துப் பிரச்னைகள் இழுத்தடிக்கும். வழக்குகள் எளிதில் தீராது. மனதில் எப்பொழுதும் ஒரு பயம் இருந்து கொண்டே இருக்கும்.சிலருக்கு சிறிய விபத்துகளும் நிகழக்கூடிய வாய்ப்புண்டு என்பதால் கவனம் தேவை.
விருச்சிகம்
இந்த வாரம் எதிர்காலத்திற்கு தேவையான திட்டங்களை செயல்படுத்துவார்கள். பத்தாம் இடத்தில் உள்ள ராசி அதிபதி அந்தஸ்தையும், கௌரவத்தையும் உயர்த்துவார். அரசாங்க உத்தியோகஸ்தர்கள் பணியிட சிக்கல்கள் விலகி ஆதாயம் பெறுவார்கள். பள்ளி, கல்லூரி மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற தேவையான ஆலோசனைகளை பெறுவர். குடும்ப உறவுகள் பெரிய அளவில் கருத்து வேறுபாடு இல்லாமல் இருக்கும். உற்சாகமாக மறுபடியும் பணியில் ஈடுபடும் மனநிலை வரும். நல்லவர்கள், பெரியவர்கள், குருமார்கள் இவர்கள் யோசனை உங்களை வழிநடத்தும். தாயின் உடல்நிலையில் கவனம் தேவை. வீடு மனை முதலிய விஷயங்களில் மனக்கசப்புகள், சிக்கல்கள் நேரலாம். நீங்கள் எதிர்பார்த்த விஷயங்கள் எளிதாக நடக்காமல் தடங்கல்கள் ஏற்படலாம்.
தனுசு
இந்த வாரம் குடும்ப, சமூக நற்காரியங்களில் ஈடுபட்டு புகழ் பெறுவர். ராசியை பார்க்கும் ராசி அதிபதி மனதில் தைரியத்தை ஏற்படுத்துவார். தனியார் உத்தியோகஸ்தர்கள் நல்ல மாற்றங்களை சந்திப்பார்கள். பள்ளி, கல்லூரி மாணவர்கள் கருத்தரங்குகள், பயிற்சி வகுப்புகளில் பங்கு பெறுவார்கள். தொழிலில் ஏற்படும் சிக்கல்களை எதிர்கொண்டு வெற்றி பெறுவீர்கள். உறவினர்கள் அடிக்கடி வீட்டுக்கு வருகை புரிவார்கள். குடும்பத்தில் சற்று மகிழ்ச்சியான சூழ்நிலைகள் நிலவும். பொருளாதாரப் பிரச்னைகள் கட்டுக்குள் இருக்கும். ஏதோ ஒரு வகையில் வருமானம் பெற்றுவிடும் அமைப்புண்டு. குடும்ப உறவுகளை விட்டுக் கொடுத்துப் பேண வேண்டும். அவசரப்பட்டுப் பேசி நிலைமையைக் கெடுக்கக் கூடாது. சகோதர உறவுகள் சற்று ஏமாற்றத்தைத் தரும்.
மகரம்
இந்த வாரம் நன்மை தரக்கூடிய புதிய தொடர்புகளை பெறுவார்கள். தைரிய ஸ்தான சனி, சுக ஸ்தான சுக்கிரன் மனதில் புதிய நம்பிக்கையை உருவாக்குவார்கள். தனியார் துறை உத்தியோகஸ்தர்கள் உயர் அதிகாரிகள் மூலம் ஆதாயம் பெறுவர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் வழக்கத்தை விட கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். சிரமங்கள் பலவிதத்தில் குறையும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். மகிழ்ச்சியை உணர்வீர்கள். கடன்கள் கொஞ்சம் கொஞ்சமாக அடைபடும். சேமிப்பும் சற்று அதிகரிக்கும். புதிதாக வீடு மனை வாங்கும் அமைப்பும் யோகமும் உண்டு. சில நன்மையான விஷயங்கள் உங்களைத் தேடி வரும். குடும்ப உறவுகளை கவனமாகக் கையாள வேண்டியது அவசியம். அவசரப்பட்டுப் பேசக்கூடாது.
கும்பம்
இந்த வாரம் புதிய ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. பஞ்சம ஸ்தானத்தில் உள்ள குரு தெளிவான சிந்தனையை ஏற்படுத்துவார். தனியார் உத்தியோகஸ்தர்கள் நிர்வாகம் மூலம் எதிர்பாராத ஆதாயங்களை பெறுவார்கள். பள்ளி, கல்லூரி மாணவர்கள் கணினி, பொறியியல் பாடத்தில் நல்ல மதிப்பெண் பெறுவர். குடும்ப உறவுகள் மற்றும் கணவன் மனைவி உறவுகள் இவற்றிலெல்லாம் இனிய சூழல் நிலவும். பொருளாதாரப் பிரச்னை இருக்காது. ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டு. கலைத் தொழில் ஆதாயமாக நடக்கும். பிறரை நம்பி பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். யாரிடம் பேசினாலும் ஜாக்கிரதையாக வார்த்தைகளில் கவனம் வைத்துப் பேசுங்கள். உங்கள் மீது தவறில்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். பெரியவர்களுடைய ஆசிர்வாதமும் குலதெய்வ வழிபாடும் உதவும்.
மீனம்
இந்த வாரம் தெய்வ வழிபாடுகளில் ஈடுபடுவார்கள். தன ஸ்தானத்தில் உள்ள சுக்கிரன் பேச்சில் இனிமையை கூட்டுவார். தனியார் உத்தியோகஸ்தர்கள் பொறுமையாக செயல்பட்டு உயர் அதிகாரிகள் மனதில் இடம் பிடிப்பர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் தொழில்நுட்ப பயிற்சிகளை, அரசு போட்டித் தேர்வுகளை எழுத ஆலோசனை பெறுவர். பக்தி விஷயங்கள் அதிகரிக்கும். கோயில் குளம் என்று தரிசனம் செய்யும் வாய்ப்புண்டு. பொருளாதாரப் பிரச்னைகள் சிக்கல் இல்லாமல் இருக்கும். கொடுத்த கடன்கள் வசூலாகும். தரவேண்டிய கடன்களில் ஒரு பகுதி அடைப்படும். போட்டித் தேர்வுகளில் வெற்றி கிடைக்கும். சில தவறான எண்ணங்கள் மனதில் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சுபகாரியங்களில் தடைகள் ஏற்படலாம்.
இதனையும் படியுங்கள் : சுக்கிரன் பெயர்ச்சியால் இனி இந்த ராசிகளுக்கு தொட்டது துலங்கும்!!